India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசியலின் அதிசயமானார் MGR என தவெக தலைவர் விஜய் புகழ்ந்து கூறியுள்ளார். MGRன் 108வது பிறந்தநாளையொட்டி அவர் தனது X பதிவில், அளவற்ற வறுமையைத் தாண்டி, கூத்தாடி என்ற கூற்றை உடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றின் மையமானதாகவும், அசைக்க முடியாத வெற்றியாளரானதாகவும் கூறிய அவர், இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம் எனப் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-ஆவது ஊதியக் கமிஷனின் பரிந்துரை Fitment factor அடிப்படையிலேயே கணக்கிடப்படும் எனக் கூறப்படுகிறது. தற்போதைய பேசிக் சம்பளத்தை Fitment factor எண்ணால் (2.28) பெருக்கினால், ஊதிய உயர்வை கணக்கிடலாம். உதாரணமாக, லெவல் 1 பணியாளரின் சம்பளம் ரூ.18,000 எனில், அவரின் புதிய சம்பளம் ரூ.18,000 X 2.8= ரூ.40,944 ஆக (Appr. ரூ.41,000) இருக்கும். DA 70% வரை உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
சயிப் அலி கானை கத்தியால் குத்தியவரை போலீசாரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அவரை பாந்த்ரா காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வீட்டிற்குள் புகுந்து பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்த நபரை தடுத்தபோது சயிப் அலி கான் மீது தாக்குதலில் ஈடுபட்ட அவர், கழுத்து, முதுகெலும்பில் கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளார். தற்போது சயிப் அலி கான் ஹாஸ்பிட்டலில் சிகிச்சையில் உள்ளார்.
ஆஸி.யில் சோஷியல் ஊடகங்களில் பிரபலமாவதற்கும், டொனேஷன் பெறுவதற்கும் தனது ஒரு வயது குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து வீடியோ பதிவிட்ட கொடூரத் தாயை போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் அந்த பெண்மணி இதுவரை ₹19.86 லட்சம் வசூல் செய்துள்ளார். குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானதால், ஹாஸ்பிட்டலுக்குச் சென்ற போது, சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தெரிவிக்கவே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
மகா கும்பமேளாவுக்கு செல்வோருக்காக போன்பே, ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனங்கள் பிரத்யேக காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. பேருந்து, ரயிலில் செல்வோருக்கான பிரீமியம் ₹59, விமானத்தில் செல்வோருக்கான பிரீமியம் ₹99 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணத் தேதிகளில் ₹50,000 மருத்துவக் காப்பீடு, ₹1 லட்சம் ஆயுள் காப்பீடு கிடைக்கும். விமானத்தில் பயணிக்கும்போது உடைமைகளை தவறவிட்டால் ₹5,000 வழங்கப்படும்.
நில அபகரிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நில அபகரிப்பு தடுப்பு பிரிவு விசாரிக்கும் வழக்கு குறித்து அவர் வெளியிட்ட வீடியோவுக்காக, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைது செய்தனர். இதில், ஜாமின் கோரிய வழக்கு விசாரணையில், சவுக்கு சங்கர் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வருவதாக காவல்துறை வாதிட்டது. எனினும், ஐகோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனால், இடைத்தேர்தல் களத்தில் திமுக Vs நாதக என்ற சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம், திமுக எதிர்ப்பு வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வாய்ப்பு நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ளது. தேர்தலை புறக்கணித்த கட்சிகளின் தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அமிதாப் பச்சன் KBC போட்டியில் கிரிக்கெட் குறித்து மற்றொரு கேள்வி கேட்டார். இது ₹3.20 லட்சத்திற்கான கேள்வியாகும். நவ. 2024ல் டெஸ்ட் போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த மெக்குலமின் சாதனையை முறியடித்தவர் யார்? Options: A.யஷஸ்வி ஜெய்ஸ்வால் B.இஷான் கிஷன் C.சர்பராஸ் கான் D.சுப்மன் கில். போட்டியாளர் தவறான பதிலை சொல்லி வெளியேறினார். உங்களுக்கு பதில் தெரிஞ்சா கமெண்ட் பண்ணுங்க.
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷின் ‘ரெபல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மமிதா பைஜு, விஜய்யின் ‘தளபதி 69’ படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
எதையெதையோ திருடி, கடைசில கிட்னியை திருடுற வரைக்கும் வந்துட்டாங்க. பெண் ஒருத்தரோட கிட்னியை டாக்டர்களே லவட்டிய பரிதாப சம்பவம்தான் மீரட் நகர்ல நடந்திருக்கு. 2017ஆம் ஆண்டு அவங்களுக்கு ஏதோ ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கு. இப்போ, சமீபத்துல எதுக்கோ ஸ்கேன் எடுத்து பார்த்தப்போதான் கிட்னியை காணோமாம். அவங்க வேற எங்கயும் அறுவை சிகிச்சை செய்யாதனால அந்த ஹாஸ்பிட்டல்தான் திருடியிருக்குனு கண்டு பிடிச்சுட்டாங்க.
Sorry, no posts matched your criteria.