news

News January 22, 2025

எலான் மஸ்க்கிற்கு ஜெர்மனி அதிபர் கண்டனம்

image

எலான் மஸ்க்கின் விமர்சனத்துக்கு ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெர்மனி அதிபரை திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் மஸ்க் கூறியிருந்தார். இது தொடர்பாக பேசிய ஜெர்மன் அதிபர், கோடீஸ்வரர் ஆக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சரி, விரும்பியதை பேசலாம், ஆனால், வலதுசாரி கட்சியை ஆதரிப்பவர்களை ஏற்க முடியாது என்றார்.

News January 22, 2025

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம்? ட்ரம்ப் பேச்சு

image

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்கா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். பைடனுக்கு பதில் தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால், இருநாடுகளுக்கும் இடையே போரே மூண்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார். எந்த ஒரு பிரச்னைகளுக்கும் போர் நிரந்தர தீர்வாகாது என்றும், இனி போர்களை ஏற்படுவதை உலக நாடுகள் விரும்பாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News January 22, 2025

பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி வெற்றி

image

இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாத்விக்-சிராக் ஜோடி 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி- சிராக் செட்டி ஜோடி, சீன தைபேவின் சென் ஸி ரே – லின் யூ சீஹ் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 21-16, 21-15 என்ற செட் கணக்கில் சீன ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு இந்திய ஜோடி முன்னேறியது.

News January 22, 2025

வருண்குமார் வழக்கில் சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

image

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில், சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சீமான் மீது, வருண்குமார் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்கள் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் 19ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சீமான் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

காமகோடியை பதவி நீக்கம் செய்ய எஸ்டிபிஐ வலியுறுத்தல்

image

கோமியம் குடித்தால் ஜுரம் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேச்சுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களை கூறி வரும் காமகோடி தலைமையில், சென்னை ஐஐடி செயல்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாழாகும் எனவும் அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காமகோடியை உடனடியாக அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

News January 22, 2025

IND Vs ENG: முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்

image

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இதுவரை இங்கிலாந்துடன் மோதிய 24 டி20 ஆட்டத்தில், இந்தியா 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியாவில் கடந்த 14 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News January 22, 2025

குரூப் 1 மூலம் தேர்வான 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

image

குரூப் 1 மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்த 25 போலீஸ் எஸ்பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யுபிஎஸ்சி மூலம் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதைப் போல, குரூப் தேர்வு மூலம் தேர்வாகும் நபர்களுக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். இது கடந்த 2018 ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசின் பரிந்துரையின் படி தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

News January 22, 2025

வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல்

image

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாளை இந்த வழக்கு பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. சிபிசிஐடி விசாரிக்கும் இந்த வழக்கில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை பரவலாக எழத்தொடங்கியது.

News January 22, 2025

முதல்வர் ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

image

மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்ட உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். சிவகங்கைச் சீமையின் பெருமைக்கு மேலும் வலுசேர்க்கும் தமிழக முதல்வருக்கு, தனது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமையப்பெறும் இந்த திருவுருவச் சிலைகளுக்கு, முதல்வர் இன்று காலை அடிக்கல் நாட்டுகிறார்.

News January 22, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶நான் ஒருபோதும் எதையும் அவமானமாகக் கருதியதில்லை. ஏனென்றால், வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம். ▶சரி, தவறு என்பதெல்லாம், அவரவர் வாழும் சூழ்நிலையும், வளர்ந்த விதமும், கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை, உங்கள் சரி, எனக்கு தவறு. ▶வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. ▶ஒரு அனுபவம் இன்னொரு அனுபவத்திற்குத் தடையாகிப் போகும்.

error: Content is protected !!