news

News December 22, 2024

கத்தரிக்காய், கொத்தமல்லி விலை சரிவு

image

கோயம்பேடு சந்தையில் நேற்று முதல்தர கத்திரிக்காய் கிலோ ரூ.70ஆகவும், 2ஆம் தர கத்திரிக்காய் ரூ.30ஆகவும் விற்கப்பட்டது. இன்று முதல் தரம் ரூ.60ஆகவும், 2ஆம் தரம் ரூ.20ஆகவும் குறைந்துள்ளது. கொத்தமல்லி கட்டு நேற்று ரூ.14 முதல் ரூ.25 வரை விற்கப்பட்டது. இன்று ரூ.2க்கு விற்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்தே சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு காய்கறி வாங்கி செல்லப்பட்டு விற்கப்படுகிறது.

News December 22, 2024

100 நாட்கள் சட்டமன்றத்தை நடத்த வேண்டும்: RB உதயகுமார்

image

100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்துவோம் என்ற வாக்குறுதியை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் R.B.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கேள்வி நேரத்தில் கூட கேள்வி கேட்பதற்கு உரிமை மறுக்கப்படுகிறது. மக்களின் குறைகளை சட்டமன்றத்திலே எடுத்து வைத்தால் தானே, அது அமைச்சர்களுடைய கவனத்திற்கு சென்று அதற்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

News December 22, 2024

Expired உணவுகள்.. FASSI எடுத்த அதிரடி முடிவு

image

காலாவதியான, திருப்பி அனுப்பப்பட்ட உணவுப் பொருள் குறித்த விவரங்களை தங்களது சோசியல் மீடியாவில் ஒவ்வொரு காலாண்டும் பதிவிட உணவு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தரச்சோதனையில் நிராகரிக்கப்பட்ட, Expired ஆன உணவுப் பொருட்களை அழித்தல் போன்ற விபரங்களை மக்கள் எளிதில் அறிந்துகொள்ள எனவும் காலாவதியான பொருள்களை மீண்டும் பேக் செய்து விற்பனை செய்வது தடுக்கப்படும் என்றும் FASSI கூறியுள்ளது.

News December 22, 2024

24, 25ஆம் தேதிகளில் கனமழை எச்சரிக்கை

image

3 மாவட்டங்களுக்கு வரும் 24, 25ஆம் தேதிகளில் வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 24, 25ஆம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

News December 22, 2024

இந்தியாவில் மனைவியை வாடகைக்கு எடுக்கும் ஆண்கள்

image

நாடு பாலின அதிகாரத்தை நோக்கி நகரும் சூழலிலும், ​​இத்தகைய மரபுகள் நிலவுகின்றன. ம.பி.யில் “தடிச்சா பிரதா” பாரம்பரியத்தில், சொந்த குடும்பமே 8 வயது சிறுமிகளையும் சந்தையில் நிற்க வைக்கிறது. பணக்கார ஆண்கள் ₹2 லட்சம் வரை கொடுத்து மனைவியை ஏலத்தில் எடுக்கிறார்கள். இதற்கு அரசு முத்திரைத் தாளையும் உபயோகிக்கிறார்கள். நிதி தேவைக்கு ஓடுபவர்கள் இதை பாரம்பரியமாக எண்ணுகிறார்கள். அநீதி என எப்போது உணருவார்கள்?

News December 22, 2024

பள்ளிகளுக்கு நாளை கடைசி நாள்

image

தமிழகத்தில் நாளை 2024ம் ஆண்டில் பள்ளிகள் செயல்படும் கடைசி நாளாகும். மெட்ரிக்குலேஷன் உட்பட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளையுடன் (டிச.23) அரையாண்டுத் தேர்வுகள் முடிவடைகின்றன. அதைத்தொடர்ந்து, 24ம் தேதி முதல் மாணவர்களுக்கு 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. பின்னர், 2025 ஜன.2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

News December 22, 2024

கை விரல் இப்படி இருக்கா? உங்கள் குணாதிசயம் இதுதான்

image

சாமுத்திரிகா சாஸ்திரப்படி, ஆட்காட்டி விரல், மோதிர விரலை விட நீளம் என்றால், எச்சூழலையும் சமாளிக்கும் பண்பு இருக்கும். அதிக கோபம் உடையவர் * ஆட்காட்டி – மோதிர விரல் ஒரே அளவு என்றால், வாழ்க்கையை திட்டமிட்டு நேர்மையாக வாழுபவர். ரகசியம் காப்பதில் கெட்டிகாரர் * மோதிர விரல், ஆட்காட்டி விரலை விட நீளம் என்றால், வெளிப்படையாக பேசுபவர். எதிர்பாலினரை ஈர்க்கும் தன்மை கொண்டவர். இதில் நீங்க எந்த லிஸ்ட்டு?

News December 22, 2024

உங்க செல்போனில் இந்த ஆடியோ வருதா..!

image

காலர் டியூன் வாயிலாக <>சைபர் கிரைம் விழிப்புணர்வு <<>>வாசகத்தை டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளன. அடுத்த 3 மாதங்களுக்குத் தினந்தோறும் 8 – 10 முறை ஒலிபரப்பாகும் வகையில் டிராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இனி இந்த வாசகங்களுக்கு பிறகே, அழைப்புகள் செல்லும். நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெக்னாலஜிக்கு ஏற்ப புது புது ரூட்டில் சைபர் மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் இருந்து மக்களைக் காக்க இது நல்ல ஐடியா தான்..

News December 22, 2024

பிரதமரை எதிர்க்க இபிஎஸ்க்கு துணிவு உள்ளதா? ஸ்டாலின்

image

திமுக செயற்குழுக் கூட்டத்தில் இபிஎஸை முதல்வர் ஸ்டாலின் சரமாரியாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “டங்ஸ்டன் சுரங்க அனுமதி கொடுத்ததற்காக பாஜகவை இதுவரை இபிஎஸ் கண்டித்திருக்கிறரா? கிடையாது. பிரதமரை எதிர்க்க இபிஎஸ்க்கு துணிவு உள்ளதா? இல்லை. திமுகவை குறைகூறும் உங்களுக்கு, துரோக வரலாறை தவிர வேறு என்ன உள்ளது? நீங்கள் என்ன கதறினாலும், உங்களின் துரோகம்தான் மக்களுக்கு நினைவு வரும்” என சாடினார்.

News December 22, 2024

இனி ரேஷன் கடைகளில் இது தாராளம்.. குட் நியூஸ்

image

ரேஷன் கடைகளில் சமீபகாலமாக பச்சரிசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக, பொங்கல் பண்டிகை வருவதால் பச்சரிசி கட்டாயம் தேவை. இந்த நேரத்தில், இது கிடைக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரேஷன் கடைகளில் பச்சரிசி அதிக அளவில் விநியோகிக்கப்படும். பச்சரிசி தட்டுப்பாடு இருக்காது எனக் கூறினார்.

error: Content is protected !!