India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீலகிரியில் இயங்கி வரும் மத்திய வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாகவுள்ள 141 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. Tenure Based CPW பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் அஞ்சல் வழியே விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18-35. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு AOCP Trade பிரிவில் NAC/ NTC. சம்பளம்: ₹19,900+ DA. தேர்வு முறை: திறன் தேர்வு. கூடுதல் தகவலுக்கு <
பழைய வாகனங்கள் விற்பனைக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டதற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், “18% ஜிஎஸ்டி வரி விதிப்பை பெரும்பான்மையான வாகன உரிமையாளர்கள் எதிர்க்கிறார்கள். இந்த வரி அவ்வளவு சுமையல்ல என சொல்லும் நிதியமைச்சரின் விளக்கத்தைப் பார்த்த பிறகு அரசைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. ‘குதிரை கீழே தள்ளியது மட்டுமல்ல, குழியும் பறித்ததாம்’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது” என்றார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்திருக்கிறது. நேற்று ₹56,800க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹57,000ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று, ₹7,100ஆக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை, இன்று ₹25 உயர்ந்து ₹7,125க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹100க்கு விற்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் அடையாளங்கள் அடங்கிய FIRஐ போலீசார் சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அந்த FIRஇல் அவரது பெயர், வயது, முகவரி ஆகிய தகவல்கள் அடங்கியுள்ளன. அதோடு, குற்றவாளி எப்படிப்பட்ட சீண்டல்களில் ஈடுபட்டார் என்ற முகம் சுளிக்க வைக்கும் தகவலும் உள்ளன. போலீஸ் கவனமாக இருக்க வேண்டாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எங்களை போன்றவர்களுக்கு ஐயா நல்லகண்ணு தொடர்ந்து வழிகாட்ட வேண்டுமென CM ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு நடந்த விழாவில் பங்கேற்ற அவர், நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை, வாழ்த்து பெற வந்துள்ளேன் என்று கூறினார். மேலும், அவர் திராவிட மாடல் ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கு உறுதுணையாக விளங்கிக் கொண்டிருப்பவர் என்றும் புகழ்ந்தார்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். காதலனுடன் இருந்த மாணவியை மிரட்டி தனியாக அழைத்துச் சென்று ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது தொடர்பாக ஏற்கெனவே குற்றவாளி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள விஜய் IAS, IPS போன்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளை தவெக.,வுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்துடன், சமூகம் & சூழலியல் செயல்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், டாக்டர்களை இலக்கு வைத்து வேட்பாளர் தேடுதல் குழு களமிறங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. களத்தில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் த.வெ.க,.வினருக்கு இவர்களின் வருகை நிச்சயம் உற்சாகத்தை அளிக்கும்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பகத் ஃபாசில். கோலிவுட், டோலிவுட் கலைப்பயணத்தைத் தொடர்ந்து, விரைவில் அவர் பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார். அவர் நடிக்கும் படத்தை இம்தியாஸ் அலி இயக்கவுள்ளார். அந்தப் படத்துக்கு ‘த இடியட் ஆஃப் இஸ்தான்புல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் பகத் ஃபாசில் ஜோடியாக திரிப்தி டிம்ரி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கப்பட இருக்கிறது.
சமத்துவத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த நல்லக்கண்ணு இன்று 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த அவர், 18 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார். 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். சாதியக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர் நல்லக்கண்ணு.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மதியம் 1 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.