news

News December 23, 2024

ரூ.1 கோடி காரில் பாதுகாப்பு இல்லையா?

image

பெங்களூரில் காரின் மீது கன்டெய்னர் விழுந்த விபத்தில் தனியார் நிறுவன CEO மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இதையடுத்து உலகின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக கருதப்படும் வால்வோவின் கட்டுமான சேஃப்டி குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள். ரூ.1.02 கோடி எக்ஸ் ஷோரூம் விலையாக கொண்ட இந்த மாடல் Volvo XC90 பாதுகாப்பு ரேட்டிங்கில் 5 ஸ்டார் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2024

ஜன.1 முதல் இந்த போன்களில் WhatsApp இயங்காது

image

ஜன.1 (2025) முதல் ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது பழைய பதிப்புகளின் அடிப்படையில் ஆண்ட்ராய்டு ஃபோன்களில் WhatsApp இயங்காது. Samsung Galaxy S3, S4 Mini, Note2, Moto G, Moto Razer HD, Moto E 2014, LG Nexus 4, LG G2 Mini, Sony Xperia Z, SP, V, HTC 1X, 1X+ போன்ற பல கிளாசிக் ஆண்ட்ராய்டு போன்களை பாதிக்கும். மே 5 முதல் iOS 15.1 மற்றும் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன்களுக்கும் இதே விதி பொருந்தும்.

News December 23, 2024

கட்டாயத் தேர்ச்சி ரத்து: தமிழ்நாட்டுக்கு பொருந்தாது

image

இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், 5-8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு இன்று அந்த கட்டாயத் தேர்ச்சி கொள்கை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகத்தில் அமலாகுமா என கேள்வி எழுந்த நிலையில், அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மறுத்துள்ளார். 5-8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

News December 23, 2024

மூத்த திரைப்பட இயக்குநர் காலமானார்

image

மூத்த இயக்குநர் சியாம் பெனகல் (90) காலமானார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று மாலை உயிரிழந்ததாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 14ஆம் தேதி அவர் 90ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். மன்தன், ஜூபைதா, சர்தாரி பேகம் உள்ளிட்ட படங்களை அவர் இயக்கியுள்ளார். அவரின் கலைப்பணியை பாராட்டி பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.

News December 23, 2024

Talent தான் முக்கியம்: கார்த்தி சிதம்பரம்

image

திறம்பட வேலை செய்கிறோமா என்பதே முக்கியம் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் வேலைபார்க்க வேண்டும் என இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த KC, இந்தியாவில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற முறையைதான் பரிசீலிக்க வேண்டும் என்றார். மேலும், அதிகப்படியான நேரம் உழைக்க வேண்டும் என்பது, அர்த்தம் இல்லாததது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News December 23, 2024

மாெசாம்பிக்கை சூறையாடிய சிடோ புயல்: 94 பேர் பலி

image

மொசாம்பிக் நாட்டை தாக்கிய சிடோ புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 768 பேர் காயமடைந்திருப்பதாகவும், சுமார் 6.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளதாகவும் அந்தத் தகவல் கூறுகிறது. சிடோ புயலால் பிரான்ஸ் நாட்டிற்கு சொந்தமான மயோட்டி தீவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News December 23, 2024

பான்டாஸுக்கு பெயர் வைக்க இவ்வளவு செலவா?

image

ஹாங்காங்கின் நேஷனல் கிரஷ்ஷான 2 Panda கரடிகளுக்கு பெயர் மாற்றும் போட்டி நடத்தப்பட்டது. அதற்கான விளம்பரம், இணையதளம், பரிசு என மொத்தமாக ரூ.76 லட்சம் பூங்கா நிர்வாகம் செலவழித்த நிலையில் இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி Panda-களின் பழைய பெயர்களே தொடரலாம் என வெற்றிபெற்றவர்கள் விரும்பியுள்ளனர். இதுக்காகவா இவ்வளவு செலவு? எனக் கேட்டால், அதிகாரிகளுக்கு மக்களின் விருப்பம் தெரியாதுல்ல என்கிறார்கள்.

News December 23, 2024

அரசுப்பள்ளி மாணவர் உயர்கல்வி செலவு: அரசு ஏற்கும்

image

அரசுப்பள்ளிகளில் படித்து உயர்க்கல்வி நிலையங்களில் சேரும் மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதாெடர்பாக தமிழக அரசு வெளியிட்ட ஆணையில், அயல்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் முதல் பயண செலவை அரசே ஏற்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

News December 23, 2024

VIRAL: ஷமி – சானியா மிர்சா wedding photos.. இது உண்மையா

image

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஷமி தனது மனைவியையும், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவரையும் சில ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்தனர். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டதுபோல், சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படுவேகமாக வைரலாகி வருகின்றன. ஆனால், இவை அனைத்தும் AI-ஆல் உருவாக்கப்பட்டவை. அவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

News December 23, 2024

பந்துவீச்சு ரொம்ப மோசம்: புஜாரா

image

இந்திய அணியில் பந்துவீச்சு வலுவாக இல்லை என புஜாரா ஆதங்கம் தெரிவித்துள்ளார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதாக ரன் குவிப்பில் ஈடுபடாவிட்டாலும், மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பதாக சுட்டிக்காட்டிய அவர், பந்துவீச்சை ஒப்பிடுகையில் பேட்டிங் சிறிது பரவாயில்லை என்றார். BGT தொடரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நிலையில், இரு அணிகளும் தலா 1 வெற்றியை பெற்றுள்ளன.

error: Content is protected !!