India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீர்த்தி சுரேஷின் தல பொங்கல் கொண்டாட்டத்தில் விஜய் பங்கேற்றது பேசுபொருளாகியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காத அரசியல் கட்சி தலைவர் விஜய்க்கு, கீர்த்தியின் தல பொங்கலில் மட்டும் கலந்து கொள்ள நேரம் இருக்கிறதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணத்தில் பங்கேற்றதை கூட ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறிவருகின்றனர்.
ஆளுநர் ரவிக்கு எதிராக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. TNல் உள்ள 6 பல்கலை.யில் துணைவேந்தர் காலியிடங்களை நிரப்ப அரசு தேடுதல் குழுவை நியமித்தது. ஆனால், UGC தலைவரை தேடுதல் குழுவில் இணைக்க ஆளுநர் வலியுறுத்தினார். இது அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக உள்ளதாக கூறி, ஏற்கனவே ஆளுநர் அதிகாரம் குறித்த விவகாரத்தில் இதையும் சேர்த்து உரிய உத்தரவை பிறப்பிக்க அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது.
நீண்ட நேரம் உட்கார்ந்தே இருக்கும் பழக்கம் இதய-ரத்தநாள நோய்களுக்கு காரணமாகலாம் என்று அமெரிக்க டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். தினசரி 6 மணிநேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு, இதய-ரத்தநாள நோய்கள் அதிகம் ஏற்படுவதும், குறைவான நேரம் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு நோய் ஆபத்து குறைவாக இருப்பதும் ஆய்வில் உறுதியானது. ஆகவே, ஒவ்வொரு 20 நிமிடத்துக்கு ஒருமுறை, எழுந்து சிறிது தூரம் நடந்து பழகுங்கள்.
நடப்பு நிதியாண்டின் 3ஆவது காலாண்டின் நிதியியல் முடிவுகளை ஜியோ வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பரை ஒப்பிடுகையில் (₹5,447 கோடி), 26% அதிகரித்து ₹6,861 கோடி வருவாயை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. மேலும், ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) கடந்த ஆண்டை காட்டிலும் 12% அதிகரித்து ₹203 ஆக உயர்ந்துள்ளது. கட்டண உயர்வுகள், அதிக லாபம் தரக்கூடிய கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
பாபா, இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையங்கள் உள்ளிட்ட 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை USA நீக்கியுள்ளது. கடந்த 2005ல் இருநாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், ஏற்றுமதி, அங்கீகாரம் வழங்குவதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போதைய நடவடிக்கை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் படம் கைவிட்டு போனது பற்றி இயக்குநர் மகிழ்திருமேனி பகிர்ந்து கொண்டுள்ளார். விஜய்க்கு 3 கதைகளை சொன்னதாகவும், அதில் ஒரு கதையை படமாக்க நினைக்கையில், ‘கழகத் தலைவன்’ படத்தை முடித்துவிட்டு போகும்படி உதயநிதி கூறியதால், அந்த படம் டிராப் ஆனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் அந்த 3 கதைகள் அவருக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் விஜய் தான் தனது கடைசி படத்தை அறிவித்துவிட்டாரே.
இந்தியாவைச் சேர்ந்த பத்ரேஷ்குமார் (34) பற்றி தகவல் சொன்னால் ₹2.1 வழங்குவதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI அறிவித்துள்ளது. அமெரிக்காவில் வசித்த போது தனது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடியதால், FBIன் தேடப்படும் டாப் 10 குற்றவாளிகளில் இவரும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்கா, கனடா, இந்தியா என எங்கு வேண்டுமானாலும் பதுங்கியிருக்கலாம் என்பதால் பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் மேற்கொண்டு வந்த திட்டங்கள் நிறைவடைந்த நிலையில், நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளதாக அதன் நிறுவனர் நாதன் ஆண்டர்சன் கூறியுள்ளார். அதானி மற்றும் செபி தலைவர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக இந்நிறுவனம் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
*அழகு உங்கள் கவனத்தை ஈர்க்கும். ஆளுமை உங்கள் இதயத்தை ஈர்க்கும். *மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். *எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவுக்கு பணக்காரன் இல்லை. *பெண்கள் நேசிக்கப்படுவதற்காகவே படைக்கப்பட்டார்கள், புரிந்து கொள்ளப்படுவதற்காக அல்ல. *கசப்பான சோதனைகள் என நமக்குத் தோன்றுவதெல்லாம் மாறுவேடமிட்ட ஆசீர்வாதங்கள். *நன்றாக வாழ்வதே சிறந்த பழிவாங்கல்.
இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் மோடி சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார். செமிகண்டக்டர், டிஜிட்டல்மயம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மோடி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, சிங்கப்பூர் அதிபருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.