news

News December 28, 2024

படுத்த உடனே தூங்க இதை பண்ணுங்க!

image

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, 10-3-2-1 ஃபார்முலா பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்கப்போவதற்கு 10 மணி நேரத்திற்கு முன் டீ/காஃபி குடிப்பதை தவிர்க்கவும். 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே பணி செய்வதை நிறுத்துங்கள். மொபைல்/டிவி 1 மணி நேரத்திற்கு முன்பே ஆஃப் செய்யுங்கள். இதை கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.

News December 28, 2024

மாவுக்கட்டு ஏன்? காவல்துறை விளக்கம்

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் காலில் மாவுக்கட்டு போட்டது குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது. இதுகுறித்து காவல்துறை, கைது செய்ய சென்றபோது வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதன்காரணமாக அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டதாக விளக்கமளித்துள்ளது.

News December 27, 2024

பெண்களே இந்த App-ஐ Download செய்யுங்க

image

அனைத்து பெண்களும் ஆபத்து காலங்களில் உதவும் “காவல் உதவி” செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அமைச்சர் கோவி. செழியன் அறிவுறுத்தியுள்ளார். அவசர காலங்களில் செயலியில் சிவப்பு நிற “அவசரம்” என்ற பொத்தானை அழுத்தி, பெண்கள் உதவி பெறலாம். பயனர் விவரம், இருப்பிடம் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெறப்பட்டு உடனே சேவை தரப்படும். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

News December 27, 2024

கரும்பு கொள்முதல் விலையை ₹5000ஆக உயர்த்துக

image

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என ராமதாஸ் குரல் எழுப்பியுள்ளார். பஞ்சாப்பில் ஒரு டன் கரும்பு விலை ₹4,100 வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ₹3150 மட்டுமே வழங்கப்படுகிறது. இப்படியெல்லாம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதுதான் திராவிட மாடலின் சாதனையா? என விமர்சித்த அவர், ஒரு டன் கரும்புக்கு ₹5000 கொள்முதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News December 27, 2024

மன்மோகன் சிங் வாழ்க்கையை மாற்றிய அந்த Call..

image

UGC தலைவராக இருந்த போது மன்மோகன் சிங்கிற்கு வந்த ஒரு அழைப்புதான், அவரை அரசியலுக்கு வரவழைத்தது. 1991ல் சோவியத் ஒன்றியம் உடைந்து உலகமே திக்குமுக்காடிப் போயிருந்தது. இந்திய பொருளாதாரம் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து இருந்தது. அப்போது நெதர்லாந்தில் இருந்த மன்மோகனுக்கு, பிரதமர் நரசிம்ம ராவ்வின் செயலாளர் போன் செய்து, நிதி அமைச்சராக தேர்வு செய்துள்ளதாக கூறினார். அன்று முதல் அவர் அரசியல்வாதி ஆனார்.

News December 27, 2024

UPI பயனாளர்களுக்கு குட் நியூஸ்

image

UPI பயனாளர்களுக்கு RBI நற்செய்தியை அறிவித்துள்ளது. இனி 3ஆம் தரப்பு ஆப்கள் மூலமும், PPI வாலட்களுக்கு பணம் செலுத்தலாம். அதாவது, Phonepe, Paytm வாலட்களுக்கு பணத்தை மாற்றவோ, பெறவோ விரும்பினால், அதற்கு அந்த Appஐ தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. வேறு எந்த UPI ஆப்கள் மூலமாகவும் இதை செய்யலாம். முன்னதாக, வங்கியின் ஆப்கள், வங்கியுடன் இணைக்கப்பட்ட ஆப்கள் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும்.

News December 27, 2024

ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரா?

image

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டன் ரோஹித்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஃபார்ம் இல்லாமல் அவர் ஆஸி.க்கு எதிரான BGT தொடரில் திணறி வருகிறார். 2வது டெஸ்ட்டில் 9, 3வது டெஸ்ட்டில் 10, 4th Test முதல் இன்னிங்சில் 3 ரன்களில் ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், ரோஹித் கேப்டன் பதவியை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது ஓய்வுபெற வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

News December 27, 2024

‘ஜெயிலர் 2’ல் KGF நாயகி?

image

‘ஜெயிலர் 2’ படத்தில் KGF நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோக, முதல் பாகத்தில் நடித்த மிர்ணாவும், தமன்னாவும் 2ஆம் பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு ஜன.1ஆம் தேதி படம் குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மார்ச் மாதம் ஷூட்டிங்கைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

News December 27, 2024

மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு சர்ச்சை

image

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடர்பாக காங்., – மத்திய அரசுக்கு இடையே மோதல் என தெரிகிறது. அவரது நினைவிடத்திற்கு டெல்லியில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற காங்., கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை. INC உடன் கலந்தாலோசிக்காமல் நிகம்போத் காட்டில் உடல் தகனம் செய்யப்படும் என உள்துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், நினைவிடம் அமைப்பது, அவருக்கு அளிக்கும் அஞ்சலி என மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

News December 27, 2024

‘இந்திய நாட்டிய விழா’ ரத்து

image

மன்மோகன் மறைவையடுத்து, ‘இந்திய நாட்டிய விழா’ ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக TN சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று முதல் ஜனவரி 1 வரை மாமல்லபுரத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. ஜனவரி 2ஆம் தேதி முதல் வழக்கம்போல நிகழ்ச்சிகள் நடைபெறும்” எனக் கூறப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் இந்திய நாட்டிய விழா (டிச.22 – ஜன.20) திட்டமிடப்பட்டிருந்தது.

error: Content is protected !!