news

News December 21, 2024

கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநர்!

image

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர ED-க்கு டெல்லி துணை நிலை ஆளுநர் V.K.சக்சேனா அனுமதி அளித்துள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டம் 2002இன் கீழ் கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி சக்சேனாவுக்கு ED கடிதம் எழுதியிருந்தது. புதிய மதுபானக் கொள்கையை வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் மிகப்பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக ED குற்றஞ்சாட்டி இருந்தது கவனிக்கத்தக்கது.

News December 21, 2024

நவம்பர் மாதத்தின் ஃபேமஸ் நடிகர் இவர் தானா?

image

ORMAX மீடியா ஒவ்வொரு மாதமும் நாட்டில் பிரபலமான நடிகர்களின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி நவம்பரில் மிகவும் பிரபலமான நடிகராக பிரபாஸ் முதல் இடத்தில் உள்ளார். விஜய் 2ஆம் இடத்திலும், அஜித் 6வது இடத்திலும், சூர்யா 8வது இடத்திலும் இருக்கிறார்கள். பிரபலமான நடிகையாக பட்டியலில் சமந்தா முதல் இடமும், அவரை தொடர்ந்து ஆல்யா பட், நயன்தாரா, சாய் பல்லவி, தீபிகா படுகோன், த்ரிஷா உள்ளனர். உங்க ஃபேவரிட் யார்?

News December 21, 2024

நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் காங்கிரஸ்

image

மத்திய அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கர் குறித்து தெரிவித்த கருத்தை கண்டித்து வரும் 24 ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பாபாசாகேப் அம்பேத்கர் சம்மான் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டன பேரணி நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

News December 21, 2024

‘சார்பட்டா-2’ குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் ஆர்யா

image

பா.ரஞ்சித் இயக்கும் ‘சார்பட்டா பரம்பரை-2’ படத்தின் படப்பிடிப்பு 2025 ஏப்ரலில் தொடங்கும் என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “சார்பட்டா-2 படத்தின் கதை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார். குத்துச்சண்டையை மையப்படுத்தி, 2021ஆம் ஆண்டு நேரடியாக OTTஇல் வெளியான சார்பட்டா பரம்பரை முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

News December 21, 2024

மகாலட்சுமிக்காக மஞ்சு வாரியர் நன்றி

image

‘விடுதலை 2’ பட ஷூட்டிங் போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ‘மகாலட்சுமி’ கேரக்டர் வழங்கியதற்காக வெற்றிமாறனுக்கு மஞ்சு வாரியர் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று வெளியான இப்படம், கம்யூனிசம், திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய சிந்தாந்தங்களை பற்றி விரிவாக பேசுகிறது. சமகாலத்தில் பேச வேண்டிய அரசியல் என ஒரு தரப்பு ரசிகர்களும், அரசியல் ஓவர்டோஸ் ஆனதாக மற்றொரு தரப்பு ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

News December 21, 2024

தமிழகத்திற்கு ₹34,827 கோடி நிதி கேட்ட தங்கம் தென்னரசு

image

மத்திய அரசின் வரவு-செலவு திட்டத்திற்கான முன்னோட்டம் குறித்து ராஜஸ்தானில் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழக அரசு சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ₹34,827 கோடி நிதி கேட்டுள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்காக ₹26,000 கோடி, கல்வித் திட்டத்திற்கு ₹2,152 கோடி, ஃபெஞ்சல் புயல் நிவாரணத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ₹6,675 கோடியை விடுவிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

News December 21, 2024

அரசு பள்ளி மாணவர்களுக்கு இ-மெயில் வசதி

image

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களை ஆசிரியர்கள், வாட்ஸ் அப் குழுக்கள், இமெயில் மூலம் தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அத்தகைய வசதி இல்லை. இதையடுத்து, மாணவர்களை ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இ-மெயில் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த வசதியை உருவாக்கி தர ஆணையிடப்பட்டுள்ளது.

News December 21, 2024

பாப்கார்னுக்கும் வருகிறது GST?

image

Second Hand கார்களுக்கான GST வரியை 12%ல் இருந்து 18% ஆக உயர்த்த GST கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உப்பு, கார வகை ரெடிமேட் பாப்கார்னுக்கு 5%, பேக்கிங்கில் இருக்கும் பாப்கார்னுக்கு 12% மற்றும் இனிப்பான Caramel வகை பாப்கார்னுக்கு 18% GST விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 50% Fly Ash இருக்கும் கான்கிரீட் பிளாக்குகளுக்கான GST 18% இருந்து 12ஆக குறைகிறது.

News December 21, 2024

நயன்தாராவுக்கு பணத் திமிர், அகங்காரம்.. சுசித்ரா தாக்கு

image

நயன்தாராவுக்கு பணத் திமிர், அகங்காரம் பிடித்திருப்பதாக பாடகி சுசித்ரா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, தனுஷ் விவகாரத்தில் உண்மையை சொல்லியதால் நயன்தாராவை தாம் பாராட்டியதாகவும், மற்றபடி வேறு இல்லை என்றார். தனுஷ், நயன்தாரா மோதல், 2 பணக்காரர்கள் இடையேயான மோதல் என்ற சுசித்ரா, டிவிக்களுக்கு நயன் அளித்த பேட்டி, அவரின் அகங்காரத்தை வெளிப்படுத்துகிறது என்று சாடினார்.

News December 21, 2024

சிறப்பு காலண்டரால் வெடித்தது அடுத்த சர்ச்சை…

image

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு காலண்டரை, மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், காந்தி & அம்பேத்கர் ஆகியோரின் படம் & பெயர் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்க்கட்சி M.P.,க்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி., இரு தலைசிறந்த நபர்களின் படமில்லாத காலண்டரை திரும்ப பெறும்படியும், மன்னிப்பு கோரும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!