India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பிற இடங்களில் ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. பல்லுயிர் கேந்திரம், பாரம்பரிய இடங்களை தவிர்க்குமாறு ஜியாலஜிக்கல் சர்வே அமைப்பிற்கு அறிவுறுத்தியுள்ளது. முன்னரே பல முறை ஆலோசித்தபோதும், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பதாக தமிழக அரசு தெரிவிக்கவில்லை எனவும் மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் நேரிட்ட விபத்தில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். பூஞ்சில் 18 ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 5 வீரர்கள் பலியானதுடன், 5 பேர் காயமடைந்தனர். இத்தகவலை பகிர்ந்துள்ள ராணுவம், உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும், காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தனுஷின் 55ஆவது படத்தின் கதைப் பின்னணியை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார். ‘‘அமரன் திரைப்படம் துணிச்சலுக்காக விருது வென்ற ஒரு உண்மையான ஹீரோவை பற்றி இருந்தது. தனுஷ் படம், பெரிதும் அறியப்படாத, சமூகத்தில் கலந்து வாழும் பல ஹீரோக்களை பற்றியது’’ என அவர் தெரிவித்துள்ளார். தற்போது திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் ராஜ்குமார் இருக்கிறார். 2025 இறுதியில் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ, தமிழக அரசு கூடுதலாக ₹1.50 கோடி ஒதுக்கியுள்ளது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட, இதுவரை ₹3.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்ய இந்த ஏற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், இறைச்சிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. விஷேச தினங்களில் ஆடு, கோழி, சேவல் வாங்க சந்தைகளுக்கு அதிக அளவில் மக்கள் வருவது வழக்கம். அந்த வகையில் இன்று 10 கிலோ எடை உள்ள ஆடு ₹8,000 முதல் ₹10,000 வரையும், ஒன்றரை கிலோ கோழி ₹350 முதல் ₹400 வரையும் விற்பனையானது. அதேபோல், நாளை மீன், பிராய்லர் கோழி விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (டிச.24) இரவு 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கணித்துள்ளது.
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து- வெங்கட தத்தா சாய் திருமணம் 2 நாள்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. நெருக்கமான நபர்கள் மட்டும் பங்கேற்ற திருமணத்தில் எடுக்கப்பட்ட படங்களை பி.வி.சிந்து தற்போது பகிர்ந்துள்ளார். தெலுங்கு பாரம்பரியப்படி இணையர் இருவரும் சடங்குகளை சந்தோஷத்துடன் மேற்கொள்கின்றனர். இந்த பதிவுக்கு அவரது ரசிகர்கள் ❤️❤️ பறக்கவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிச.31 இவற்றுக்கும் கடைசி நாளாக உள்ளது. *கடந்த நிதியாண்டுக்கான Income Tax ரிட்டர்ன் (ITR) ஃபைல் செய்வதற்கு கடைசி நாள் *நடப்பு நிதியாண்டுக்கு, வரி செலுத்துவோர் தங்கள் வருமானத்துகேற்ப முன்கூட்டிய வரி (Advance Tax) செலுத்த கடைசி நாள் *வெளிநாட்டு வருமானம்/ வெளிநாட்டு சொத்துகளின் விவரங்களை வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்ய கடைசி நாள்.
வரும் 27ஆம் தேதி தமிழ்நாடு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். அமித்ஷா வரும் வழியில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடைபெறும். ஜனநாயகத்தின் மீதும், அரசியல் அமைப்பின் மீதும் நம்பிக்கை உள்ள அனைவரும் ஒன்று கூட வேண்டும் என போராட்டத்திற்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்திய அணி வீரர் அக்சார் படேலின் மனைவி மேகா படேலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்சார் படேலுக்கும், மேகா படேலுக்கும் குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அத்தம்பதிக்கு ஆண் குழந்தைக்கு பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு ஹக்ஸ் படேல் என பெயரிட்டுள்ளனர். இந்தத் தகவல் வெளியானதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.