news

News January 21, 2025

விஜய்க்கு நடிகர் சிபிராஜ் ஆதரவு

image

விஜய் தவெ கட்சியைத் தொடங்கியதில் இருந்து பல திரைப்பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் சத்யராஜின் மகன் சிபிராஜும் இணைந்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், கட்சித் துண்டுடன் விஜய் இருக்கும் படத்தை பதிவிட்டு ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக, நேற்று முன்தினம் இவரது சகோதரி திவ்யா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2025

அமெரிக்காவில் இனி 2 பாலினங்கள் மட்டுமே

image

அமெரிக்காவில் சமீப காலமாக LGBTQ+ சமூகத்தினருக்கான ஆதரவு அதிகரித்து வந்தது. ஆனால், டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளிலேயே அந்த போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். நேற்றைய அவது பேச்சில், அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார். இதற்கு LGBTQ+ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

News January 21, 2025

இந்தியன் 2வை ஃபாலோ பண்ணும் விடாமுயற்சி

image

தமிழகத்தில் அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிடப்பில் இருந்து இந்தியன் 2 படத்தை மீண்டும் தூசித்தட்டி அப்படம் வெளிவர பெரிய உதவியை ரெட் ஜெயண்ட் நிறுவனமே செய்தது. ஆனால், படம் பெரிய லாபத்தை அளிக்கவில்லை. இருப்பினும் மீண்டும் லைகா – ரெட் ஜெயண்ட் விடாமுயற்சி படத்திற்காக கைகோர்த்துள்ளனர். படம் வரும் பிப் 6ம் தேதி வெளியாகிறது.

News January 21, 2025

திருப்பதி உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

image

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் சொர்க்கவாசல் நிகழ்வு 10 நாள்கள் நடைபெற்றது. அப்போது, 6 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். 1 லட்சத்து 83 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கையாக ₹34 கோடியே 43 லட்சம் வசூல் ஆகியிருக்கிறது. சுமார் 1.20 லட்சம் பக்தர்கள் ₹300 டிக்கெட்டில் தரிசனம் செய்தனர்.

News January 21, 2025

சிக்கன் சாப்பிட்ட 2 பேர் பலி

image

பெரிய பாளையம் அருகே செங்கல் சூளையில் பணியாற்றிய 10க்கும் மேற்பட்டோர் வாந்தி எடுத்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. வட மாநிலத்தைச் சேர்ந்த அவர்களை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து வந்தோர், சிக்கன் சாப்பிட்டபின் இப்படி ஆனதாகத் தெரிவித்தனர். விசாரணையில், கோழியில் இருந்து நீக்கப்படும் குடல் போன்ற உறுப்புகளை வாங்கி சமைத்தது தெரியவந்துள்ளது. ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

News January 21, 2025

கிரிப்டோ கரன்சி சந்தையில் நுழைந்த ஜியோ?

image

பாலிகான் லேப்ஸ் உடன் இணைந்து, கிரிப்டோ கரன்சி சந்தையில் ரிலையன்ஸ் JIO நிறுவனம் நுழைந்துள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது Bitcoin மதிப்பு உயர்ந்து வருவதால், அதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோஸ் பியர் வெப் பிரவுசர் பயன்படுத்தும் பலரும், ஜியோ காயின் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

News January 21, 2025

BCCIக்கு கட்டுப்பட்ட விராட் கோலி!!

image

உள்ளூர் போட்டிகளில் தேசிய அணியில் இருக்கும் வீரர்கள் விளையாடுவதை BCCI கட்டாயமாக்கியது. ஆனால், கோலிக்கு கழுத்து வலி ஏற்பட்டதால், ரஞ்சி தொடரில் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், தற்போதைய செய்திகளின் படி அவர் ரஞ்சி தொடரில் டெல்லி அணிக்காக ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக களமிறங்குவார் எனப்படுகிறது. போட்டி வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

News January 21, 2025

செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபட்டால்….

image

செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுவது பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து முருகனை வழிபடும் போது, செல்வம் பெருகி, செவ்வாய் தோஷம் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம். அதிகாலையில் நீராடி, முருக பெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் விரதத்தை முடிக்கும் வரையில் பால், பழச்சாறு மட்டுமே அருந்தி கந்தசஷ்டி கவசத்தை உச்சரித்த படி விரதம் இருக்க வேண்டும்.

News January 21, 2025

மாற்றுத்திறனாளிகளை ஒதுக்கிவிடக் கூடாது

image

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காகதான் ‘வணங்கான்’ போன்ற படங்களை எடுப்பதாக பாலா தெரிவித்துள்ளார். ‘வணங்கான்’ பட வெற்றி விழாவில் பேசிய அவர், குற்றம் செய்பவர்களுக்கு இத்திரைப்படத்தில் காட்டிய தண்டனையை விட கூடுதலாக தண்டனை வழங்க வேண்டும் என்பது தனது ஆசை என்றார். மாற்றுத்திறனாளிகளை பரிதாபமாக பார்த்து ஒதுக்கிவிடக் கூடாது எனவும், நம்மை நம்பிதான் அவர்கள் வாழ்வதாகவும் கூறினார்.

News January 21, 2025

காலையில் எழுந்ததும் இதனை செய்தால்…

image

காலையில் எழுந்திருக்க ஒரு வழக்கமான நேரத்தை அமைப்பது முக்கியம். இது அறிவாற்றல் செயல்பாட்டை கணிசமாக மேம்படுத்தும். தூக்கத்தின் தரமும் மேம்படும். நாள் முழுக்க கவனம், நினைவாற்றலை அதிகரிக்கலாம்.
மூளை ஆரோக்கியத்திற்கு சத்தான காலை உணவு இன்றியமையாதது. முட்டை, பெர்ரி, நட்ஸ் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை அறிவாற்றலை ஆதரிப்பது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் மனநிலையை சீராக வைத்திருக்கும்.

error: Content is protected !!