news

News December 20, 2024

புத்திசாலிங்க படம் பாக்க கூடாதா? இது புதுசா இருக்கே..

image

படங்களுக்கு நூதனமான விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பு, “நீங்கள் புத்திசாலி என்றால் உடனே வெளியேறுங்கள்” என கார்டு போட்டால் என்ன பண்ணுவீங்க? இப்படி தான் ஆரம்பிக்கிறது கன்னட நடிகர் – இயக்குனர் உபேந்திராவின் புதிய படமான UI. வித்தியாசமான முறையில் படங்களை கொடுத்து பிரபலமடைந்தவரின் மற்றுமொரு முயற்சி தான் இதுவும். படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படி போட்ட நீங்க படம் பாப்பீங்களா?

News December 20, 2024

மாதந்தோறும் மின் கட்டணம்: முதல்வர் உறுதி

image

ஒவ்வொரு மாதமும் மின்சாரம் கணக்கீடு செய்யும் முறையை அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார். ஈரோட்டில் அவர் விசைத்தறி உரிமையாளர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர்கள் மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்டு செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு முதல்வர் இவ்வாறு பதிலளித்தார்.

News December 20, 2024

உரிமை மீறல் நோட்டீஸ்.. என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

image

‘உரிமை மீறல் நோட்டீஸ்’ என்பதே பார்லிமென்ட்டில் கடந்த 2 நாட்களாக ஹாட் டாபிக். அமித் ஷா மீது காங்கிரஸும், ராகுல் மீது பாஜகவும் மாறி மாறி நோட்டீஸ் வழங்கியுள்ளனர். MP, MLAக்களுக்கு கடமைகளைச் சுதந்திரமாகச் செய்ய சிறப்பு உரிமைகள், பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. இதனை அவர்கள் மீறும் பட்சத்தில் <>Rule 187<<>> கீழ் நோட்டீஸ் கொடுத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவர். நோட்டீஸ் மீது சபாநாயகர் இறுதி முடிவெடுப்பார்.

News December 20, 2024

IND-AUS 4ஆவது டெஸ்ட்: ஆஸி., அணி அறிவிப்பு

image

IND-AUS இடையேயான 4வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸி., அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மெல்பேனில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸி., 2 மாற்றங்கள் செய்துள்ளது. காயம் காரணமாக ஹேசில்வுட் விலகினார், அதேபோல் சரியாக விளையாடாத மெக்ஸ்வீனிக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். அணி: கம்மின்ஸ் (C), அபோட், போலன்ட், கேரி, ஹெட், இங்கிலிஸ், கவாஜா, கான்ஸ்டாஸ், லபுஷேன், லியோன், மார்ஷ், ஜே, ஸ்மித், ஸ்டார்க், வெப்ஸ்டர்.

News December 20, 2024

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன?

image

ஜெனரல் பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்துக்கு, மனித தவறே காரணம் என ராணுவ நிலைக்குக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குன்னூரில் கடந்த 2021 டிச.8ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் பலியாகினர். வானிலை மாற்றத்தால் தடுமாறிய விமானி ஹெலிகாப்டரை மேகக் கூட்டத்திற்கு நடுவே செலுத்தியதால் கீழே விழுந்து நொறுங்கியதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 20, 2024

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்

image

ராகுலுக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. BJP எம்பிக்கள் வழங்கியுள்ள இந்த நோட்டீஸில், பார்லிமென்ட் வளாகத்தில் பாஜக எம்பிக்களை ராகுல் தள்ளிவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்றும் சபாநாயகரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று, அமித் ஷாவுக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கே உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

News December 20, 2024

இரண்டாவது நாளாக பற்றி எரியும் போராட்டம்

image

அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விசிகவினர் இன்று இரண்டாவது நாளாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?

News December 20, 2024

அரை மணி நேர படம் மட்டுமா? ₹30 குடுங்க போதும்

image

தியேட்டரில் எவ்வளவு நேரம் படம் பார்க்குறோமோ அதுக்கு மட்டும் பணம் கொடுத்தா போதும்னு புது திட்டத்தை PVR அறிமுகப்படுத்தியிருக்காங்க. முதல் கட்டமா குர்கான் PVRல இந்த முறை அமலாக இருக்கு. இந்த படங்களோட டிக்கெட் 10% விலை அதிகமா இருந்தாலும், உங்களுக்கு எப்போ பிடிக்கலையோ அப்போ வெளியே எழுந்து வந்து மிச்ச பணத்தை வாங்கிக்கலாம். நீங்க இந்த தியேட்டர்ல என்ன படத்தை பார்க்க விரும்புறீங்க?

News December 20, 2024

நேற்று திமுக, விசிக.. இன்னைக்கு காங்கிரஸ்!

image

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய அமித் ஷாவை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாநிலம் முழுவதும் திமுக மற்றும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் நடைபெற்ற நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2024

தங்கம் விலை ₹1,960 குறைவு

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 10 நாள்களில் சவரனுக்கு ₹1,960 குறைந்துள்ளது. கடந்த 11ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹58,280க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அது ₹56,320ஆக குறைந்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹880 குறைந்திருக்கிறது. வெள்ளியின் விலை நேற்றை விட கிராமுக்கு ₹1 குறைந்து ₹98க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!