news

News January 22, 2025

இதை மட்டும் செய்யவே மாட்டேன்: ARR

image

போதை, கெட்ட பண்புகளை ஊக்கப்படுத்தும் வரிகளை தனது பாடலில் இருக்க விட மாட்டேன் என ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை பாடல் வரிகள் என்பது பிரார்த்தனை, நினைவுகளை போன்றது எனவும், மக்களின் மனதையும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் தீர்மானிப்பதில் பாடல் வரிகளுக்கு பங்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், தரமற்ற வரிகளை எப்போதும் அனுமதிக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

கோர்ட்டில் மோதிக்கொண்ட CBI-யும், மே.வங்க அரசும்

image

கொல்கத்தா மருத்துவ மாணவி கொலை விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க, மே.வங்க அரசு HCஇல் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் ஆஜரான CBI வக்கீல் ராஜ்தீப், மாநில அரசுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி இல்லை என்றார். அதற்கு HC, மாநில அரசின் முறையீட்டை ஏற்பதற்கு முன், CBI, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், குற்றவாளியிடம் இது குறித்து விசாரிப்பதாகக் கூறி வழக்கை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

News January 22, 2025

சுக்கிரன் பெயர்ச்சி: செல்வம் செழிக்கப் போகும் 5 ராசிகள்

image

சுக்கிரன், வரும் ஜன.28-ல், மீன ராசிக்கு பெயர்வதால் உச்சம் பெறும் ராசிகள்: *ரிஷபம்: பொன், பொருள் சேர்க்கை உண்டு, உறவு பலப்படும். *மிதுனம்: வேலை, தொழிலில் முன்னேற்றம். வெளியூர் செல்லும் வாய்ப்பு *கடகம்: ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும், நீண்டநாள் கனவு நனவாகும். சிம்மம்: தொழிலில் முன்னேற்றம். சொத்து வாங்குவீர். *தனுசு: வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். வீடு, மனை வாங்கலாம். குடும்ப வாழ்க்கை சிறக்கும்.

News January 22, 2025

என்ன.. அது டிரம்ப் மனைவி இல்லையா?

image

டிரம்ப் பதவியேற்பு விழாவில், அவரது மனைவி மெலனியா, பெரிய தொப்பி அணிந்து கலந்து கொண்டார். இது தற்போது சோஷியல் மீடியாவில் பேசுபொருளாகியுள்ளது. அது மெலனியா போன்று இருக்கும் Body Double என்றும், தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை கொல்ல முயற்சி நடந்ததால், டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். ஆனால், இது மெலனியாவின் பேஷன் விருப்பம் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News January 22, 2025

ஷமிக்கு இடமில்லை.. SKY சொன்ன பதில்

image

2023 உலகக்கோப்பைக்கு பிறகு முகமது ஷமி தற்போதுதான் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20யில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் Playing 11ல் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், Playing 11 குறித்து பேசிய கேப்டன் சூர்யகுமார், தங்கள் பலத்தை கடைபிடிக்கவே விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: எப்போது கிடைக்கும்?

image

8-வது ஊதிய கமிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால், ஊதிய உயர்வு கிடைப்பது உறுதியாகிவிட்டது. கமிஷன் பரிந்துரைக்கு பின், குறைந்தபட்ச மாத ஊதியம், ரூ.18,000-லிருந்து 51,480 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7-வது ஊதிய குழுவின் காலம் ஜன.1, 2026-ல் முடிவடைவதால், புதிய ஊதியம் 2026 பிப்ரவரியில் இருந்து கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2026 ஜனவரி மாத ஊதியம், உயர்த்தபட்ட ஊதியமாக இருக்கும்.

News January 22, 2025

பாஜகவிற்கு பாதிப்பு என்றால் EPSக்கு துடிக்கும்: அமைச்சர்

image

மத்திய பாஜக அரசிற்கு ஒரு பாதிப்பு என்றால், ஓடிவந்து குறுக்கே விழுந்து அதை மடைமாற்றம் செய்வதே இபிஎஸ் கடமை என்று தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். MGNREGS நிதியை விடுவிக்க வேண்டும் என பொங்கலுக்கு முன்பே கடிதம் எழுதப்பட்டது. இதை ஆதரித்து தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்திருக்க வேண்டிய இபிஎஸ், தனது இயலாமையை மறைக்க அவதூறு பரப்புவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

News January 22, 2025

வைரலான இளம்பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு!

image

உ.பி. கும்பமேளாவில் பாசி, மணி மாலை விற்ற பெண்ணுக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கொடுப்பதாக பிரபல இயக்குனர் சனோஜ் மிஸ்ரா அறிவித்துள்ளார். மோனலிசா போஸ்லே என்ற அப்பெண்ணை யூடியூபர்களும், ஊடகங்களும் சுற்றி சுற்றி புகைப்படம் எடுப்பதும், பேட்டி எடுப்பதுமாக இருந்தன. இந்நிலையில், தான் இயக்க உள்ள டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் நடிக்க போஸ்லே பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை அணுக உள்ளதாக சனோஜ் கூறியுள்ளார்.

News January 22, 2025

ஜீரணத்திற்காக சோடா குடிப்பவரா நீங்கள்?

image

சுத்தமான தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடை சேர்த்து தான் சோடா தயார் செய்யப்படுகிறது. குடித்தவுடன் உள்ளே சென்ற இந்த கார்பன் டை ஆக்சைட் உடனே வெளிவருவதால் தான் ஏப்பம் வருகிறது. அதே நேரத்தில், நாம் சாப்பிடும் போது, கொஞ்சம் காற்றும் உள்ளே செல்கிறது. இந்த கார்பன் டை ஆக்சைடுடன் அந்த காற்றும் சேர்ந்து வெளிவருவதால் வயிறு ஃபிரியானது போல தோன்றுகிறது. அது ஒரு ஃபீல் மட்டுமே தவிர, சாப்பாடு ஜீரணம் ஆகாது.

News January 22, 2025

அச்சுறுத்தும் அரிய நோய் தாக்குதல்.. 22 பேர் பாதிப்பு

image

புனேவில் Guillain-Barre சிண்ட்ரோம் பாதிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இதுவரை 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் 12-30 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். மாதிரிகள் ICMR-NIVக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நரம்பியல் நோய் பொதுவாக வைரஸ்/பாக்டீரியா தொற்று, தடுப்பூசி போடுவதால் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அசுத்தமான நீர்/உணவு காரணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!