news

News December 24, 2024

அல்லு அர்ஜூனிடம் போலீஸ் தீவிர விசாரணை

image

புஷ்பா பட கூட்டநெரிசலில் ரசிகை உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜூனிடம் போலீசார் 3 மணி நேரமாக தீவிர விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது. இதையேற்று ஹைதராபாத் சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் இன்று ஆஜரானார். அவரிடம், பாேலீஸ் அனுமதி மறுத்ததையும் மீறி தியேட்டருக்கு வரும் முடிவை எடுத்தது ஏன் என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

News December 24, 2024

ஜல்லிக்கட்டு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை TN அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாத அமைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக் கூடாது, போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்குத் தேவையற்ற வலி கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. TN விலங்குகள் நல வாரியக் குழு, ஜல்லிக்கட்டின் போது உடனிருந்து அறிக்கை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

News December 24, 2024

துரைமுருகன் முதல்வராகி இருக்கனும்: ராமதாஸ்

image

மூத்த அமைச்சர் துரைமுருகன் CM ஆகியிருக்கனும், குறைந்தபட்சம் Dy CM ஆகவாவது இருந்திருக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார். வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுகவின் தியாகி உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கியுள்ளதாகக் கிண்டல் செய்ததோடு, வன்னியர்களை திமுக தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

News December 24, 2024

யானைகள் ரேஷன் அரிசியை விரும்பி சாப்பிடுவது ஏன்?

image

ரேஷன் கடையில் புகுந்த யானை அரிசி மூட்டைகளைச் சேதப்படுத்தியது என்ற செய்தி சமீப காலமா நிறைய வருவதை பார்த்திருப்பீங்க. அது ஏன் தெரியுமா? ரேஷன் அரிசியில் வரும் வாசனை யானைகளுக்கு ரொம்ப பிடிக்குமாம், ஒரு மூட்டையில் ஒரு படி அரிசியை அவை சாப்பிடுமாம். அரிசி மட்டுமல்ல, உப்பு கூட யானை விரும்பி சாப்பிடும் உணவு என்கிறார் சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவம். ஏங்க அரிசி ராஜா.. இவ்வளவு ஒரு படி அரிசிக்கு தானா..?

News December 24, 2024

அதிமுக தலைவர்களை விமர்சிக்காதீர்: மேலிட உத்தரவு

image

அதிமுக மறைந்த தலைவர்கள், இந்நாள் தலைவர்கள் குறித்து விமர்சிக்காதீர் என TN பாஜக தலைமைக்கு டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையற்ற கருத்துகளை கூறி சர்ச்சையில் சிக்க வேண்டாமென்றும், கட்சி நலன் கருதி பாஜக திட்டங்களை மட்டும் மக்களிடம் கொண்டு செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளதாம். பூத் கமிட்டியை வலுபடுத்துமாறும், வீடு வீடாக பிரச்சாரம் செல்லுமாறும் கேட்டு கொண்டதாகக் கூறப்படுகிறது.

News December 24, 2024

பிஹாரில் ஆண் டீச்சர் கர்ப்பம்

image

பிஹார் அரசுப் பள்ளியில் ஆண் ஆசிரியர் ஒருவர் கர்ப்பம் என்று கூறி 12 மாதங்கள் விடுமுறை எடுத்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதன் மீதான விசாரணையில், பல ஆண் ஆசிரியர்கள் இதேபோல விடுமுறை எடுத்தது தெரியவந்துள்ளது. அவர்களுக்கான இணையதளத்தில் இருந்த ஓட்டைகள் மூலம் ஆசிரியர்கள் கர்ப்பகால விடுமுறை எடுத்து வந்துள்ளனர். இந்த ஓட்டை விரைவில் சரி செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News December 24, 2024

இட ஒதுக்கீடு தந்தால் திமுகவுக்கு ஆதரவு: அன்புமணி

image

வன்னியர் உள் ஒதுக்கீடு கொடுத்தால் வரும் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம், இல்லையெனில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், திமுகவுக்கு சமூக நீதி இல்லை எனவும் வன்னியர்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவும் சாடினார்.

News December 24, 2024

தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும்

image

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகம் அருகே உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக MET தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி, வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News December 24, 2024

இனி ஹோட்டல்களில் இவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்

image

காலாவதியான பொருள்கள், ரசாயனம் கலந்த உணவுகளால் ஹோட்டல் உணவுகள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, ஹோட்டல்களில் தரமான உணவு விற்பனையை உறுதி செய்ய வணிகர்கள், பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு பயிற்சி பெற்ற ஒருவர், நடுத்தர, பெரிய ஹோட்டல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என TN உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

News December 24, 2024

ஓட்டு கூட பனையூரில் இருந்தே கேட்பாரா விஜய்?

image

கட்சி தொடங்கியது முதலே விஜய்யை சர்ச்சைகளும் விடாமல் துரத்துகின்றன. பெரியாரின் நினைவு தினத்தையொட்டி பனையூர் கட்சி ஆபிஸில் பெரியார் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுவும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டு பொதுவெளிக்கு வரத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், எலக்‌ஷனின் போது ஓட்டு கூட்ட பனையூரில் இருந்தே கேட்பாரா? என வினவுகின்றனர்.

error: Content is protected !!