news

News January 23, 2025

வேங்கைவயல் விவகாரம் சிபிஐ-க்கு மாற்றப்படுமா?

image

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. சிபிசிஐடி விசாரிக்கும் இந்த வழக்கில், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாததால், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பரவலாக கோரிக்கை எழத்தொடங்கியது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்திருந்தன.

News January 23, 2025

அரசிடம் சான்றிதழ் பெற்றுவிட்டு பேசுங்கள்: CONG

image

கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறியுள்ளது, அவரது அறியாமையை காட்டுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். காமகோடியும், பாஜக தலைவர்களும் சிறுநீர், மனிதர்கள் பயன்படுத்த உகந்தது என்று அரசிடம் சான்றிதழ் பெறுவார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தேவையில்லாத விவாதங்களை பாஜகவினர் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News January 23, 2025

இன்றைய பொன்மொழிகள்

image

▶கூட்டத்தில் நிற்பது எளிதானது. ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும். ▶பலவீனமானவர்களால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. மன்னித்தல் என்பது வலிமையானவர்களின் பண்பாகும். ▶நோயைக் காட்டிலும் நோயைப் பற்றிய பயமே அதிகமான மனிதர்களை கொன்று உள்ளது. ▶மனிதர்களாகிய நமது மிகப்பெரிய திறமை இந்த உலகை மாற்றுவது அல்ல, மாறாக நம்மை நாமே மாற்றிக் கொள்வது.

News January 23, 2025

பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளும் ஃபெயில்: ராகுல்

image

மோடி ஆட்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்து விட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மக்கள் சிந்தும் வியர்வையால்தான் இந்திய பொருளாதாரமே ஓடிக் கொண்டிருக்கிறது, ஆனால் அதற்கான எந்த பலனையும் அவர்கள் அடையவில்லை என்றும் குறை கூறியுள்ளார். மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே பாஜக ஆட்சியில் பலன் அடைந்திருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

News January 23, 2025

சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை கோரி சிபிஐ மனு

image

பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில், சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது. சிபிஐ விசாரித்த இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்றும் என அம்மாநில முதல்வர் கோரியிருந்த நிலையில், தற்போது சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பொறையுடைமை
▶குறள் எண்: 157
▶குறள்:
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
▶பொருள்: தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

News January 23, 2025

சைனிக் பள்ளி சேர்க்கைக்கு இன்றே கடைசி நாள்

image

மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் 6, 9ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. ராணுவப் பணியில் சேர மாணவர்களை தயார்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இப்பள்ளி TNல் திருப்பூரில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். https://exams.nta.ac.in/AISSEE என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News January 23, 2025

AUS ஓபன்: அரையிறுதிக்கு முன்னேறிய இகா ஸ்வியாடெக்

image

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) – அமெரிக்காவின் எம்மா நவரோ உடன் மோதினார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இகா ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எம்மா நவரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

News January 23, 2025

ஜகபர் அலி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

image

சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜகபர் அலி, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் குவாரி உரிமையாளர் ராசு, அவரது மகன் தினேஷ்குமார், முருகானந்தம், காசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

News January 23, 2025

இன்றைய (ஜன. 23) நல்ல நேரம்

image

▶ஜனவரி – 23 ▶தை – 10 ▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM
▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:00 PM ▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM- 10:30 AM
▶திதி: நவமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
▶சந்திராஷ்டமம்: அசுவினி
▶நட்சத்திரம்: சுவாதி அ.கா 2.14

error: Content is protected !!