news

News January 18, 2025

ஆளுநர் காவி உடை அணியட்டும்: முரசொலி

image

திருவள்ளுவர் தினத்தன்று காவி நிறத்திலான வள்ளுவர் படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து முரசொலி நாளிதழில், வெள்ளுடையில் வீற்றிருக்கும் வள்ளுவர் படம் தான் அனைவரும் ஏற்றுக்கொண்ட படம் எனவும், அரசால் ஏற்கப்பட்ட பட வடிவமைப்புக்கு மாறான படத்துக்கு ஆளுநர் மரியாதை சூட்டியதாகவும் விமர்சித்துள்ளது. காவிப்பாசம் இருந்தால் முதலில் ஆளுநர் காவி உடை அணியட்டும் என்றும் சாடியுள்ளது.

News January 18, 2025

இந்த பழக்கங்கள் இருக்கா? உடனே மாத்திக்கோங்க…

image

இந்த பழக்கங்கள் உங்களை ஏழையாக மாற்றும் *எந்த ஒரு பொருளை பார்த்தாலும் வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் அல்லது தேவையில்லை என்றாலும் அடிக்கடி ஷாப்பிங் செல்வது *வீட்டில் உணவு இருக்கும் போதும் அடிக்கடி வெளியில் சாப்பிடுவது *புகைபிடித்தல் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகினால் கணக்கு தெரியாமலே அதிகமாக செலவிடுவோம் *மளிகை சாமானை அதிகளவில் தேவையில்லாமல் வாங்கி குவிப்பது. இப்பழக்கங்களை மாற்றுங்கள்.

News January 18, 2025

வேலை மாறினால் நீங்களே PF கணக்கை மாற்றலாம்!

image

வேலை மாறும் போது பழைய அல்லது புதிய நிறுவனத்தின் உதவியின்றி PF கணக்கை தாங்களே மாற்றிக்கொள்ளலாம் என EPFO தெரிவித்துள்ளது. UAN பெற்றுள்ள சந்தாதாரர்கள் இணையதளம் மூலம் தாங்களே விண்ணப்பித்து PF கணக்கை மாற்றிக்கொள்ளலாம். ஒரே UANல் புதிய நிறுவனம் தொடங்கிய கணக்கு உட்பட பல கணக்குகள் இருந்தாலும், அவை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால், எளிதாக விண்ணப்பித்துக் கணக்குகளை ஒன்றிணைக்கலாம் எனக் கூறியுள்ளது.

News January 18, 2025

வங்கியில் மாதம் ₹93,960 சம்பளம்…150 காலியிடங்கள்

image

பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) Trade Finance Officer பணிகளுக்கு 150 காலியிடங்கள் உள்ளது. எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 23 முதல் 32 வரை இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 23.1.25. ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியான நபர்களுக்கு ₹64,820 முதல் ₹93,960 வரை சம்பளம் கிடைக்கும். முழு விவரங்களை <>இந்த லிங்க் மூலம் அறியலாம்.<<>>. SHARE IT…

News January 18, 2025

150 ஆண்டுகால வழக்கத்தை தகர்த்த ஒபாமா மனைவி

image

டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 150 ஆண்டுகால பாரம்பரியத்தை அவர் உடைத்துள்ளார். புதிய அதிபர் பதவியேற்கும் போது, முன்னாள் அதிபர் குடும்பம் பங்கேற்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது. இது பாரக் ஒபாமா உடனான டைவர்ஸ் விவகாரத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்தாலும், டிரம்பின் இனவெறி மனப்பான்மை பிடிக்காததால், இதை அவர் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

News January 18, 2025

குளிர்காலத்திலும் முகம் பளபளக்க ‘4’ டிப்ஸ்

image

*உடலில் நீரிழப்பு பிரச்னை ஏற்படும்போது சருமம் வறண்டு விடும் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும். *சன் ஸ்கிரீன்: குளிரிலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால், சருமம் பளபளப்பாக இருக்கும் *வைட்டமின் சி உணவுகள்: சரும ஆரோக்கியத்திற்கு ஆரஞ்சு, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்ளவும் *அதிக வெந்நீர் குளியல் வேண்டாம்: குளிரில் அதிக வெந்நீரில் குளித்தால் சருமம் வறட்சியாகும்.

News January 18, 2025

நாட்டை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு

image

கொல்கத்தா அரசு ஹாஸ்பிட்டலில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான். 162 நாள்கள் தொடர் விசாரணை நடத்தப்பட்டு, 120 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா செல்டாக் கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி அனீர்பான் தாஸ் இன்று மதியம் தீர்ப்பை வெளியிட உள்ளார்.

News January 18, 2025

இந்தியாவிற்கு இனி வளர்ச்சி தான்: IMF

image

2025ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை IMF வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 2.7% ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், நடுத்தர வருமானம் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் 4.2%, குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் 4.6% என்ற அளவில் வளர்ச்சி அடையும் என தெரியவந்துள்ளது.

News January 18, 2025

மக்களை நம்பினால் வெற்றி: சசிகலா

image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை அதிமுக, பாஜக புறக்கணித்துள்ளன. இந்நிலையில், இடைத்தேர்தலை புறக்கணிப்பது தவறானது என சசிகலா கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் மீது நம்பிக்கை வைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திமுக அரசு வீண் செலவு செய்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் செய்ததை மக்களுக்கு புரியும் வகையில் வெள்ளை அறிக்கையாக வெளியிடவும் வலியுறுத்தியுள்ளார்.

News January 18, 2025

கடைசி விடுமுறை நாளுக்கு NO சொல்லுங்க மக்களே

image

பொங்கல் விடுமுறைக்கு அரசுப் பேருந்துகளில் மட்டும் 8.73 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பைக், கார், ரயில், விமானம் என லட்சக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர். அவர்கள் கடைசி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு திரும்பினால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும். எனவே, இன்றே ஊரைவிட்டு கிளம்புவது நல்லது. இல்லையெனில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

error: Content is protected !!