India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த புதிய திட்டம் வைத்துள்ளதாக இந்திய வீரர் ஆகாஷ் தீப் கூறியுள்ளார். ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள ஹெட் தடுமாறுகிறார் என்ற அவர், 4ஆவது டெஸ்டில் அவரை மைதானத்தில் செட்டில் ஆக விட மாட்டோம் என்றார். ஒரே ஸ்பாட்டில் அவருக்கு பந்துவீசாமல், அவரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தும் வகையில் பந்துவீச முயற்சிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
▶ நீங்கள் இந்த உலகை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்.
▶ அமைதி ஒரு புன்னகையில் தொடங்குகிறது.
▶ மகிழ்ச்சிக்குச் சாவி எதுவும் இல்லை, கதவு எப்போதும் திறந்தே உள்ளது
▶ சாதாரண விஷயங்களை அசாதாரணமான அன்புடன் செய்யுங்கள்.
▶ மனிதர்களை மதிப்பிட்டுக்கொண்டே இருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரமிருக்காது.
ஹைதராபாத்தில் 1934இல் சியாம் பெனகல் பிறந்தார். 12 வயதில் கேமராவை பயன்படுத்த தொடங்கிய அவர் இயக்கிய ‘அங்கூர்’ படம் தான் இந்திய சினிமாவின் திருப்புமுனை எனலாம். மேலும் ‘மந்தன்’ என்ற படத்திற்காக நாட்டிலேயே முதல் க்ரவுட் ஃபண்டிங் திரைப்படத்தை உருவாக்கியவரும் இவர் தான். ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே’ உள்ளிட்ட ஆவணப்படங்களை இயக்கிய இவர், ‘அங்கூர்’ உள்ளிட்ட 7 படங்களுக்காக தேசிய விருது வென்றவர்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆரின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவருக்கு அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவர், “மூன்று முறை தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்தும், தான், தனது குடும்பம் என்று எண்ணாமல், தமிழக மக்களுக்காக உழைத்தவர். சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காகவே தமது செயல்பாடுகளை அமைத்துக் கொண்டவர். ஆயிரத்தில் ஒருவரான எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்” என்றார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: அடக்கமுடைமை ▶குறள் எண்: 127 ▶குறள்: யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. ▶பொருள்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்.
மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த, சகோதரர்கள் மூவரை தீயணைப்பு துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
▶டிசம்பர் 24 ▶மார்கழி- 9 ▶கிழமை: செவ்வாய் ▶திதி: நவமி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
இயக்குநர் சியாம் பெனகல் (90) மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “அவரின் மறைவு இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கு மிக பெரிய இழப்பு. புதிய வகை சினிமாவைத் தொடங்கி பல கிளாசிக் படங்களை உருவாக்கியவர். தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பத்ம பூஷன் உட்பட பல விருதுகளின் வடிவத்தில் அவரது அசாதாரண பங்களிப்பை அறியலாம். அவரது குடும்பத்தினருக்கும் எனது இரங்கல்கள்” என்றார்.
இன்று (டிச.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.