news

News January 21, 2025

அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கியது: டிரம்ப்

image

அமெரிக்காவின் பொற்காலம் துவங்குவதாக டிரம்ப் தனது பதவியேற்பு விழாவில் உரையாற்றியுள்ளார். இதுவரை இல்லாத வகையில் வலுவான அமெரிக்காவை கட்டமைப்பேன் எனவும், அமெரிக்கர்களின் பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும் எனவும் அவர் அந்நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார். இந்த நாளில் இருந்து நாடு செழித்து உலகம் முழுவதும் மதிக்கப்படும் என்றும், துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் எனவும் கூறியுள்ளார்.

News January 21, 2025

மரண தண்டனை வேண்டும்: மம்தா எடுத்த முடிவு

image

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது ஏமாற்றமளித்ததாக அம்மாநில மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். சியால்டா கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டை நாட உள்ளதாகவும், மரண தண்டனை விதிக்க தனது அரசு வலியுறுத்தும் எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில், இந்த தண்டனை போதாது என்று பலரும் போராடி வருகின்றனர்.

News January 21, 2025

2ஆவது முறையாக அமெரிக்க அதிபரானார் டிரம்ப்

image

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் 2ஆவது முறையாக பதவியேற்றார். ஜார்ஜ் புஸ்ஸுக்கு பிறகு 2ஆவது முறை அதிபராகும் நபர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். அவரது கடந்த 2020 ஆட்சியில், இனவெறி, எல்லை மற்றும் குடியுரிமை விவகாரங்களில் கடுமையாக நடந்து கொண்டது என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாகவே, ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனை மக்கள் தேர்ந்தெடுத்தனர். ஆனால், அத்தோல்வியை டிரம்ப் ஏற்றுக் கொள்ளவில்லை.

News January 21, 2025

BREAKING: துணை அதிபரானார் JD வான்ஸ்

image

அமெரிக்காவின் 50வது துணை அதிபராக JD வான்ஸ் பதவியேற்றுக் கொண்டார். கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் நடந்துவரும் பதவியேற்பு விழாவில், அவருக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் ஜோ பைடன், அமைச்சர் ஜெய்சங்கர், அம்பானி உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். வான்ஸின் மனைவி இந்திய வம்சாவளி என்பது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2025

அதிபராக பதவியேற்கும் நான், பைபிள் மீது சத்தியமாக…

image

இன்று அதிபராக பதவியேற்கும் டிரம்ப், உறுதிமொழி ஏற்க இரண்டு பைபிள்களை பயன்படுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதலாவது ஆபிரகாம் லிங்கன் 1861-ல் அதிபராக பதவியேற்றபோது பயன்படுத்திய பைபிள். இரண்டாவது, டிரம்ப்பின் சொந்த பைபிள். அமெரிக்க அதிபராக பதவியேற்கும் பலரும் லிங்கனின் பைபிளை பயன்படுத்தவே விரும்புவர். இதை ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கின்றனர். அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் லிங்கன்.

News January 20, 2025

அதிபராக பைடனின் கடைசி செல்ஃபி

image

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், விடை பெறப்போகும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் வெள்ளை மாளிகையில் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் பைடன் முன்னாள் அதிபர் ஆக இருக்கிறார். அமைதி, ஜனநாயக கருத்துகளை பேசினாலும், போரை நிறுத்த விடாமல், உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி செய்தது அவரது ஆட்சியின் விமர்சனங்களாக நீடித்து வருகின்றன.

News January 20, 2025

JIO வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. ₹100 அதிகரிப்பு

image

JIO Postpaid பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. JIO ₹199 திட்டத்தை ஒரே நேரத்தில் ₹100 அதிகரித்து, இப்போது ₹299ஆக விலை நிர்ணயம் செய்துள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணம் ஜன.23 முதல் அமலுக்கு வரும். தற்போது, ​​ ₹199 திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் தானாகவே ரூ.299 திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள். இதில் வரம்பற்ற அழைப்பு, மாதத்திற்கு 25 ஜிபி டேட்டா அடங்கும். இத்திட்டத்தில் புதிதாக இணைந்தால் ₹349.

News January 20, 2025

மர்மநோயால் அதிகரிக்கும் பலி: குழப்பத்தில் அரசு

image

J&Kல் உள்ள ரஜௌரி மாவட்டத்தின் பதால் கிராமத்தில் மர்ம நோய் ஒன்று மனிதர்களை வேட்டையாடி வருகிறது. கடந்த டிசம்பரில் முதல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அக்கிராமத்தில் வசிக்கும் 3,000 பேரை பரிசோதித்தும், என்ன நோய் என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நிலைமையை உணர்ந்து மத்திய, மாநில அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை அமித்ஷா அமைத்துள்ளார்.

News January 20, 2025

₹5,600,830,000,000,000… இந்தியா இழந்த செல்வம்

image

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், தங்கள் நாட்டுக்கு கொள்ளையடித்து சென்ற செல்வத்தின் மதிப்பு ₹5,601 லட்சம் கோடி என்று ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ‘Takers, Not Makers’ என்ற அந்த அறிக்கையில், பிரிட்டனில் பணக்கார வர்க்கம் உருவாக இதுதான் காரணம் என்றும், உலகப் பொருளாதாரத்தில் 1750-ல் 25% இருந்த இந்தியாவின் பங்களிப்பு, ஆங்கிலேயரின் சுரண்டலால், 1900-ல் 2% ஆகக் குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 20, 2025

தனியார் ஹாஸ்பிட்டல்களில் இலவச தடுப்பூசி

image

TNல் தனியார் ஹாஸ்பிட்டலில் குழந்தைகளுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தடுப்பூசி அட்டவணையின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. தனியார் ஹாஸ்பிட்டல்களில் இந்த தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் உள்ளது. இந்நிலையில், உரிய கட்டமைப்பு கொண்ட அனைத்து தனியார் ஹாஸ்பிட்டல்களிலும் இதனை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!