news

News January 22, 2025

ரேஷன் கடைகளுக்கு ₹300 கோடி மானியம்

image

ரேஷன் கடைகளால் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட ₹300 கோடி முன்பண மானியத்தை விடுவித்தது TN அரசு. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 33,000 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இக்கடைகளின் வாடகை, EB பில், ஊழியர்கள் சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கி வருகிறது. இந்நிலையில், நிலுவையிலுள்ள மானிய தொகையை உடனடியாக வழங்குமாறு கூட்டுறவு சங்கங்கள் கோரிக்கை விடுத்த நிலையில், ₹300 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

அம்பானி மகன் திருமணத்தை மிஞ்ச பிளான் போடும் அதானி!!

image

அதானியின் மகன் ஜீத் அதானியின் திருமணம் பிப்ரவரியில் நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் கச்சேரியில் இருந்து 52 நாடுகளில் இருந்து செஃப்களை வைத்து அசத்தல் உணவு மெனுவும் தயாராகி வருகிறது. வெறும் ரங்கோலி போட மட்டும் 50 ஆயிரம் பேர் வரப்போகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அம்பானியை விட கிராண்டாக திருமணம் நடத்த வேண்டும் என முடிவெடுத்து விட்டார் போலும்.

News January 22, 2025

தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

image

துருக்கி ஹோட்டலில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76ஆக அதிகரித்துள்ளது. கர்த்தல்கயா ரிசார்ட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு தங்கியிருந்தோர் பலர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், 66 பேர் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அது 76ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

News January 22, 2025

ரோஹித் விஷயத்தில் உறுதியாக இருக்கும் BCCI

image

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான பிரஸ் மீட் மற்றும் போட்டோஷூட் நடைபெறுகிறது. இதில் கலந்துக்கொள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அனுப்பப்பட மாட்டார் என்பதில் BCCI உறுதியாக உள்ளது. ICC தொடர்களின் போட்டி நடக்கும் நாடுகளில் இந்த நிகழ்வுகள் நடப்பது சம்பிரதாயமான ஒன்று. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டில் அரசியலை கலக்க வேண்டாம் என ICCயிடம் கோரிக்கை வைத்துள்ளது.

News January 22, 2025

கெஜ்ரிவால் வைக்கும் 7 முக்கிய வேண்டுகோள்கள்

image

மத்திய அரசுக்கு AAP தலைவர் கெஜ்ரிவால் 7 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். *வரும் பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்திற்கு 10% நிதி ஒதுக்குக. *தனியார் பள்ளிகளில் கட்டணத்தைக் குறைத்து வரம்பு நிர்ணயம் செய்க. *உயர்க்கல்விக்கு மானியம் வழங்குக. *வருமான வரி விலக்கு ₹7லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்துக. *அத்தியாவசிய பொருட்களுக்கு GSTயை நீக்குக. *ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு 50% சலுகை வழங்க கோரியுள்ளார்.

News January 22, 2025

இதுவரைக்கும் 2 விஷயத்துக்குதான் பயந்தேன்

image

தனது சினிமா கெரியரில் 2 விஷயங்களுக்கு மட்டுமே பயப்பட்டதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதல் நாள் படப்பிடிப்பின்போதும், அப்படத்தின் ரிலீஸின்போதும் பயந்ததாகக் கூறினார். 25 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பது சாதாரண காரியம் அல்ல எனக் கூறிய மாதவன், மக்களின் ஊக்கம்தான் தன்னை தொடர்ந்து பயணிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.

News January 22, 2025

திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு?

image

ஈரோடு (கி) தொகுதியில் INDIA கூட்டணி சார்பில் போட்டியிடும் DMK வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளார். DMK, காங்., இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறிய அவர், திமுக வேட்பாளரை ஆதரித்து காங்., கட்சியினர் பிரசாரம் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். INDIA கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 22, 2025

‘புஷ்பா 2’ இயக்குநர் வீட்டில் ரெய்டு!

image

‘புஷ்பா 2’ திரைப்பட இயக்குநர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத் ஏர்போர்ட்டில் இருந்து சுகுமாரை அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். அதேபோல, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. முன்னதாக, தயாரிப்பாளர் தில் ராஜு வீட்டில் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது.

News January 22, 2025

MP தேர்தல் vs MLA தேர்தல்: யாரெல்லாம் போட்டியிடலாம்?

image

நாடாளுமன்ற தேர்தல்: 25 வயது நிறைந்த, MP தொகுதியில் வாக்களிக்கும் உரிமை பெற்ற இந்தியக் குடிமக்கள் யாரும் போட்டியிடலாம். (எந்த தொகுதியிலும் வாக்காளராக இருக்கலாம். உ-ம்: டெல்லி MP தொகுதி வாக்காளரான ராகுல் காந்தி, வயநாட்டில் போட்டியிட்டது). ராஜ்யசபா Min வயது 30. சட்டப்பேரவை தேர்தல்: 25 வயது நிரம்பிய, போட்டியிடும் மாநிலத்தில் எந்த தொகுதியிலாவது வாக்காளராகவும், இந்திய பிரஜையாகவும் இருக்க வேண்டும்.

News January 22, 2025

சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க மறுப்பு

image

சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது வன்முறையை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், தன் மீதான பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரியும் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார். இதில், நேரில் ஆஜராவதில் விலக்களிக்க மறுத்த கோர்ட், பிடிவாரண்டை திரும்பப் பெறக்கோரி விக்கிரவாண்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.

error: Content is protected !!