news

News January 18, 2025

தொலைந்த டெபிட் கார்டை எளிதாக ப்ளாக் செய்யலாம்..

image

நெட் பேங்கில் Log-in செய்து e-servicesஐ தேர்வு செய்யவும். அதில் Block ATM cardஐ கிளிக் செய்யவும். எந்த பேங்கின் டெபிட் கார்ட் என்பதை தேர்வு செய்தால், உங்கள் கார்டின் முதல் மற்றும் கடைசி 4 இலக்க எண்கள் காண்பிக்கப்படும். எந்த கார்ட் என்பதை உறுதிப்படுத்தினால், போனுக்கு OTP வரும். அதை பதிவிட்டு Confirm செய்தால் சேவை எண் கிடைக்கும். அந்த எண்ணை பேங்கில் கொடுத்து புதிய டெபிட் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

News January 18, 2025

6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல், மாநிலம் முழுவதும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

News January 18, 2025

RCBதான் நம்பர் 1

image

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஐபிஎல் அணி என்ற பெருமையை RCB பெற்றிருக்கிறது. இந்த அணி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த சாதனையை தக்க வைத்துள்ளது. அனைத்து சோசியல் மீடியாவிலும் சேர்த்து ’RCB’ என்ற வார்த்தை 20 கோடி முறைக்கும் மேல் பேசப்பட்டுள்ளது. அதோடு ஒப்பிடுகையில், ’CSK’ என்ற வார்த்தை 15 கோடி முறை மட்டுமே engagement பெற்றிருக்கிறது. நீங்க எந்த அணிக்கு ஃபேன்?

News January 18, 2025

பெட்ரோலில் எத்தனால் கலப்பு வரலாற்று உச்சம்

image

பெட்ரோலில் எத்தனால் கலப்பு அளவு இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக கடந்த டிசம்பரில் 18.20%ஐ தொட்டுள்ளது. அதன்படி, 76.6 கோடி லிட்டர் எத்தனால் பெட்ரோலுடன் கலக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது. 2025-26 நிதியாண்டு இறுதிக்குள் அதிகபட்சமாக 20% எத்தனால் கலக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

நீங்க பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குனீங்களா?

image

TN அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை 33 லட்சம் பேர் வாங்கவில்லை என ரேஷன் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதற்கு பரிசுத் தொகுப்புடன் ₹1000 ரொக்கப் பணம் வழங்கப்படாததே முக்கியக் காரணம் என்கின்றனர். மொத்தம் 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்பை, 1.87 கோடி பேர் (85%) வாங்கியுள்ளனர். மீதி 33 லட்சம் பேர் (15%) வாங்கவில்லை. நீங்க பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குனீங்களா?

News January 18, 2025

சஞ்சு சாம்சன் மீது அதிருப்தியில் BCCI?

image

விஜய் ஹசாரே ட்ராபி தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. அப்போது அவர் துபாயில் இருந்ததாக கூறப்படும் சூழலில், இது குறித்து அவர் BCCIக்கு விளக்கம் அளிக்கவுமில்லை எனப்படுகிறது. இங்கி. அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு இடம் பெற்றிருந்தாலும், ஒரு நாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாகவே அவருக்கு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் இடம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

News January 18, 2025

விஜய்க்கு அனுமதி அளித்தது காவல்துறை

image

தவெக தலைவர் விஜய் பரந்தூர் செல்ல காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக காஞ்சிபுரம் SP சண்முகம் கூறியுள்ளார். பரந்தூரில் விமான நிலையம் அமையக் கூடாது என்று போராடி வரும் மக்களை சந்திக்க அவர் செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்கு போலீஸ் அனுமதி கோரப்பட்ட நிலையில், தற்போது அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பரந்தூர் செல்லும் விஜய், அங்கு போராட்ட குழுவினரை சந்தித்து ஆதரவு வழங்க உள்ளார்.

News January 18, 2025

பாஜக மாவட்டத் தலைவர் விலகல் ஏன்?

image

பாஜக நெல்லை மாவட்டத் தலைவர் <<15183929>>தயா சங்கர் கட்சியில் இருந்து விலகியது<<>> குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தற்போது தமிழக பாஜகவில் உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், பல ஆண்டுகளாக மாவட்டத் தலைவராக இருக்கும் தயா சங்கரின் பெயர் பரிந்துரைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால், அதிருப்தியில் இருந்த அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

News January 18, 2025

‘விடாமுயற்சி’ல இதை எதிர்பார்க்காதீங்க!

image

விடாமுயற்சி ஒரு மாஸ் என்டர்​டெ​யின்மென்ட் படமில்லை, ரசிகர்கள் அதை எதிர்​பார்த்து வரவேண்​டாம் என இயக்குநர் மகிழ் திரு​மேனி கூறியுள்ளார். படத்தின் மூலக் கதை தன்னுடையது இல்லை எனவும், தான் அஜித்தை வைத்து பண்ண நினைத்தது ஆக் ஷன் த்ரில்​லர் என்று தெரிவித்தார். விடாமுயற்சி படத்தின் கதையை அஜித்தே கூறியதாகவும், அவருடைய இமேஜுக்​கும் படத்தில் அவர் பண்ணி​ய கேரக்​டருக்​கும் தொடர்பு இருக்காது என்றும் கூறினார்.

News January 18, 2025

மெட்ரோ ரயிலில் விரைவாக பயணித்த இதயம்❤️

image

ஹைதராபாத்தில் நன்கொடையாக பெற்ற இதயத்தை ஒரு ஆஸ்பிட்டலில் இருந்து மற்றொரு ஆஸ்பிட்டலுக்கு கொண்டு செல்ல மெட்ரோ ரயில் நிர்வாகம் உதவியுள்ளது. அதன்படி, எல்.பி.நகரில் உள்ள காமினேனி ஆஸ்பிட்டலில் இருந்து லக்டி-கா-புலில் உள்ள க்ளீனிகிள்ஸ் குளோபல் ஆஸ்பிட்டலுக்கு டாக்டர்கள் இதயத்தை கொண்டு சென்றனர். இதயத்தை விரைவாக எடுத்துச் செல்லும் வகையில், 13 கி.மீ. தூரத்தை 13 நிமிடங்களில் கடந்து அசத்தினர்.

error: Content is protected !!