India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், 2026 சட்டசபை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக வெற்றி பெற வேண்டும் என்றும், அதை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றிக்காக இன்றே புறப்படுவீர்; போர்ப்பரணி பாடுவீர் என தொண்டர்களுக்கு உத்தரவிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் 25 தொகுதிகளைக் கேட்டுப் பெற வேண்டும் என வன்னி அரசு கூறியுள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக இருக்கும் கூட்டணியே வெற்றிபெறும் சூழல் உருவாகியுள்ளதால் இது நமக்கான நேரம் என்று கூறியுள்ள அவர், சட்டப்பேரவையில் இரட்டை இலக்கத்தில் VCK எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். வன்னி அரசுவின் பேச்சு திமுகவுக்கு நேரடியாகக் கொடுக்கும் அழுத்தம் என பேசப்படுகிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை -2 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து பேசிய சூரி, இனி வரும் படங்களில் கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பேன் எனக் கூறினார். மேலும், நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் நடிக்க தயார் எனக் கூறிய சூரி, தனக்கு எப்போதுமே ஹீரோ சிவகார்த்திகேயன்தான் என்றார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் அமித்ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அம்பேத்கரை தரம் தாழ்ந்து, அவதூறாக பேசி, அவரது தியாகத்தை இழிவுப்படுத்தியுள்ளார் அமித்ஷா என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் நிதியை ஒதுக்காமல் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொது இடங்களில் ஏற்படும் மின் விபத்துகளால் உயிரிழப்போர் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணம் ₹5 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக TN அரசு உயர்த்தியுள்ளது. உயிா் பிழைத்தவர்களுக்கு 2 கண்கள் (அ) கை, கால்கள் இழந்தால் வழங்கப்படும் நிவாரணம் தலா ₹2 லட்சத்திலிருந்து ₹3 லட்சமாகவும், ஒரு கண் (அ) ஒரு கை, கால் இழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் தலா ₹1 லட்சத்திலிருந்து ₹1.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிடிவாரண்ட் குறித்து <<14941495>>உத்தப்பாவின் <<>> விளக்கத்தில், “2018-19ல் சில நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதால் அவற்றிற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டேன். ஆனால், தற்போது எந்த பொறுப்பிலும் இல்லை. ராஜினாமா செய்து விட்டேன். EPF குறித்து நோட்டீஸ் வந்த போதே, அதில் தொடர்பு இல்லை என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இதற்கான சட்ட நகர்வுகளை என் சட்ட ஆலோசகர் எடுப்பார்” என கூறுகிறார்.
புஷ்பா 2 படத்தை ரசிகர்களுடன் பார்க்க திரையரங்கிற்கு அல்லு அர்ஜூன்(AA) செல்ல, கூட்டம் அலைமோதி ஒரு உயிர் பிரிந்தது. கைதான AA ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். தெலங்கானா முதல்வர் சட்டமன்றத்தில் இது குறித்து கொந்தளிக்க, AA தன்னிலை விளக்கத்தை அளிக்கிறார். ஆனால், தாயை இழந்து 20 நாட்கள் நெருங்கியும் காயமடைந்த சிறுவன் இன்னும் ஆஸ்பத்திரியிலேயே உள்ளார். எதிர்பாராதது என்றாலும், அச்சிறுவனுக்கு என்ன பதில்?
13 வயதேயான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் மெகா ஏலத்தின் போதே பலரின் கவனத்தை பெற்றார். அவர் தற்போது மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தி இருக்கிறார். அவர் 13 வயது 269 நாட்களில் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் விளையாடிய இளம் வீரராக மாறியுள்ளார். நேற்று, விஜய் ஹசாரே டிராபியில், ம.பி அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக விளையாடினர். இதற்கு முன் அலி அக்பர் (14 வயது 51 நாட்கள்) வைத்திருந்தார்.
மாநில அரசுகள் வாரி வழங்கும் இலவசத் திட்டங்கள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக RBI கூறியுள்ளது. இதனால், உள்கட்டமைப்புக்கு பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு நிதி ஒதுக்கீடு செய்வது கணிசமாகக் குறைந்துள்ளதாகவும், 2018 – 19 முதல், மாநிலங்கள் வழங்கும் மானியங்கள் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அளவை விட 2.5 மடங்கு அதிகரித்து ₹4.7 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 1,036 இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ RRB இணையதளம் வழியாக சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் பணிக்கான தகுதி, வயது, தேர்வு செயல்முறையை முழுமையாக அறிந்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேறக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.