news

News January 22, 2025

இன்னும் 6 விக்கெட்டுகள் எடுத்தால்…

image

நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா சாதனை ஒன்றின் விளிம்பில் இருக்கிறார். இன்று தொடங்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் அவர், இன்னும் 6 விக்கெட்டுகள் மட்டும் கைப்பற்றினால், அந்த அணிக்கு எதிராக T20யில் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். 3 விக்கெட்டுகள் எடுத்தால், அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராவார். சாதிப்பாரா ஹர்திக்?

News January 22, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் மதியம் 3.30 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை இருக்கா?

News January 22, 2025

அமெரிக்க அதிபருக்கு இருக்கும் 4 விசித்திரமான கட்டுப்பாடுகள்

image

உலகின் அதிகாரமிக்க பதவியில் ஒன்றாக இருந்தாலும் அவர், *சாலையில் கார் ஓட்டக்கூடாது *தனியாக போனோ, சோஷியல் மீடியாவோ வைத்திருக்கக்கூடாது *பிள்ளைகள், பேரக்குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரி நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ளக்கூடாது *ஒரு துண்டு பேப்பரையும் குப்பையில் போடக்கூடாது, மின்னஞ்சலை டெலிட் பண்ணக்கூடாது. அவற்றை வெள்ளை மாளிகை ஊழியர்களே முடிவெடுப்பார்கள். அனைத்திற்கும் பாதுகாப்பே காரணம்.

News January 22, 2025

இபிஎஸ்க்கு சவால் விட்ட CM ஸ்டாலின்

image

திமுக அரசின் செயல்திட்டங்களோடு, அதிமுகவின் 10 ஆண்டுக் கால செயல்பாடுகளை ஒப்பிடத் தயாரா என இபிஎஸ்க்கு CM ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். திண்ணையில் அமர்ந்து வெட்டிக் கதை பேசுவதை போல், EPS வெட்டிப் பேச்சு பேசுவதாக சாடிய அவர், 550 வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றி திமுக அரசு வெற்றிநடை போடுவதாகவும் கூறியுள்ளார். முன்னதாக சிவகங்கையில் ₹376 கோடியில் முடிவுற்ற 45 திட்டங்களை CM திறந்து வைத்தார்.

News January 22, 2025

நாளை முதல் அரசுப் பள்ளிகளில் நூற்றாண்டு விழா

image

TNல் நூற்றாண்டைக் கடந்த 2,238 பள்ளிகளில் நாளை முதல் விழா நடத்துமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பள்ளிகளில் மாவட்ட வாரியாக ஆண்டு விழா, நூற்றாண்டு விழாவை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் எனவும், அதில் பெற்றோர், ஆசிரியர், முன்னாள், இந்நாள் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. நூற்றாண்டைக் கொண்டாடுவதன் மூலம் மக்களிடையே அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை வலுப்பெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

News January 22, 2025

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டோக்கன்

image

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்படும் என TTD அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, கடந்த 9ஆம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணு நிவாஸம், மலை அடிவாரத்தில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படவுள்ளன.

News January 22, 2025

கென் கருணாஸை ஹீரோவாக்கும் வெற்றிமாறன்!!

image

விடுதலை 2ல் ஆக்சனில் மிரட்டியிருப்பார் கென் கருணாஸ். அவரை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற வெற்றிமாறன் முடிவு செய்துவிட்டார் போலும். மலையாளத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘ஆலப்புழா ஜிம்கானா’ என்ற படத்தின் ரீமேக் ரைட்ஸை கென் கருணாஸுக்காக வெற்றிமாறன் வாங்க இருக்கிறாராம். ‘தள்ளுமாலா’ கலீல் ரஹ்மான் தான் இப்படத்தை இயக்குகிறார். பாக்சிங் கதைக்களமாம். முழு ஆக்சன் ஹீரோவாக கென் எப்படி இருப்பார்?

News January 22, 2025

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்றோருக்கு 21 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணபலனை கொடுக்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. CITU உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

News January 22, 2025

மஸ்க், சுந்தர் பிச்சை யூஸ் பண்ணும் போன் எது தெரியுமா?

image

ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்பாடு உலகில் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. உலகத்தில் முக்கிய இடத்தில் இருக்கும் எக்ஸ் CEO எலான் மஸ்க், கூகுள் CEO சுந்தர் பிச்சை ஆகியோர் எந்த போன்களை யூஸ் பண்றாங்க என தெரியுமா? அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் இந்த தகவல் கிடைத்துள்ளது. மஸ்க் Iphone 16 pro max போனை பயன்படுத்துகிறார். சுந்தர் பிச்சை Pixel 9 அல்லது Pixel 9 XL போனை உபயோகிக்கிறார்.

News January 22, 2025

‘பிறப்பு சுற்றுலா’ கேள்விப்பட்டிருக்கீங்களா?

image

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அந்நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதன் காரணமாக, பல நாடுகளை சேர்ந்த பெண்கள், தங்கள் பிரசவத்தின் போது, அமெரிக்காவை நோக்கி செல்வது வழக்கமாகவே கொண்டிருந்தார்கள். இதுவே ‘பிறப்பு சுற்றுலா’ அல்லது Birth tourism என்றார்கள். குடியுரிமை இல்லாத பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது என டிரம்ப் முடிவுரை எழுதிவிட்டார்.

error: Content is protected !!