India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எத்தியோப்பியாவில் முலுவர்க் அம்பாவ் என்ற பெண் 16 ஆண்டுகள் சாப்பாடு, தண்ணி இல்லாமல் வாழ்வதாக கூறுகிறார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது குடலில் எவ்வித உணவு, நீரின் தடயங்கள் இல்லை, எவ்வித மனநலம் பாதிப்புகளும் அவருக்கு இல்லை என்கின்றனர். தனது 10 வயதில் திடீரென பசி எடுக்காமல் போக, அன்றிலிருந்து உணவை எடுத்துக்கொள்வதில்லை என்று கூறி, நம்பாதவர்கள் தன்னுடன் வந்து தங்குமாறும் சவால் விடுகிறார்.
வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இன்றுடன்
2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மனதை உறைய வைக்கும் இந்த இழிச்செயலை செய்தவர்கள் கைது செய்யப்படவில்லை. ஒரு நபர் ஆணையம் அமைப்பு, CBCID விசாரணை, DNA சோதனை என இன்றுவரை எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் வழக்கின் விசாரணை மர்மம் விலகாது தொடர்கிறது. இது திமுக அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 படத்தின் “தம்முண்டே பட்டுக்கோரா” என்ற பாடல் இணையத்தில் வெளியானது. தம்முண்டே பட்டுக்கோரா என்றால் “முடிஞ்சா என்ன புடி” என அர்த்தம். படத்தில் வில்லனான போலீஸ் ஃபாகத் ஃபாசிலை பார்த்து இதனை பாடுவார் அல்லு அர்ஜுன். தற்போது சூழலில் இது தேவையற்ற பிரச்னையை உண்டாக்கும், போலீசாரை நேரடியாக தாக்கும் விதமாக அமைந்துள்ளது என கமெண்ட் அதிகரிக்க, இணையத்தில் தற்போது பாடல் டெலிட் செய்யப்பட்டுள்ளது. எதுக்கு?
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் FIR வெளியாகியுள்ளது. அதில், மாணவி தனது ஆண் நண்பருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து பேராசிரியரிடம் காண்பித்து TC தர வைப்பேன் எனவும், தந்தைக்கு அதனை அனுப்புவேன் என்றும் மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அடிபணியவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவேன் என வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரமே தமிழகத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மீண்டும் மீண்டும் யு டர்ன் அடித்து கடலுக்குள் சென்றது. தற்போது, ஒருவழியாக இது வலுவிழந்திருக்கிறது. இனி, தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் டிச.,27 சென்னை வந்து, ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை செல்ல இருந்தார். இந்நிலையில், வங்கக்கடலில் தமிழகத்தை ஒட்டி, காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வானிலை மாறியுள்ளது. இதனால், பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு, ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பழைய வாகனங்களை விற்கும்போது லாபத்தில் 18% GST வசூலிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. தொழில் ரீதியாக கார்களை விற்பவர்களுக்கு மட்டுமே இந்த வரி பொருந்தும் எனக் கூறப்படுகிறது. எனினும், இந்த புதிய GST வரி விதிப்புக்கு பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த வரி அவ்வளவு சுமையல்ல என FM நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?
* ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் கேஸ் சிலிண்டர் விலை மாற்றியமைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஜனவரி 1ஆம் தேதி மாற்றம் வரலாம்.
* பங்குச்சந்தை Options Expiry தேதிகளை NSE மாற்றியுள்ளது.
* GST செலுத்தும் அனைவருக்கும் MFA (Multi Factor Authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
* பங்குச்சந்தையில் ITC நிறுவனத்தில் இருந்து ஓட்டல் தொழில் தனியாக பிரிகிறது.
* பழைய ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் வாட்ஸாப் இயங்காது.
தமிழகத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார மையங்களில் 31ம் தேதி வரை நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நிமோனியா மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட 5 வகையான நோய்களில் இருந்து பாதுகாக்க குழந்தை பிறந்து 4, 10, 14வது வாரங்களில் பென்டாவலன்ட் தடுப்பூசி போடப்படுகிறது. உரிய தவணையில் தடுப்பூசி செலுத்த தவறியவர்கள், இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
காலை எழுந்ததும் முதல் 1 மணி 20-20-20 என்ற ரூலின் படி, செய்யும் சில வேலைகள் வாழ்க்கையே மாற்றும் என்கிறார், The Power of 5 AM புத்தகத்தை எழுதிய ராபின் ஷர்மா. முதல் 20 நிமிடங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளவேண்டும். 2வது 20 நிமிடங்களில் தியானம் பண்ணனும். 3வது 20 நிமிடங்களில் ஊக்கம் அளிக்க கூடிய புத்தகத்தை படிக்கவோ, Podcast கேட்கவோ சொல்கிறார். இதனை 21 நாள்கள் செய்து தான் பாருங்களேன்?
Sorry, no posts matched your criteria.