news

News January 11, 2025

நாளை வரலாறு படைக்குமா இந்தியா?

image

விண்வெளியில் 2 செயற்கை கோள்களை இணைக்கும் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ திட்டத்தை இஸ்ரோ நாளை செயல்படுத்த உள்ளது. அதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ- ஸ்பேடெக்ஸ் பி செயற்கை கோள்கள் 1.5 கி.மீ இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த செயல்பாடு நாளை வெற்றிகரமாக செயல்படுத்தபடுமா என நாடே எதிர்பார்த்து வருகிறது. இதில் வெற்றி பெற்றால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா நடுகளின் பட்டியலில் நாமும் இணைவோம்.

News January 11, 2025

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டி

image

EVKS இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்.5இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இத்தொகுதியில் இரண்டு முறையும் காங்., வெற்றி பெற்றதால், இந்த முறையும் தங்களுக்கே அங்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அக்கட்சி கோரி வந்தது. அதே சமயத்தில், திமுகவும் அத்தொகுதியை விடாப்பிடியாக கேட்டு வந்தது. இந்நிலையில், தற்போது ஈரோடு கிழக்கில் திமுகவே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News January 10, 2025

புதுச்சேரியில் சரக்கு விலை உயர்கிறது

image

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மலிவு விலையில் மதுபானம் வாங்கப் போகும் இடம் புதுச்சேரி தான். அந்த நிலையை மாற்றும் வகையில், அம்மாநில அரசு புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அங்கு செயல்படும் மதுபான விற்பனை நிலையங்களுக்கான கலால் வரி மற்றும் உரிம கட்டணத்தை உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதனால், புதுச்சேரியில் மது விலை அதிகரிக்கவுள்ளது.

News January 10, 2025

தவெகவில் 4 ஆண்டுகள் மட்டுமே பதவி

image

தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளை தேர்தல் மூலம் நிரப்பும் விண்ணப்பப் படிவங்களை கட்சி வழங்கி வருகிறது. அதில், கட்சிப் பதவியின் காலம் 4 ஆண்டுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை தேர்தல் மூலம் நிரப்ப கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. விஜய் வகிக்கும் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடக்குமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News January 10, 2025

நாம் தமிழருக்கு ‘புலி’ சின்னம் கொடுக்க முடியாது

image

சீமானின் நாதகவுக்கு மாநில கட்சி அந்தஸ்தை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வழங்கியது. இதையடுத்து, தங்களுக்கு உழவு செய்யும் விவசாயி சின்னம் அல்லது புலி சின்னத்தை வழங்குமாறு நாதக சார்பில் கோரப்பட்டது. ஆனால், விலங்கு என்பதால் புலி சின்னத்தையும், நாதகவின் பழைய சின்னத்தை ஒத்திருப்பதால் உழவு செய்யும் விவசாயி சின்னத்தையும் தர முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

News January 10, 2025

அதிபராகும் முன், ரிலாக்ஸ் ஆன டிரம்ப்! காரணம் இதுதான்

image

PORN நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் அளித்த வழக்கில், டொனால்ட் டிரம்பை நிபந்தனையின்றி அமெரிக்க நீதிமன்றம் விடுவித்துள்ளது. வரும் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக அவர் பதவியேற்க உள்ள நிலையில், கோர்ட் இத்தகைய தீர்ப்பை வழங்கி உள்ளது. குற்றச்சாட்டு உறுதியான போதும், டிரம்பை விடுவித்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. நடிகையுடனான தொடர்பை வெளியில் கூறாமல் இருக்க பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

News January 10, 2025

IJKவில் இணைந்தார் பவர் ஸ்டார்

image

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இன்று பாரிவேந்தரின் IJK கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று திடீரென இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இவர் ஏற்கெனவே தமாக, பாஜக, குடியரசுக் கட்சி ஆகியவற்றில் இருந்துள்ளார். 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

News January 10, 2025

பல் வலிக்கு நிரந்தர தீர்வு!

image

25 மிளகு (நன்றாக இடித்து), சிறிது பட்டையை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும்.
1 டம்ளர் அளவுக்கு நீர் சுண்டியதும் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, மேலும் 1 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
அந்த சுடுநீரில் நறுக்கி வைத்த இஞ்சி துண்டுகளை (சிறிதளவு) சேர்த்து 20 நிமிடங்கள் கழித்து குடிக்கவும்.
தொடர்ந்து 3 நாட்கள் இந்த கசாயத்தை குடித்துவர பல் வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

News January 10, 2025

இளம் பெண்ணை காதலிக்கும் 51 வயது நடிகர்

image

இன்று தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுக்கு அவருடைய காதலி செல்ஃபியுடன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். காதலி சபா ஆசாத்தின் வயது என்ன தெரியுமா? வெறும் 39. ஹ்ரித்திக் ஏற்கெனவே நடிகை சுசானா கானை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் தற்போது சபா ஆசாத்தை டேட் செய்து வருகிறார்.

News January 10, 2025

அமெரிக்கா, சிங்கப்பூருக்கா போக முடியும்? திருமா.

image

டங்ஸ்டன் திட்டத்தால் நாடு வல்லரசு ஆகும் என்றால் எங்களுக்கு அது தேவையில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், டங்ஸ்டன் திட்டத்திற்காக நிலங்களை கொடுத்துவிட்டு அனைவரும், அமெரிக்கா, சிங்கப்பூருக்கா செல்ல முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், சுற்றுச்சூழலை காக்க போராட வேண்டிய நிர்பந்தம் உள்ளதால் இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்றார்.

error: Content is protected !!