India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர், <<15167314>>நடிகர் சயிப் அலி கானை கத்தியால் குத்தியதில்<<>>, அவர் படுகாயம் அடைந்துள்ளார். பாலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரித்த போலீஸ், அவரது வீட்டில் வேலை செய்துவரும் 3 பேரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடு மிகுந்த அபார்ட்மெண்ட்டில் 12-வது மாடிக்கு வந்து தாக்கிய நபர் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது.
நாமக்கல் முன்னாள் MP பி.ஆர்.சுந்தரம் மறைவை அறிந்து மிகவும் வருத்தமுற்றதாக CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுதந்தரம், சிறப்பாக மக்கள் பணியாற்றியவர் என்று புகழஞ்சலி செலுத்தினார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக செயல்பட்டு வந்த அவர், உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அதிமுக நிர்வாகி தீவைத்து எரித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதி கிளை பொருளாளராக இருந்தவர் கதிர்காமன். அவர் எம். விரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஒரு பெரிய கூட்டமே இந்த அறிவிப்பிற்காக வெயிட்டிங்கில் இருக்கிறது. இன்று மாலை சரியாக 6:40 மணிக்கு அஜித்குமாரின் ‘விடாமுயற்சி’ பட ட்ரெய்லர் வெளியாகிறது. பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. நேற்றிலிருந்தே ‘விடாமுயற்சி’ தான் எக்ஸ் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.
அதிமுக நிறுவனத் தலைவர் MGR 108வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சித் தொண்டர்களுக்கு EPS கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆர்வத்தோடு தொண்டாற்றுவோம், ADMKவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என்று கூறிய அவர், MGR, ஜெயலலிதா ஆட்சியை மலரச் செய்யவும் என்றும் கேட்டுக்கொண்டார். அத்துடன், ஜனநாயகத்தை சீர்குலைக்க அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அதனை தவிடுபொடியாக்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பர்களாக வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் எனப்படுகிறது. விஜய் ஹசாரே தொடரில் சஞ்சு விளையாடாததால் வாய்ப்பு மறுக்கப்படலாம் என்றும், பண்ட், ஜுரேலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இன்னும் சில நாட்களில் சாம்பியன்ஸ் ட்ராபிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிடும்.
பணத்திற்காக பெற்ற மகளை பெற்றோரே பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது. 10ம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெற்றோர், அதனை வீடியோவாக பதிவிட்டு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார், மகளை நாசப்படுத்திய தாய், தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமான வரிவிதிப்பில் பழைய வரி, புதிய வரி என 2 வரிவிதிப்பு முறை கையாளப்படுகிறது. இதில் புதிய முறையில் பல சலுகை இருப்பதால், 72% மாத சம்பளதாரர்கள் அதையே தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில், புதிய வரிவிதிப்பை ஊக்குவிக்க, பழைய முறையை படிப்படியாக ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பை பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
<<15167627>>சயிப் அலிகான்<<>> கத்திக்குத்தில் காயம்பட்டு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை குத்தியது யார் எனத் தெரியாத நிலையில், சிசிடிவி பதிவை கைப்பற்றி பாேலீசார் ஆய்வு செய்துள்ளனர். அதில் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்படும் நேரத்தில் யாரும் வீட்டுக்குள் செல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே வீட்டுக்குள் இருந்த யாரோ ஒருவர் தான் அவரை குத்தியிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக ISRO அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை இணைக்கும் தொழில் நுட்பத்தை அறிந்த 4வது நாடு என்கிற பெருமையை பெறுகிறது இந்தியா. SpaDeX A, SpaDeX B ஆகிய 2 விண்கலன்களும் PSLV C-60 ராக்கெட் மூலமாக கடந்த டிச.30ம் தேதி ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. தொடர்ந்து 4 முறையாக சோதனை மேற்கொண்டு இன்று வரலாறு படைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.