news

News January 16, 2025

வருங்கால போர் முறைகள் குறித்து பேசிய ராஜ்நாத் சிங்

image

இனி வரும் காலங்களில் போர் முறைகள் என்பது கணிக்க முடியாதபடியும், ஆக்ரோஷமாகவும் இருக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். டெல்லியில் பேசிய அவர், “நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, எதிர்காலத்தின் போர் முறைகள் மாறக்கூடும். இதனால், இந்த பல்முனை சவால்களை எதிர்கொள்ளவும், திறன் மேம்பாடு & சீர்திருத்தங்கள் இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

News January 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: பிறனில் விழையாமை ▶குறள் எண்: 150 ▶குறள்: அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. ▶பொருள்: அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.

News January 16, 2025

கெத்து தினேஷின் அடுத்த படம் ‘கருப்பு பல்சர்’

image

அட்டகத்தி, லப்பர் பந்து படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டவராக மாறிய நடிகர் ‘கெத்து’ தினேஷின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ‘கருப்பு பல்சர்’ என்ற இப்படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்ட படக்குழுவினர் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர். இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கும் இத்திரைப்படத்தை யஷோ நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக இன்பராஜ் ராஜேந்திரன் இப்படத்தில் இணைந்துள்ளனர்.

News January 16, 2025

ரோஹித் விளையாடுவாரா மாட்டாரா?

image

ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணி சார்பில் ரோஹித் ஷர்மா விளையாடுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள J&K அணிக்கு எதிரான போட்டிக்கான, அணி வீரர்களின் பட்டியில் 20ஆம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், ரோஹித் மும்பை அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

News January 16, 2025

இன்றைய (ஜன. 16) நல்ல நேரம்

image

▶ஜனவரி 16 ▶தை- 03 ▶கிழமை: வியாழன் ▶ நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM ▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:30 AM – 07:30 PM ▶குளிகை: 09:00 AM – 10:30 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶நட்சத்திரம்: ஆயில்யம் ▶சந்திராஷ்டமம்: பூராடம்.

News January 16, 2025

சங்கு முழங்கி கோயிலை திறந்து வைத்த பிரதமர்

image

மகாராஷ்டிராவில் ஆசியாவின் 2ஆவது மிகப்பெரிய இஸ்கான் கோயிலை பிரதமர் மோடி சங்கு முழங்கி திறந்து வைத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கோயிலை திறந்து வைத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கான புனித மையமாக இக்கோயில் திகழும் என்று நம்புவதாக கூறி, இந்த சிறப்பு மிக்க பணிகளைச் செய்ததற்காக இஸ்கான் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

News January 16, 2025

கோர யுத்தம் முடிவுக்கு வருகிறது

image

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு, பாலஸ்தீன கைதிகளை பரிமாறிக் கொள்வதற்கும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 15 மாதங்களாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் பின்னணியில், எகிப்து மற்றும் கத்தார் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளனர்.

News January 16, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (ஜன. 16) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.

News January 16, 2025

படங்களுக்கு திரும்புகிறாரா VJS? புது அப்டேட்!

image

விஜய் சேதுபதியின் ACE படத்தின் அப்டேட் நாளை 6 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. VJS, யோகி பாபு, ருக்மிணி நடிக்கும் இந்த படத்தை ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ இயக்குநர் ஆறுமுககுமார் இயக்குகிறார். மகாராஜா வெற்றிக்கு பின் VJS, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இப்போது நிகழ்ச்சி முடியவுள்ள நிலையில், இனி படங்களில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Come Back, VJS!

News January 16, 2025

கம்ப்யூட்டர் டூ டெக்ஸ்ட் புக்ஸ்; ஸ்வீடனின் இந்த முடிவு ஏன்?

image

ஸ்வீடன் 2009இல் டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகப்படுத்தியது. 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட புத்தகங்களுக்கே திரும்பியுள்ளது. டிஜிட்டல் ஸ்கிரீனில் பயில்வது, மாணவர்களின் எழுதும் படிக்கும் திறனை குறைப்பதோடு, கவன சிதறல், கண் பாதிப்பு, நினைவுத்திறன் குறைபாட்டை ஏற்படுத்துகிறதாம். ஆனால் டிஜிட்டலை முற்றிலும் கைவிடாமல் ஆரோக்கியமாக பயன்படுத்த திட்டமிடுகிறார்கள். இந்திய அரசும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

error: Content is protected !!