India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காமக்கொடூரன் ஞானசேகரன் மேலும் ஒரு மாணவியை இதேபோன்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று இபிஎஸ் சாடியுள்ளார். கைது செய்யப்பட்ட ஞானசேகரன், நேற்று இரவே விடுவிக்கப்பட்டு, மீண்டும் கைதானதாக கூறப்படுகிறது. FIR-ல் ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் இதில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. யார்_அந்த_SIR ? என்று ஹேஷ்டேக்குடன் EPS கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகிலேயே அதிகபட்சமாக டென்மார்க்கில் அதிகம் பேர் கேன்சரால் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. அங்கு 1 லட்சம் பேரில் 335 பேர் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக அயர்லாந்து (326), பெல்ஜியம் (322), ஹங்கேரி (321), ஃபிரான்ஸ் (320), நெதர்லாந்து (315), ஆஸ்திரேலியா (312), நார்வே (312) ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் 163ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 96 பேர் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி என காவல்துறை விளக்கமளித்துள்ளது. புகாரில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே பதிவு செய்வதுதான் FIR. வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மாணவியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஒளிபரப்பப்பட்டாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ நடவடிக்கை பாயும் எனவும் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா தங்களுடன் இணைய வேண்டும் என அந்நாட்டு அதிபராக தேர்வாகியுள்ள ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். அவ்வாறு இணைந்தால் மக்களின் வரி 50%-க்கும் மேல் குறையும், தொழில்கள் இருமடங்கு பெருகும் என்றும் ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ‘கவர்னர்’ என ட்ரம்ப் குறிப்பிட்டு இருந்தது கவனிக்கத்தக்கது.
2023-24ஆம் ஆண்டில் தனிநபர்கள், அறக்கட்டளைகள் & நிறுவனங்களிடமிருந்து ₹2,244 கோடியை நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது. ECI அறிக்கையின்படி, பாஜகவுக்கு அதிகபட்சமாக Prudent Electoral Trust மட்டும் ₹723.6 கோடி நன்கொடை அளித்துள்ளது. இதே டிரஸ்ட் காங்கிரஸுக்கு ₹156.4 கோடி அளித்துள்ளது. கடந்தாண்டு ₹ 79.9 கோடி நன்கொடையாக பெற்ற காங்., இந்தாண்டு ₹288.9 கோடி நன்கொடை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில் 2 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களுக்கு நீதி கிடைக்காததற்கு, திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “வழக்கு CBCID போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டும் இன்னமும் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. இதில் குற்றவாளி யார் என ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். இதற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்” என்றார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து பான் இந்தியா படமாக வெளியான ‘புஷ்பா 2’ திரைப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கி வருகிறது. வெளியான 21 நாள்களில், உலக அளவில் அத்திரைப்படம் ₹1,705 கோடியை வசூலித்துள்ளது. 2024ல் அதிவிரைவாக இவ்வளவு தொகையை வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. ஹிந்தியில் மட்டும் ₹700 கோடியையும், மும்பையில் ₹200 கோடியையும் அப்படம் வசூலித்துள்ளது.
தூத்துக்குடியில் டிச.30ஆம் தேதி புதுமைப் பெண் திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்க்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. இனி அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படும். இதன் விரிவாக்கத் திட்டத்தை வரும் 30ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. *செக்யூரிட்டிகள் ID கார்டு கேட்டால் கட்டாயம் காட்ட வேண்டும். *ஹாஸ்டலுக்கு தாமதமாக வர நேர்ந்தால் வார்டனிடம் முன்கூட்டியே கூற வேண்டும். *தகவல் அளிக்காமல் விடுதிக்கு வந்தால் பெற்றோரிடம் தெரிவிக்கப்படும். *மாலை 6.30க்குள் ஹாஸ்டலுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் தேசிய உணவாக பிரியாணி மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. ஸ்விக்கியில் இந்த ஆண்டு ஆர்டர் செய்த உணவுகளின் லிஸ்டில் பிரியாணிதான் டாப்பில் உள்ளது. அந்த வகையில், 1 நிமிடத்திற்கு 158 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டிருப்பது, தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2023ல் 150ஆகவும், 2022ல் 137ஆகவும் இருந்துள்ளது. அதேபோல், 2020ல் 115ஆகவும் உள்ளது.
Sorry, no posts matched your criteria.