news

News January 20, 2025

எப்போது கலையும் இரட்டை வேடம்: அன்புமணி

image

CM ஸ்டாலினின் இரட்டைவேடம் எப்போது கலையும் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். VC நியமனம் தொடர்பான UGC விதிகளை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்கக் கோரி, INDIA கூட்டணி CMகளுக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய அவர், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்படி நடத்தலாம் எனக் கேட்டு பீகார், கர்நாடகம், தெலங்கானா CMகளுக்கு கடிதம் எழுதாதது ஏன் என் வினவியுள்ளார்.

News January 20, 2025

ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அதிகரிக்க…

image

ஆண் தன்மையை, உடல் வலுவை பராமரிக்க உதவும் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க: *தசைகளுக்கு எடை & வலுப் பயிற்சிகள், கார்டியோ பயிற்சிகள் *ஆரோக்கியமான டயட் *சர்க்கரை, கெட்ட கொழுப்பை தவிர்த்தல் *தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள் * புரதச்சத்து, வைட்டமின் -டி நிறைந்த உணவுகள் *போதுமான தூக்கம் *மது, புகை தவிர்த்தல் *சரியான உடல் எடை பராமரிப்பு *மன அழுத்தம் தவிர்த்தல் ஆகிய வழிமுறைகளை பயனளிக்கும்.

News January 20, 2025

மனிதர்களுடன் மோதும் ரோபோக்கள்

image

மனிதர்கள் vs ரோபோக்கள் இடையேயான மாரத்தான் போட்டியை வருகிற ஏப்ரல் மாதம் நடத்த உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 12,000 மனிதர்கள் ரோபோக்களுடன் போட்டி போட உள்ள வரலாற்று நிகழ்வு முதல்முறையாக நடைபெற உள்ளது. 21 கி.மீ தூரம் நடைபெறும் இந்த ரேஸில், முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மனித வடிவில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் ரோபோட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.

News January 20, 2025

மாட்டு கோமியம் நல்லது, நானும் குடிப்பேன் : காமகோடி

image

மாட்டு கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது; அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக IIT இயக்குநர் காமகோடி கூறியுள்ளார். பண்டிகையின்போது பஞ்சகவ்யம் குடிப்பது வழக்கம், நானும் குடிப்பேன். கோமியத்தில் நோய் எதிர்ப்பு இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பேசினேன் என்றார். மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என்ற பேச்சு சர்ச்சையான நிலையில், அவர் விளக்கமளித்துள்ளார்.

News January 20, 2025

கொடுமை! சிறுவனை ரேப் செய்த 28 வயது பெண்

image

மே.வங்கம், போங்கானில் உறவுக்கார சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துவந்ததாக தீபிகா பிஸ்வாஸ் என்ற 28 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனை முதல்முறை மிரட்டி பலாத்காரம் செய்த அந்த பெண், அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அதை வைத்து அச்சிறுவனை தொடர்ந்து பலாத்காரம் செய்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் கொடுமை தாங்காமல் சிறுவன், தன் தாயிடம் உண்மையை சொல்ல, குற்றவாளி இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

News January 20, 2025

இதனால் தான் மரண தண்டனை வழங்கப்பட்டதா?

image

கேரளாவில் காதலனை கொன்ற வழக்கில் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஷாரோனை மட்டுமல்ல, காதலின் உணர்வையும் சேர்த்தே அப்பெண் கொன்றதாகவும், 11 நாள்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மரணப்படுக்கையில் இருந்தும், அப்பெண்ணை காட்டிக் கொடுக்காத அவருக்கு பெரும் துரோகத்தை இழைத்திருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

News January 20, 2025

உச்சம் தொட்ட பிட்காயின்: ரூ.1 கோடியை தாண்டியது

image

டொனால்ட் டிரம்ப் அதிபராக இன்று பதவியேற்க உள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகளில் முக்கிய நாணயமான பிட்காயினின் மதிப்பு உச்சம் தொட்டுள்ளது. முதல் முறையாக ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.1 கோடியை எட்டியதாக COIN DCX தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அது ரூ.3.81 லட்சம் உயர்ந்து, ரூ.1.06 கோடி மதிப்பை எட்டியது.

News January 20, 2025

எங்களுக்கு பணம் அல்ல, நீதி தான் வேண்டும்

image

கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக ₹17 லட்சம் வழங்க வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட்டது. இதுபற்றி பேசிய பெண்ணின் தந்தை, எங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதி தான் வேண்டும் என்றார். இந்த கொடுமைக்கு ₹17 லட்சம் கொடுத்தால் ஈடாகுமா என நெட்டிசன்களும் விமர்சிக்கின்றனர்.

News January 20, 2025

தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு விருது

image

ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில், நடிகை தேவயானி இயக்கிய குறும்படத்திற்கு விருது கிடைத்துள்ளது. ‘கைக்குட்டை ராணி’ என்ற டைட்டிலில், தாயை இழந்த ஒரு சிறுமியின் வாழ்வில் எதிர்கொள்ளும் தடைகளை பற்றி, உணர்ச்சி மிகுந்த கதைக்களத்தில் உருவான இந்த படம், ‘குழந்தைகளுக்கான சிறந்த குறும்படம்’ என்ற விருதை பெற்றுள்ளது. தேவயானி என்றால் சட்டென உங்களுக்கு நினைவுக்கு வருவது என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

News January 20, 2025

பெரியார் சீர்திருத்தவாதி அல்ல : ஜான் பாண்டியன்

image

தமிழகத்தின் சீர்திருத்தவாதி என்று பெரியாரை சொல்லக்கூடாது என ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தீண்டாமையை பெரியார் தான் ஒழித்தார் என்பதை ஏற்க முடியாது; தீண்டாமை தற்போதும் உள்ளது எனக் கூறிய அவர், காலம் மாறியதால் எழுச்சி தானாக உருவானது; பெரியாரால் அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஆளுங்கட்சியை பார்த்து தாங்கள் பயப்படவில்லை என கூறியுள்ளார்.

error: Content is protected !!