news

News December 21, 2024

அண்ணாமலை விடுதலை

image

கோவையில் தடையை மீறி பேரணியாக சென்று கைதான, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றிரவு விடுவிக்கப்பட்டார். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்துக்கு காவல்துறை மறைமுகமாக அனுமதி கொடுத்ததாக கூறி பாஜகவினரும், இந்து அமைப்புகளும் கோவை காந்திபுரத்தில் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்கள், இரவு தாமதமாக விடுவிக்கப்பட்டனர்.

News December 21, 2024

4,000 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர்

image

தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் 4,000 பேராசியர்கள் நியமனம் செய்யப்பட் உள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார். உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குவதாக குறிப்பிட்ட அவர், இதனை சீர்குலைத்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநர் பல்வேறு இடையூறுகளை செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

News December 21, 2024

ITR தாக்கலுக்கு இன்னும் 10 நாள்களே அவகாசம்

image

ITR தாக்கல் செய்யாதவர்கள் கணக்கை தாக்கல் செய்யவும், ஏதேனும் தவறு செய்தவர்கள் அதனை சரிசெய்யவும் இன்னும் 10 நாள்களே அவகாசம் உள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முதலில் ஜூலை 31 வரை அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. தாமதமாக கணக்கு தாக்கல் செய்தால், பிரிவு 234F கீழ் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 21, 2024

உள்ளாட்சித் தேர்தல் இருக்கா இல்லையா?

image

2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டோருக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் 5ஆம் தேதி நிறைவடைகிறது. அதற்கு தேர்தல் நடத்த 45 நாள்களுக்கு முன்பே அறிவிப்பாணை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாததால், தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்று தெரிகிறது. வரும் 5ஆம் தேதிக்குள் தனி அதிகாரிகளை அரசு நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.

News December 21, 2024

SUNDAY கிச்சன் டிப்ஸ்

image

*சிறிது நெய்யில் கடுகு, 5 மிளகு சேர்த்து தாளித்தால் ரசம் வாசனை தூக்கும்.
*உளுத்தம் பருப்புடன் 6 முந்திரி சேர்த்து அரைத்து வடை செய்தால், மிருதுவாக இருக்கும்.
*அரை கப் சிறு பயிறு, கால் கப் வேர்க்கடலை சேர்த்து அடை மாவு அரைத்தால் சாப்பிட ருசியாக இருக்கும்.
*புளித்த தயிருடன் அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், தயிரில் இனிப்பு சேர்ந்து புளிக்காமல் பாதுகாக்கும்.

News December 21, 2024

பெங்களூருவில் தமிழ் புத்தகத் திருவிழா

image

பெங்களூருவில் 3ஆவது தமிழ் புத்தகத் திருவிழாவை, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தொடங்கி வைத்தார். சிவாஜிநகர் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி டிச.29ஆம் தேதி வரை நடைபெறும். நாள்தோறும் மாலையில் புத்தக வெளியீடு, கருத்தரங்கம், பட்டிமன்றம் போன்ற இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News December 21, 2024

மின்சாரம் திருடிய MP: ₹1.91 கோடி அபராதம்

image

உ.பியை சேர்ந்த சமாஜ்வாதி MP ஜியா உர் ரகுமானுக்கு, ₹1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சம்பல் தொகுதியில் சில நாள்களாக அதிரடி ஆய்வு நடந்து வருகிறது. அந்த வகையில் ரகுமான் வீட்டில் நடந்த சோதனையில், 2 மின் இணைப்பு மீட்டர்கள் 6 மாதங்களாக ஓடாதது தெரியவந்தது. மேலும் அதன் மீட்டர் சீல்களும் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்த அதிகாரிகள், வீட்டின் மின் இணைப்பு துண்டித்தனர்.

News December 21, 2024

பாகற்காயில் ஒளிந்து கிடக்கும் நன்மைகள்

image

அன்றாடம் உணவில் பாகற்காயை சேர்ப்பதால் கிடைக்கும் எல்லையில்லா நன்மைகள்.
*புற்றுநோயை எதிர்த்து போராடும்.
*இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும்.
*இரத்த சோகையை தடுக்கும்.
*கல்லீரல் மற்றும் டிடாக்ஸ் நன்மைகள்.
*தோல் மற்றும் முடி ஆரோக்கியம் மேம்படும்.
குறிப்பு: பாகற்காயை அதிகளவில் சாப்பிட்டால் வயிறு கோளாறு உண்டாகும்.
கர்ப்பிணி பெண்கள் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே பாகற்காய் சாப்பிட வேண்டும்.

News December 21, 2024

ஜனநாயகம் புதைக்கப்படுகிறது: செல்வப்பெருந்தகை

image

நாடாளுமன்ற ஜனநாயகம் நாள்தோறும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருவதாக செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். ஆரோக்கியமான விவாதங்கள், கருத்து மோதல்கள் நடப்பதற்கு பதிலாக, கார்கே, ராகுல் ஆகியோர் வன்முறை நோக்கத்துடன் பாஜகவினர் தாக்க முற்பட்ட குற்றஞ்சாட்டிய அவர், இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்டார்.

News December 21, 2024

9 ஹார்பர்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு 370 KM தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, அடுத்த 24 Hrsஇல் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

error: Content is protected !!