India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 47 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக vs நாதக என இருமுனை போட்டி நிலவுகிறது. அதிமுகவும், பாஜகவும் இத்தேர்தலை புறக்கணித்துள்ளன. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்.8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நவீன மருத்துவத்தை இழிவுபடுத்தி விளம்பரம் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆணையிட்டும் அவர் வராததால் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்டதால் உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
புதிய யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெறுமாறு, மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். யுஜிசி வரைவு விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன. மாநில பல்கலை.களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என, ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை நியமித்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு அவரை LSG வாங்கியது. இதன்மூலம், 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலை மதிக்கத்தக்க வீரராக பண்ட் மாறினார். அடுத்த சில ஆண்டுகளில் தோனி, ரோஹித் ஷர்மாவுக்கு இணையான மதிப்பு கொண்டவராக பண்ட் மாறுவார் என LSG உரிமையாளா் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் விஜய ரங்கராஜூ காலமானார். சென்னையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாலகிருஷ்ணா நடித்த பைரவ த்வீபம் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் தனுஷின் படிக்காதவன் மற்றும் தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவை எதிர்த்து ராமச்சந்திரன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கில் உயர் நீதிமன்றத்தையே அணுகுமாறு அறிவுறுத்தியதோடு, மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது.
கொல்கத்தாவில் பெண் டாக்டரை வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. மரண தண்டனை கொடுக்காமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது அதிருப்தி அளிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கேரளாவில் காதலனை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் இளம்பெண் கிரிஷ்மாவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
டிடி ரிட்டன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2ஆவது பாகம் உருவாகி வருகிறது. பிரேம் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துடன் இணைந்து ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இயக்குநர் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தொடர்பான கலக்கலான புகைப்படங்களை மேலே காணலாம்.
ஷாப்பிங்கில் சில பிராண்டட் பொருட்களை வாங்கும்போது, அதற்கான பேக்குகளுக்கு தனியாக நம்மிடம் இருந்து பணம் வசூலிப்பார்கள். ஆனால், இனிமேல் அப்படி வாங்கக் கூடாது என தேசிய நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது கஸ்டமரின் காசில் விளம்பரம் செய்வதாக அமைவதால், இனி பேக்குகளில் எந்த ஒரு பிராண்டின் லோகோவும் இடம்பெறக் கூடாது எனவும், மேலும், அதன் விலை அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
சென்னைக்கு மற்றொரு ஏர்போர்ட் தேவை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பே சென்னைக்கு மற்றொரு ஏர்போர்ட் வந்திருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றால் சூழலியல் பாதிப்பு சிறிதளவில் இருக்கத்தான் செய்யும் என்றார். மேலும், பரந்தூர் ஏர்போர்ட்டுக்கு நிலம் வழங்குவோருக்கு, அதிக அளவில் இழப்பீடு தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
Sorry, no posts matched your criteria.