India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்தது. இதுபற்றி சஞ்சய் ராயின் தாய் மாலதி(70) கூறுகையில், எனக்கும் 3 மகள்கள் இருக்கின்றனர். அந்த டாக்டரின் தாயின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். குற்றவாளியான என் மகனை மன்னிக்கவே மாட்டேன், அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஆட்சேபிக்க மாட்டேன் என்றார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த திரைப்படம் “யோகன்”. பர்ஸ்ட்லுக் போஸ்டர் எல்லாம் வெளியான அப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இந்நிலையில், அப்படத்தை மீண்டும் கௌதம் இயக்கவுள்ளதாகவும், விஜய்க்கு பதில் விஷால் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், தற்போதைய கால சூழலுக்கு ஏற்றார் போல கதையை மாற்றியமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
US அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப் அளித்த விருந்தில் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீதா அம்பானி பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் டிரம்ப் டவர்ஸின் இந்தியா பார்ட்னர் கல்பேஷ் மேத்தா, பங்கஜ் பன்சல் உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்களும், அமேசான் ஜெப் பெசோஸ் உள்ளிட்டோரும் இருந்தனர். இன்று இரவு நடக்கும் கேண்டில் லைட் டின்னரிலும், பதவியேற்பு விழாவிலும் அம்பானி தம்பதி பங்கேற்கவுள்ளனர்.
போர் நிறுத்தத்தின் முதல் நாளில் இஸ்ரேலிய பணய கைதிகளில் 3 பேரை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் 90 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. தற்போது விடுதலை செய்யப்படவுள்ள 3 பேரின் புகைப்படங்கள் உலகளவில் ட்ரெண்டிங் ஆகிறது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு மேலாக போர் நடந்து வந்த நிலையில், 6 வார போர் நிறுத்தம் இந்திய நேரப்படி மதியம் 2.45 மணியளவில் காஸாவில் அமலாகியுள்ளது. ஹமாஸ் விடுதலை செய்ய உள்ள பிணைக் கைதிகளின் பட்டியலைப் பெற்றுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. போர் நிறுத்தம் அமலானதை தொடர்ந்து காஸா மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
நடிகர் சயிப் அலி கான் தாக்கப்பட்ட வழக்கில் கைதானவர், இன்று பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரிக்க போலீஸ் அனுமதி கேட்ட நிலையில், ஜன.24 வரை கஸ்டடி அளித்துள்ளது நீதிமன்றம். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்றும், தனது பெயரை மாற்றிக்கொண்டு இந்தியாவில் 6 மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சயிப் வீட்டில் நுழைந்த காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் நீக்கப்பட்டுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று அதிமுகவில் இணைந்தாா். தற்போது, அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், செந்தில் முருகன் சுயேட்சையாக போட்டியிட மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
அரசியலுக்கு வர அப்பாவுக்கு விருப்பமில்லை என்று திமுகவில் இணைந்த சத்யராஜ் மகள் திவ்யா தெரிவித்துள்ளார். அம்மாவை கவனித்துக்கொள்ள வேண்டியது இருந்ததால், முன்பே அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் என்னுடைய ரோல் மாடல் கலைஞர் கருணாநிதிதான். 2026இல் திமுக அபார வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை 2வது முறையாக பதவியேற்க உள்ளதால் வெள்ளை மாளிகையில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நண்பகல் 12 மணிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், டிரம்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஜோ பைடன் கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் கடந்த 2020 தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், ஜோ பைடனின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தது கவனிக்கத்தக்கது.
நடிகர் விஷாலின் உடல்நிலை மோசமடைந்ததற்கு ‘அவன் இவன்’ படத்தில் அவர் நடித்ததே காரணம் என்று மூத்த செய்தியாளர் ஒருவர் பேசியிருந்தார். பாலாதான் விஷாலின் கண்களை அப்படி ஆக்கிவிட்டதாகவும் அதனால்தான் விஷாலுக்கு தற்போது பிரச்னை என்றும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய பாலா, “நானா காரணம்? டாக்டர் சர்டிபிகேட்தான் வாங்கித் தர முடியும். அது எப்படி அப்படி பண்ண முடியும்” என்று தனது பாணியில் பதிலளித்தார்.
Sorry, no posts matched your criteria.