India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிப்ரவரி 1ஆம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் வருமான வரி விதிப்பில் பல மாற்றங்களை செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. புதிய வரி விதிப்பு முறையில் Standard deduction தற்போது ₹75,000ஆக உள்ளது. அதனை ₹1 லட்சமாக உயர்த்தவும், ₹12 முதல் ₹15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் 20%க்கு பதிலாக 15% வரி செலுத்தவும் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள் 1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சி. 2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி. 3. சிவசுப்ரமணிய சுவாமி கோவில், தர்மபுரி. 4. தாயுமானசுவாமி கோவில், திருச்சி. 5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், தென்காசி. 6.மயூரநாதசுவாமி கோவில், ராஜபாளையம். 7. முல்லைவனநாத சுவாமி கோவில், திருக்கருகாவூர். 8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், ராஜபாளையம். 9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.
பாஜகவின் அடிமட்ட அடிமையாகவே இபிஎஸ் மாறிவிட்டதாக அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை விவகாரத்தில் அண்ணாமலையும் EPSஉம் பதிவிட்டிருந்த கண்டன X போஸ்ட் ஒரே மாதிரியாக இருந்தது. அதனை கேலி செய்துள்ள சிவசங்கர், பாஜகவில் யாரோ எழுதிக்கொடுக்கும் அறிக்கையை இபிஎஸ் பதிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர்களின் கள்ளக்கூட்டணி நிரூபணமாகி உள்ளதாகவும் அமைச்சர் விமர்சித்துள்ளார்.
இந்த உலகம் இதுவரை பார்த்திராத சிறந்த வீரர் விராட் கோலி என முன்னாள் கேப்டன் கங்குலி கூறியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இன்றளவும் அவருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்றும், கோலியின் ஃபார்ம் பற்றி தான் கவலைப்படுவது கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கோலி சிறப்பாக விளையாடுவார் என்றும் அவர் நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
NTK வேட்பாளர் சீதாலட்சுமி மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கருங்கல்பாளையம் பகுதியில் அவர் அனுமதியின்றி பரப்புரை செய்ததாக பறக்கும் படை அதிகாரி நவீன் குமார் அளித்த புகாரின் பேரில், சீதாலட்சுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னதாக நேற்று காலை ஈரோடு பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி வாக்கு சேகரித்ததாக, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சனை பெரிதாகிவிடும். உதடு, கன்னம், நாக்கு பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். கோவைக்காயில் சாம்பார், கூட்டு செய்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண், உதடுவெடிப்பு குணமாகும் மணத்தக்காளி இலைகள் சாப்பிடுவதும் புண்ணை விரைந்து ஆற்றும்.
ரிஷப் பண்ட்க்கு LSG அணி ஜெர்ஸி அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வழங்கினார். சமீபத்தில் நடந்த IPL மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு அவரை LSG வாங்கியது. இதன்மூலம், 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக பண்ட் மாறியுள்ளார். அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து தகுதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் பண்டிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் உட்பட எம்.ஜி.ஆர் பெயரை சொல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது அதிமுக தலைவர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கட்சி ஆரம்பிக்கும் அனைவரும் எம்ஜிஆர் பெயரை தவறால் உச்சரிக்காமல் வேண்டும் எனவும், அவரை தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும், 2026 தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் டி மினார் காலிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சன், முன்னணி வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார். இதில், டி மினார் 6-0, 7-6 (7-5), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் மைக்கேல்சனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். ஜன்னிக் சின்னெரை காலிறுதியில் அவர் எதிர்கொள்ள உள்ளார்.
‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலம் ஒரே ஆண்டில் 12.80 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். இத்திட்டம் மூலம் 15 அரசுத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை போன்ற 44 அடிப்படை பொதுசேவைகள் வழங்கப்படுவதாகவும், திட்டம் தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் மக்களிடையே இது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.