India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா (89) காலமானார். ’இந்திய தேசிய லோக் தள்’ கட்சியின் தலைவரான அவர், நான்கு முறை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். ஏழு முறை MLAவாகவும் இருந்திருக்கிறார். இவர் முன்னாள் துணை பிரதமர் சவுத்ரி தேவி லாலின் மகன் ஆவார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 25ஆம் தேதி கூடிய பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ளது. வெள்ள பாதிப்பு, மணிப்பூர் வன்முறை, அதானி லஞ்ச குற்றச்சாட்டு உள்ளிட்ட விவகாரங்களைக் கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. அவை நடவடிக்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், ஒரு நிமிடத்திற்கு ₹2.5 லட்சம் என கூட்டம் நடந்த 20 நாட்களுக்கு ₹150 கோடி விரயமானதாகக் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தில் முதல் மற்றும் கடைசி பக்கத்தை மட்டும் படித்த ஆளுநர், இந்த முறையாவது அரசின் உரையை முழுமையாக படிப்பார் என நம்புவதாக சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
தனக்கு கணவராக வருபவரின் தகுதிகள் குறித்து நடிகை ரஷ்மிகா பகிர்ந்துள்ளார். அவர், “ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருப்பது அவசியம். இது என்னிடம் இருக்கிறது. என்னை போன்ற ஒத்த குணங்களைக் கொண்ட ஒருவர்தான் என் கணவராக வர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார். நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் MLA இவிகேஎஸ் இளங்கோவன் மறைவு மிகவும் வேதனையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மக்கள் மத்தியில் பேசிய அவர், இளங்கோவனின் இழப்பு ஈரோட்டுக்கு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டுக்கே பேரிழப்பு என்று கூறினார். முன்னதாக இளங்கோவன் மறைந்தபோது இரண்டு நாள்கள் தொடர்ந்து அவரது உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
ஓய்வை அறிவித்தபோது முன்னாள் வீரர்கள் சச்சின் மற்றும் கபில்தேவுடன் பேசியது குறித்து முன்னாள் வீரர் அஸ்வின் பதிவிட்டுள்ளார். அவர், “என்னிடம் ஸ்மார்ட் ஃபோன் இருக்கும், ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக நான் ஓய்வு பெறும் கடைசி நாளில் எனது call log இப்படி இருக்கும் என 25 வருடங்களுக்கு முன் யாராவது கூறி இருந்தால், என் இதயத்துடிப்பே நின்றிருக்கும். சச்சின் மற்றும் கபில்தேவுக்கு நன்றி!” எனக் கூறியுள்ளார்.
இயற்கை பேரிடர்களை வெல்லும் ஆட்சி திமுக உடையது எனவும் செயற்கை பேரிடர்களை உருவாக்கி மக்களை இன்னலுக்கு ஆளாக்கியது அதிமுக ஆட்சி என்றும் CM ஸ்டாலின் சாடியுள்ளார். ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மக்கள் நலனை மட்டுமே சிந்திப்பதால் திமுக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி வருவதாகக் கூறினார். தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் இபிஎஸ், வயிற்றெரிச்சலில் புலம்பி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
அஸ்வின் ஓய்வு பெற்றதையடுத்து, இந்திய அணியில் அவரின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் தமிழக ஆல்-ரவுண்டர் சுந்தர் முன்னிலையில் உள்ளார். அடுத்தபடியாக மும்பை சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கோட்டியன் உள்ளார். இவர் உள்நாட்டுப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், பேட்டிங் 40க்கு மேல் Average வைத்துள்ளார். குல்தீப்பின் பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் பேட்டிங் ஆவரேஜ் குறைவு தான்.
இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் தொடர் முழக்கங்களுக்கு இடையே மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த 25ஆம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு உள்ளிட்ட விவகாரங்களால் மக்களவையில் தொடர் அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
படங்களுக்கு நூதனமான விளம்பரங்கள் செய்வார்கள். ஆனால், படம் தொடங்குவதற்கு முன்பு, “நீங்கள் புத்திசாலி என்றால் உடனே வெளியேறுங்கள்” என கார்டு போட்டால் என்ன பண்ணுவீங்க? இப்படி தான் ஆரம்பிக்கிறது கன்னட நடிகர் – இயக்குனர் உபேந்திராவின் புதிய படமான UI. வித்தியாசமான முறையில் படங்களை கொடுத்து பிரபலமடைந்தவரின் மற்றுமொரு முயற்சி தான் இதுவும். படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படி போட்ட நீங்க படம் பாப்பீங்களா?
Sorry, no posts matched your criteria.