India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு எதிராக போராடும் மக்களை 36வது முக்கிய நபராக தவெக தலைவர் விஜய் இன்னும் சற்று நேரத்தில் சந்தித்து பேசுகிறார். இந்தத் திட்டத்தை எதிர்த்து 910 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை இதுவரை அன்புமணி, திருமா, சீமான், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக Ex அமைச்சர் சோம சுந்தரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என முக்கிய பிரபலங்கள் 35 பேர் சந்தித்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹120 உயர்ந்துள்ளது. நேற்று ₹59,480க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹59,600க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,435ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹15 உயர்ந்து ₹7,450ஆக விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராமுக்கு ₹104 என்று நீடிக்கிறது.
MBA, MCA படிப்புகளில் சேர்வதற்கான TANCET நுழைவுத் தேர்வுக்கு ஜன.24 முதல் பிப்.21 வரை விண்ணப்பிக்கலாம். அத்துடன், முதுகலைப் பொறியியல் படிப்புகளான M.E., M.Tech., M.Arch படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது. இத்தேர்வுகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். <
சைபர் குற்றவாளிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூருவில் லாட்டரியில் போன் வென்றதாக, IT ஊழியருக்கு கொரியர் மூலம் போன் அனுப்பப்பட்டுள்ளது. அதனை உண்மை என நம்பி, புது போனில் Sim கார்டு போட்டு பயன்படுத்தியுள்ளார். தொடர்ந்து, போனில் உள்ள தகவல்களை கைப்பற்றிய குற்றவாளிகள், அவரது A/Cல் இருந்து ₹2.8 கோடியை சுருட்டியுள்ளனர். பின் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் போலீஸை அணுகியுள்ளார்.
*<
கும்பமேளா விளம்பரத்திற்காக சென்னை பெசன்ட் நகரில் வைக்கப்பட்டிருந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது. சனாதனத்திற்கு எதிரான அரசு என்று சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்தில் இப்படி ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது சர்ச்சையானது. இதனையடுத்து, அந்த விளம்பரம் நீக்கப்பட்டு, அது தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட நிழற்குடை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது நீண்ட நாள் காதலியை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். ‘இமைக்கா நொடிகள்’, ‘டிமான்ட்டி காலனி’, ‘கோப்ரா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, தற்போது ‘டிமான்ட்டி காலனி 3’ படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், அவரது திருமணம் நடைபெற்றுள்ளது. விக்ரம், ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் திருமண ஜோடிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கவுள்ளார் விஜய். இந்நிலையில், #களத்தில்விஜய்_கலக்கத்தில்ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை விஜய் ஆதரவாளர்கள் X தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் முதல்வர் ஸ்டாலினுக்கு கலக்கத்தை ஏற்படுத்துவதாக பொருள்படுத்தப்படுகிறது. இதுகுறித்த உங்களது பார்வை என்ன?
இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை அப்லோடு செய்ய முடியும். 90 விநாடிகளில் இருந்து 180 விநாடிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, பயனாளர்கள் தங்களது Profile போட்டோவையும் ஸ்கொயர் வடிவில் வைக்கும் அப்டேட்டும் செய்யப்பட்டுள்ளது. USஇல் டிக்டாக் தடை விதிக்கப்பட்ட பிறகு இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் அதிகரித்தனர். இந்நிலையில், டிக்டாக் மீண்டும் செயல்பட டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.
கடந்த ஆண்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு உடலில் பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை கண்டறியும் வகையிலும், சரி செய்யும் வகையிலும் அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர் என 805 குழுக்கள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.