India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் இடம்பெற்ற அணி மூன்றாவது இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்த போட்டிக்கு அஜித் தயாராகிவிட்டார். நாளை போர்ச்சுகல் நாட்டில் நடைபெறும் ஐரோப்பிய தொடர் 2025 கார் ரேசில் அஜித் பங்கேற்கவுள்ளார். இதற்காக அந்நாட்டிற்கு சென்று அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அஜித் இத்தொடரிலும் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சீமான் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று பெரியார், அம்பேத்கர் அமைப்பினர் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். அவர், ஜாதி, மொழி அடிப்படையில் பிரிவினை பேசி கலவரம் செய்ய முயல்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை கைப்பற்ற முயற்சிக்கும் பாஜக, வியூகத்தை பலமாக வகுத்து வருகிறது. அந்த வகையில், தேர்தல் வாக்குறுதிகளை ஆயுதமாக ஏந்த முடிவெடுத்துள்ளது. அதன்படி, இலவச பயணத் திட்டத்தில் பெண்களை போன்று மாணவர்கள் மற்றும் முதியவர்களை சேர்க்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வீடுகளுக்கு 300 யூனிட், கோயில்களுக்கு 500 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.
பாக்., ex.பிரதமர் இம்ரான் கான், அவர் மனைவி புஷ்ரா பீவி இருவரும் குற்றவாளிகள் என பாக்., நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் பிரதமராக இருந்தபோது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்தது, புஷ்ராவின் அல் காதிர் டிரஸ்டுக்கு நிலங்கள் ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கில், அபராதத்துடன் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு, மனைவி புஷ்ராவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்ரான் ஏற்கெனவே சிறையில் உள்ளார்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை (18.01.2025) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. மேலும், வரும் 19ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நடுத்தர குடும்பஸ்தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது குடும்பஸ்தன் படம். படத்தின் நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஹீரோ மணிகண்டனிடம் அஜித்குமார் குறித்து கேள்வி எழுப்பிய போது, “அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன்” என்றார். மேலும் படத்தில் “துக்கம், இன்பம் அனைத்தும் இருக்கும் என்றும் சந்தோஷமாகக் காமெடியாக இருக்கும்” என்றார். படம் வருகிற 24ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதையொட்டி, நாதக வேட்பாளர் சீதாலெட்சுமி இன்று காலை மனு தாக்கல் செய்தார். அவரைத்தொடர்ந்து, DMK வேட்பாளர் சந்திரகுமாரும் மனு தாக்கல் செய்தார். வேறு எந்த பெரிய கட்சிகளும் போட்டியிடாத நிலையில், இரு முனை போட்டியே ஏற்பட்டுள்ளது. நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனு வாபஸ் பெற 20ம் தேதி கடைசி நாளாகும்.
வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேராது என்று ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் கூட்டணி முறிந்ததால்தான் அதிமுக தோற்றது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்த நிலையில், வரும் தேர்தலில் அவர்கள் மீண்டும் இணையலாம் என்று பேசப்பட்டது. இதற்கு விளக்கமளித்த ஜெயக்குமார், பாஜக கூட்டணியை முறித்தது முறித்ததுதான்., அதுதான் கட்சியின் முடிவு என்றார்.
ஆளுநர் R.N.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம், சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு ஆகியவற்றுக்கு எதிராக பல மனுக்களை மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அவற்றை விசாரணைக்கு ஏற்றிருக்கும் நீதிமன்றம், விரைவில் பட்டியலிடவுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி, இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தவெக அறிவித்துவிட்டது. மேலும், பெரிய கட்சிகள் எதுவும் போட்டியிடாத நிலையில், இந்த தேர்தல் திமுக – நாதக நேரடி போட்டிக் களமாக மாறியுள்ளது. இத்தேர்தலில் தங்களுக்கு மைக் சின்ன வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் நாதக கோரிக்கை விடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.