news

News December 27, 2024

8 மடங்கு மோசடி அதிகரிப்பு.. ரூ.21,397 கோடி அம்பேல்

image

வங்கிகளில் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.21,397 கோடி மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. 2023இல் இதே காலகட்டத்தில் ரூ.23,863 கோடி மோசடி நடந்ததுள்ளது. இது 2024இல் ரூ.13,175 கோடியாக குறைந்துள்ளது. ஆனால் 2025 நிதியாண்டின் முதல் அரையாண்டில் இது அதிகரித்துள்ளது. மொத்தம் 18,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 8 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

News December 27, 2024

2 வீடு, ஒரு மாருதி 800 கார்: 10 ஆண்டு பிரதமரின் முழு சொத்து

image

பிரதமராக 10 ஆண்டுகள் (2004-14) பதவி வகித்த மன்மோகன் சிங், 2018ல் ராஜ்யசபாக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, ​​அவரிடம் ₹15.77 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டார். டெல்லி, சண்டிகரில் 2 FLAT, மாருதி 800 கார், SBI, தபால் வங்கிகளில் டெபாசிட் இருப்பதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். மேலும், தனக்கு கடன் இல்லை என குறிப்பிட்டது அவரின் நிதி ஒழுக்கத்திற்கான சான்றாகும்.

News December 27, 2024

டீன்-ஏஜ்ஜில் சல்மான் கான் மீது காதல் கொண்டிருந்த சுஷ்மிதா

image

சுஷ்மிதா சென் தனது டீன்-ஏஜ் பருவத்தில் சல்மான் கான் மீது கொண்ட காதலை பற்றி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘மெய்னே பியார் கியா’ படம் வெளிவந்தபோது, எனக்கு கிடைக்கும் பணத்தில் சல்மானின் புகைப்படங்களை வாங்கி குவிப்பேன். இந்த போஸ்டர்கள் எனக்கு புனிதம் வாய்ந்தவை. ‘பீவி No-1’ படத்தில் நடித்தபோது இந்த விஷயங்களை அவரிடமே கூறினேன்” என்றார்.

News December 27, 2024

மண்ணெண்ணெய் விளக்கு ஒளியில் படித்த மன்மோகன் சிங்

image

சிறு வயதிலேயே தாயை இழந்த மன்மோகன் சிங், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அவர் வசித்த காஹ் கிராமத்தில், மின்சாரம், பள்ளி இல்லை. இதனால், நீண்ட தூரத்தில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று படித்ததுடன், மண்ணெண்ணெய் விளக்கு ஒளியிலே படித்தார். ஏழ்மையிலும் கற்பதை மட்டும் நிறுத்தாத அவர், பேராசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின், பல உயரிய பதவிகளை வகித்தாலும் வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தார்.

News December 27, 2024

இழந்த பதவியை மீட்டுத் தரும் ஆட்சிபுரீஸ்வரர்

image

சம்பந்தரால் பாடல் பெற்ற பெருமை வாய்ந்த தொண்டை நாட்டின் செங்கையில் அமைந்துள்ளது ஆட்சிபுரீஸ்வரர் கோயில். சிவனின் தேர் அச்சு இற்று (முறிந்து) நின்ற இடம் என்பதால் இத்தலம் ‘அச்சு இறு பாகம்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றானது. பல்லவ பேரரசால் நிர்மாணிக்கப்பட்ட இத்தலத்திற்கு சென்று ஈசனை வணங்கினால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

News December 27, 2024

7 நாள்கள் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: காங்கிரஸ்

image

மன்மோகன்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று முதல் 7 நாள் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.சி. வேணுகோபால், மன்மோகன்சிங் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது என்று குறிப்பிட்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

News December 27, 2024

மன்மோகன் சிங்கின் அரிய புகைப்படங்கள்

image

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இந்நிலையில் அவர் குறித்த அரிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

News December 27, 2024

ஒரே கையெழுத்து.. ரூ.72,000 கோடி தள்ளுபடி

image

சட்டப்பேரவைத் தேர்தல்களில் தற்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாவது சகஜமாகிறது. இதற்கெல்லாம் மூலம் மன்மோகன்சிங்தான். ஆம். 2008ஆம் ஆண்டில் நாட்டின் பிரதமராக பதவியேற்றதும் அவர் ரூ.72,000 கோடி வேளான் கடன் தள்ளுபடிக்கான உத்தரவில் முதல் கையெழுத்திட்டார். இதனால் 3 கோடி விவசாயிகள் பயனடைந்தனர். இதனாலேயே 2ஆவது முறையாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தது எனலாம்.

News December 27, 2024

மன்மோகன் சிங் அரசியலுக்கு வந்தது எப்படி?

image

கடந்த 1991ல் PMஆக பதவியேற்ற நரசிம்மராவ், தன்னை நிதியமைச்சராக தேர்வு செய்ததாக பத்திரிகை ஒன்றிற்கு மன்மோகன் சிங் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இத்தகவலை தனக்கு தெரிவிக்க முதன்மை செயலரை அனுப்பியதாகவும், அதனை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அதற்கடுத்த நாள், நரசிம்ம ராவே தன்னை நல்ல உடை அணிந்து ஜனாதிபதி மாளிகைக்கு வரும்படி அழைத்ததாகவும், இப்படித்தான் அரசியலுக்கு வந்ததாகவும் கூறியிருந்தார்.

News December 27, 2024

10ஆம் தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு?

image

2024இல் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்பட்டது. 2025லிலும் இதேபோல்தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் வேட்டி, சேலைகளை 10ஆம் தேதிக்குள் ரேஷன் கடைக்குள் அனுப்பி வைக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதலால் 10ஆம் தேதிக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!