news

News December 21, 2024

துல்கரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

image

துல்கர் சல்மானின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைகிறார். வில்லத்தனமான நடிப்பில் வெரைட்டி காட்டும் எஸ்.ஜே.சூர்யா தெலுங்கில் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் வில்லனாக நடித்தார். கேம் சேஞ்சர், LIK, வீரதீர சூரன் ஆகிய படங்களை முடித்துவிட்டு அடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். முன்னதாக பஹத் பாசில் படம். இப்போது துல்கரின் படம். இதனை RDX பட இயக்குநர் நகாஸ் ஹிதாயத் இயக்குகிறார்.

News December 21, 2024

‘மனம் விட்டு பேசுங்கள்’ ஜெயம் ரவி, ஆர்த்திக்கு அறிவுரை

image

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் நேரில் ஆஜராகினர். விசாரணைக்கு ஆஜரான மத்தியஸ்தர், வழக்கில் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என கருத்து தெரிவித்தார். இதையடுத்து, தம்பதி இருவரும் மனம் விட்டு பேச அறிவுறுத்திய நீதிமன்றம், வழக்கை ஜன.18ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

News December 21, 2024

பாகுபலியை சாய்த்த மகாராஜா

image

2024ல் தமிழில் சிறந்த படங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் விஜய் சேதுபதியின் மகாராஜா இந்தியாவில் சுமார் ₹100 கோடி வசூலித்துள்ளது. சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தற்போது வரை ₹85.75 கோடியை வசூலித்துள்ளது. சீனாவில் வெளியான தென்னிந்திய படங்களில் பாகுபலி 2 படத்தின் சாதனையை (₹80.50) மிஞ்சி அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் மகாராஜா பெற்றுள்ளது.

News December 21, 2024

ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட்

image

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் இயக்குனராக உள்ள நிறுவனத்தில், ஊழியர்களின் PF கணக்கில் ₹23 லட்சத்தை டெபாசிட் செய்யாமல் மோசடி செய்ததாக ஓய்வூதிய நிதி ஆணையர் போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் பேரில், அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

News December 21, 2024

பிக்பாஸ் தமிழ்: இந்த வாரமும் டபுள் Eviction?

image

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 தற்போது 80வது நாளை நெருங்கி விட்டது. கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு வாரத்திலும் இருவர் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யாரெல்லாம் வெளியேறப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. மற்றொருவர் வெளியேற்றப்படுவார் எனக் கூறப்படும் நிலையில், அதில் ரஞ்சித் பெயர் அதிகமாக அடிபடுகிறது. ஆனால், அது குறித்து தகவல் பெரிதாக வெளிவரவில்லை.

News December 21, 2024

மாணவர்களுக்கான உணவு மானியம் ₹1,400ஆக உயர்வு

image

விடுதியில் தங்கிப் பயிலும் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மாணாக்கர்களுக்கான உணவு மானியத்தை அரசு உயர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களின் மானியம் ₹1,000லிருந்து, ₹1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான மானியம் ₹1,100லிருந்து ₹1,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அளவில் இத்துறையின் கீழ் 1,453 பள்ளி, கல்லுாரி விடுதிகள் உள்ளன. இதில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படிக்கின்றனர்.

News December 21, 2024

என்னாது ஃபிடல் காஸ்ட்ரோ சீமானோட தம்பியா?

image

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஃபிடல் காஸ்ட்ரோவை சீமான் ‘தம்பி’ என்று கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. கியூப புரட்சியாளரான ஃபிடல் காஸ்ட்ரோ 49 ஆண்டுகாலம் அந்நாட்டை ஆண்டு 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார். உலக கம்யூனிச தலைவர்கள் காஸ்ட்ரோவை முன்மாதிரியாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீமானின் பேச்சு சமூக வலைதளங்களில் கேலிப் பொருளாகியிருக்கிறது.

News December 21, 2024

பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது

image

ஜெய்ப்பூர் தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை பெட்ரோல் டேங்கர் லாரி மற்ற வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதியதில் அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News December 21, 2024

இதையும் விட்டு வைக்காத அம்பானி

image

ரிலையன்ஸ் கால் வைக்காத துறையே இந்தியாவில் இல்லை எனலாம். விளையாட்டும் அதில் விதிவிலக்கல்ல. பணம் கொழிக்கும் ஐபிஎல், ஐசிஎல் அணிகளை வைத்துள்ள ரிலையன்ஸ், அடுத்து MMA-விலும் கால்பதிக்கப் போகிறது. அந்த வகையில் அதிக வியூவர்ஸ் கொண்ட இந்த விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கில், முன்னாள் உலக சாம்பியன் கானர் மெக்ரீகர்- யூடியூபர் லோகன் பால் மோதும் போட்டியை இந்தியாவில் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News December 21, 2024

திமுக எம்.பி.க்களுக்கு CM ஸ்டாலின் பாராட்டு

image

தமிழ்நாட்டு மக்களின் குரலை வீறுகொண்ட வீரர்களாக மக்களவையில் DMK M.Pக்கள் முழங்கியதாக CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். TNன் நலனுக்காக குரல் கொடுத்து, மாநில உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பி கவனத்தை ஈர்த்த DMK M.Pக்களின் செயல்பாடுகளைப் பார்த்து, நாடே வியந்து கொண்டிருப்பதாகவும் புகழ்ந்துள்ளார். மேலும், மற்ற மாநில MPக்களுக்கு முன்னோடிகளாக அவர்கள் செயல்படுவதைப் பார்த்து தான் மகிழ்வதாகவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!