India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சிறப்பு புலனாய்வுக்குழு சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
▶ஜனவரி – 21 ▶தை – 08 ▶கிழமை: செவ்வாய்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04.30 PM – 05.30 PM
▶கெளரி நல்ல நேரம்: 01:30 AM – 02:30 AM & 07:30 PM – 08:30 PM
▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 PM
▶குளிகை: 12:00 PM – 01:30 PM
▶திதி: அஷ்டமி ▶சூலம்: வடக்கு
▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: பூரட்டாதி
▶நட்சத்திரம் : சித்திரை இ 11.43
கலைஞர் மீது அதிக பாசம் கொண்டவர் எஸ்.வி.சேகர் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எஸ்.வி.சேகரின் நாடக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், எஸ்.வி.சேகருக்கு தத்துவப் பிள்ளை எனும் பட்டம் கொடுத்தவர் கலைஞர் என்றார். 7,000-வது நாடகத்தை நடத்த மிகப்பெரிய திறமை வேண்டும், அதை சிறப்பாக எஸ்.வி.சேகர் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
மகளிர் ஆஷஸ் டி20 தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 198 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பெத் மூனி 75 ரன்கள் எடுத்தார். 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 16 ஓவரில் 141 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது.
இன்று (ஜன.21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அரசியலை தூய்மைப்படுத்துவதற்காகவே வந்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் அதை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள அவர், வாக்கு அரசியலுக்காக அதை பயன்படுத்தினால் கடுமையாக எதிர்ப்போம் எனவும் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு ₹10 லட்சம் கோடி கடனில் இருப்பதாகவும், அடிப்படை தேவைகளுக்கு செலவு செய்யாமல், தேவையில்லாதவைகளுக்கு அரசு பணத்தை செலவு செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.
தொழிலதிபர் அம்பானி தனது மகன் திருமணத்தில், உலக பேமஸான ஜஸ்டின் பீபரையும், ரிஹானாவையும் பாட வைத்து கெத்து காட்டினார். அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில், அதானியும் களமிறங்கியுள்ளார். தனது மகன் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் பாட, டெய்லர் ஸ்விஃப்ட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு ஓகே சொல்லும் பட்சத்தில், இந்தியாவில் அவர் நடத்தும் முதல் இசை நிகழ்ச்சியாக இது இருக்கும்.
அமெரிக்க அதிபராக பதவியேற்று கொண்ட டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா- இந்தியா இடையேயான உறவு மேம்படவும், உலகிற்கு செழிப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காகவும் மீண்டும் ஒரு முறை டிரம்புடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். டிரம்பிற்கு பல நாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் தென் எல்லைப்பகுதிகளில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். பைடனை அருகில் வைத்துக்கொண்டே, அவரின் ஆட்சியில் எல்லை பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை; இயற்கை பேரிடர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சித்த டிரம்ப் , சட்டவிரோத அகதிகளின் ஊடுருவல்கள் உடனே நிறுத்தப்படும். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டுவேன் என சூளுரைத்தார்.
➤மேஷம் – பாராட்டு ➤ரிஷபம் – சிந்தனை ➤மிதுனம் – ஆர்வம் ➤கடகம் – பரிசு ➤சிம்மம் – நன்மை ➤கன்னி – சினம் ➤துலாம் – மகிழ்ச்சி ➤விருச்சிகம் – பிரீதி ➤தனுசு – தனம் ➤மகரம் – சுகம் ➤கும்பம் – போட்டி ➤மீனம் – புகழ்.
Sorry, no posts matched your criteria.