news

News December 24, 2024

முதல் படத்திலேயே விருது வென்ற ரஹ்மான் மகள்!

image

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் `மின்மினி’ படம் கடந்த ஆகஸ்ட் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமானின் மகளான கதீஜா ரகுமான் இசையமைத்திருந்தார். இந்நிலையில் கதீஜா ரகுமானுக்கு இந்தியா மீடியா வொர்க்ஸ் அமைப்பு சார்பில் இந்த ஆண்டின் சிறந்த அறிமுக இசை அமைப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. முதல் படத்திலேயே விருது கிடைத்தது மகிழ்ச்சி என கதீஜா இன்ஸ்டாவில் தனது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்.

News December 24, 2024

தமிழகம் முழுவதும் இன்று பாமக போராட்டம்

image

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி இன்று மாநிலம் முழுவதும் பாமக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கண்டிப்பாக வழங்கப்படும் என்று அறிவித்த CM ஸ்டாலின் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றஞ்சாட்டிய ராமதாஸ், அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். விழுப்புரத்தில் ராமதாஸும், காஞ்சிபுரத்தில் அன்புமணியும் பங்கேற்கின்றனர்.

News December 24, 2024

மீனவர்கள் 17 பேர் கைது

image

தலை மன்னார் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை நள்ளிரவில் கைது செய்தது. அவர்களது 2 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கை அதிபர் இந்தியா வந்துபோன நிலையிலும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

News December 24, 2024

துல்கருக்கு திருமணமாகி 13 வருஷம் ஆயிடுச்சா!

image

நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவியுடன் 13வது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு அமல் சூஃபியா என்பவரை திருமணம் செய்துகொண்ட துல்கர் சல்மான் தன்னுடைய இன்ப துன்பங்களை சரிசமமாக இத்தனை ஆண்டுகாலம் பகிர்ந்துகொண்டு தன்னுடன் இருப்பதற்கு மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நிஜமாகவே நீங்க லக்கி தான் என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வாழ்த்தி வருகின்றனர்.

News December 24, 2024

இன்று ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்

image

தியேட்டரில் புஷ்பா – 2 பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் விசாரணைக்கு ஆக வேண்டும் என்று ஐதராபாத் காவல்துறை சம்மன் அளித்துள்ளது. இந்த வழக்கில் அவர் 11ஆவது அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே சிறை சென்று ஜாமினில் வெளியே வந்திருக்கும் அவர், மீண்டும் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவுவதால் ரசிகர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

News December 24, 2024

டிஜிட்டல் அரெஸ்ட்; ரூ. 11.8 கோடியை சுருட்டிய கும்பல்

image

பெங்களூருவில் ஐடி இளைஞரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் என கூறி ஒரு கும்பல் ரூ. 11.8 கோடியை சுருட்டியுள்ளது. TRAIஇல் இருந்து பேசுவதாகவும், உங்கள் எண்ணை தவறாக பயன்​படுத்தி சட்ட விரோத விளம்​பரம், கொலை மிரட்டல் ஆகியவை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். பின்னர் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளகாத பயமுறுத்தி 18 நாள்களில் 11.8 கோடியை பறித்துள்ளனர். பின்னர் போலி என தெரிந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

News December 24, 2024

4வது டெஸ்டில் இருந்து ஹெட் விலகல்?

image

IND-AUS அணிகள் மோதும் 4வது BGT போட்டியில் ஆஸி., வீரர் டிராவிஸ் ஹெட் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொடை தசையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது ஆஸி., அணியுடன் அவர் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை. இன்று நடைபெறும் உடற்தகுதி தேர்வுக்குப் பிறகு தான் 4வது டெஸ்டில் அவர் விளையாடுவாரா என தெரியவரும். IND-AUS 4வது டெஸ்ட் வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

News December 24, 2024

எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம்

image

எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து ரசிகர்களை ஈர்க்கும் மந்திரச் சொல். மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் ஓங்கி ஓலித்துக் கொண்டிருக்கிறது இந்த மூன்றெழுத்து. நடிகராக மட்டுமின்றி திரைத்துறையின் அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து பல்துறை வித்தகராகவும் விளங்கினார். நடிகராக மட்டுமின்றி முதல்வராகவும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் எம்.ஜி.ஆர்.

News December 24, 2024

டிசம்பர் 24: வரலாற்றில் இன்று

image

▶1924: பழம்பெரும் பாடகர் முகமது ரஃபி பிறந்தநாள்.
▶1968 – 3 விண்வெளி வீரர்களுடன் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
▶1987: முன்னாள் தமிழக முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவு.
▶2002: டெல்லி மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார்.
▶2005: பிரபல நடிகை பானுமதி மரணம்
▶ தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம்

News December 24, 2024

‘விடுதலை 2’ படத்தை பாராட்டிய தனுஷ்!

image

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘விடுதலை 2’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விடுதலை 2 படத்தை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார். X தளத்தில், “விடுதலை 2 மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் உள்ளது. படத்தின் முதல் ஷாட்டில் இருந்து கடைசி வரை அனைத்துமே அற்புதம். மாஸ்டர் மேக்கர் வெற்றிமாறனின் சிறப்பான படைப்பு. இளையராஜாவின் இசை மிகவும் பிடித்திருந்தது” என்றார்.

error: Content is protected !!