news

News January 18, 2025

டிரம்ப் பதவியேற்பு விழாவில் அம்பானி தம்பதி பங்கேற்பு

image

டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவில், இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா இருவரும் பங்கேற்கின்றனர். US சென்றுள்ள இருவரும், இன்று தொடங்கும் வரவேற்பு விழாவில் இருந்து கேண்டில் லைட் டின்னர் வரை, முக்கிய நிகழ்வுகளில் எல்லாம் கலந்து கொள்வார்கள். இந்திய அரசின் சார்பில் MEA அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்கிறார். 47-வது அதிபராக டிரம்ப் ஜன.20-ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

News January 18, 2025

வெறுக்கப்படும் உணவுகள் பட்டியலில் இந்திய உணவு

image

உலகில் அதிகமாக வெறுக்கப்படும் உணவுகளின் பட்டியலில் பஞ்சாப் மக்களால் விரும்பி உண்ணப்படும் மிஸ்ஸி ரொட்டி 56ஆவது இடம் பிடித்துள்ளது. டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், அயர்லாந்தின் Blodpalt முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் Jellied eels, அமெரிக்காவின் Frog eye salad, ஸ்பெயினின் Angulas a la cazuela உள்ளிட்டவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

News January 18, 2025

உள்ளூர் போட்டிகள் விளையாட கஷ்டமா?

image

உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை வீரர்களுக்கு BCCI கட்டாயமாக்கி இருக்கிறது. இதனால் கோலி, கே.எல்.ராகுல் ரஞ்சி தொடரில் விளையாடுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீரென கோலிக்கு கழுத்து வலியும், கே.எல்.ராகுலுக்கு முழங்காலில் பிரச்னை ஏற்பட்டதால் அவர்கள் விளையாட மாட்டார்கள் எனப்படுகிறது. இது குறித்த செய்தி வெளியான உடனேயே சோஷியல் மீடியாவில் பல கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.

News January 18, 2025

Title வின்னர் முத்துக்குமரனா? பரிசு எவ்வளவு தெரியுமா?

image

BIGG BOSS 8 சீசனில் வெற்றி பெறப்போவது யார் என்பதற்கான எபிசோட் நாளை ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த சூழலில் நடைபெற்று வரும் Votingல் முத்துக்குமரனே முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரே வெற்றி பெறுவார் என்று ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்து கூறுகின்றனர். 2வது இடத்தை செளந்தர்யா பிடிப்பார் எனப்படுகிறது. வெற்றி பெறும் முத்துக்குமரனுக்கு ₹40 லட்சத்து 50,000 கிடைக்கும் எனப்படுகிறது.

News January 18, 2025

சயிப் அலிகான் வழக்கில் ஒருவர் கைது

image

சயிப் அலிகான் தாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் ஒரு நபரை ம.பி.இல் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர், நடிகரை தாக்கியவரா என்பது உறுதி செய்யப்படவில்லை. சயிப்பை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் சம்பவத்துக்கு பிறகான 6 மணி நேரம் குற்றம் நடந்த இடத்துக்கு அருகிலேயே இருந்துள்ளார். அவர் CCTVஇல் சட்டையை மாற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

News January 18, 2025

டாக்டர் வன்கொடுமை வழக்கில் IPS அதிகாரிக்கு தொடர்பா?

image

பெண் டாக்டர் வன்கொடுமை, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சஞ்சய் ராய், IPS ஒருவருக்கு தொடர்பிருப்பதாக நீதிபதியிடம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீல்டா கோர்ட்டில் தீர்ப்புக்கு முன்னர் பேசிய அவர், என்னை இந்த வழக்கில் பொய்யாக சிக்க வைத்துள்ளனர் எனக் கூறியுள்ளார். போலீஸில் தன்னார்வலராக இருந்ததால் அவர் சொல்வதில் உண்மை இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

News January 18, 2025

அக்கா போலீஸ்.. தம்பி காமக்கொடூரன்..

image

கொல்கத்தா காவல்துறையில் SIஆக உள்ள தனது சகோதரியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, <<15187343>>சஞ்சய் ராய்<<>>, RG கர் GHஇல் ஹாயாக உலா வந்துள்ளான். டாக்டர்கள், நர்ஸ்களுக்கு ஷிப்ட் போடும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவராக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆடிட்டோரியத்தில் பெண் டாக்டரை வன்கொடுமை செய்ததோடு, 25 இடங்களில் காயம் ஏற்படுத்தி கொலை செய்துள்ளான். இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம். கமெண்ட்ல சொல்லுங்க.

News January 18, 2025

மது, பீர் விற்பனையில் எந்த மாவட்டம் டாப்

image

பொங்கல் பண்டிகைக்கு மது விற்பனையில் திருச்சி டாப் என்றால், பெரம்பலூர் மாவட்டத்தில் பீர் விற்பனை படுஜோராக நடந்துள்ளது. பெரம்பலூரில் மது மற்றும் பீர் விற்பனை 15.26% அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு 22,435 பீர் கேஸ்கள் விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 27,047 கேஸ்கள் விற்பனையாகியுள்ளன. அதுவும், கரிநாள் அன்று தான் மது பிரியர்கள் பலரும் பீரை அதிகளவில் செலக்ட் செய்துள்ளனர்.

News January 18, 2025

பெண் டாக்டர் வன்கொடுமை வழக்கு கடந்து வந்த பாதை

image

<<15187343>>ஆக.9 2024<<>> அன்று ஆடிட்டோரியத்தில் 31 வயது பெண் டாக்டர், உடலில் 25 இடங்களில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தார். 2 நாட்களுக்குப் பிறகு CCTV அடிப்படையில், போலீஸில் தன்னார்வலராக இருந்த சஞ்சய் ராய்(33) கைது செய்யப்பட்டார். ஆனாலும், டாக்டர்கள் ஸ்டிரைக் தொடர்ந்ததால், வழக்கு CBI வசம் சென்றது. சம்பவம் நடந்து 163 நாட்களில் 50 சாட்சியங்களிடம் விசாரித்த கோர்ட், சஞ்சய் ராய் குற்றவாளி எனத் தீர்ப்பு அளித்துள்ளது.

News January 18, 2025

மகா கும்பமேளாவுக்கு வருகிறாரா எலான் மஸ்க்?

image

எழுத்தாளர் அமிஷ் திரிபாதி, OYO ரித்தேஷ் அகர்வால், ஆர்யமான் பிர்லா, ஜெய் கோடக் உள்ளிட்ட India Global Forum பிரதிநிதிகளை எலான் மஸ்க் சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது ஆன்மிகம், பொருளாதாரம் என பல விஷயங்களை பேசியதாகவும், மகா கும்பமேளாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்ததாகவும் அமிஷ் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்திய பயணம் நீண்டகாலமாக தள்ளிப் போவதால், இந்த முறை அவர் வருவார் என எதிர்பார்க்கலாம்.

error: Content is protected !!