India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் ஆளுநர் RN.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆய்வு செய்தார். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கங்களை பெற்ற அவர், மாணவர்களிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
9 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில்தான் உணர்ச்சிமிக்க பயணத்தை தொடங்கியது Way2News. இன்று லட்சக்கணக்கான மக்கள், சினிமா & அரசியல் பிரபலங்கள் Way2Newsஐ பயன்படுத்துகின்றனர். மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் எங்களது குரல் ஒலிப்பதையறிந்து பெருமை கொள்கிறோம். இன்னும் செல்ல வேண்டிய வெகுதூர பயணத்தில் நீங்களும் எங்களது கரம்பிடித்து நடப்பீர்கள் என நம்புகிறோம். இந்த மாபெரும் வெற்றியை தந்த உங்களுக்கு நன்றி.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை. மாணவியின் FIR வெளியானதால் ₹25 லட்சம் இழப்பீடு வழங்க, TN அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மாண்பைப் பாதுகாக்கும் வகையில் FIR எழுதப்பட வேண்டும் என அறிவுறுத்திய ஐகோர்ட், மாணவியிடம் எந்த வகையான கல்விக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது எனவும், அவர் தொடர்ந்து படிக்கத் தேவையான அனைத்து வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டுள்ள நிகம்போத் காட் (Nigambodh Ghat) குறித்து இணையத்தில் தேடல் அதிகரித்துள்ளது. இது, தலைநகர் டெல்லி NCRஇல் உள்ள 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான தகன மேடை ஆகும். யமுனை ஆற்றின் கரையோரத்தில் உள்ள இங்கு சமய சடங்குகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், பாரத நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முப்படை மரியாதையுடன் அங்கு தகனம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள நிகம்போத் காட்டில், முப்படைகளின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக நடந்த இறுதிச் சடங்கில், ஜனாதிபதி திரெளபதி முர்மு, PM மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், மன்மோகன் சிங் குடும்பத்தினர், பூடான் மன்னர் உள்ளிட்ட பலர், மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் ‣ ஆஸி. மண்ணில் இளம் வயதில் (21 வயது 214 தினம்) சதம் விளாசிய 3வது வீரர் ‣ ஆஸ்திரேலியாவில் 8வது வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் இந்திய வீரர் ‣ 8வது வரிசையில் மெல்போர்ன் மைதானத்தில் சதமடித்த சர்வதேச முதல் வீரர் என்ற சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 358/9 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஆஸி. அணியை விட 116 ரன்கள் இந்தியா பின்தங்கி இருக்கிறது. நிதிஷ் ரெட்டியின் சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதங்களுடன் இந்தியா சரிவில் இருந்து மீண்டும் இருக்கிறது. தற்போது களத்தில் நிதிஷ் குமார் 105 (176), சிராஜ் 2 (7) ரன்களுடன் உள்ளனர். 2வது இன்னிங்சில் ஆஸி. அணியை கட்டுப்படுத்தி, இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்குமா?
மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் அவரது உடலைக் கொண்டுச் சென்ற ராணுவ வாகனத்தின் மீது கவலை தோய்ந்த முகத்தோடு ராகுல் காந்தி அமர்ந்து சென்றது, மன்மோகன் சிங்குடனான அவரது பந்தத்தை எடுத்துரைக்கிறது. தனது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் வாடியுள்ளார். அதன் வெளிப்பாடே, தனக்கான நல்ல வழிகாட்டியை இழந்துவிட்டேன் என்று தனது முதல் இரங்கலை எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
அல்லு அர்ஜுனின் ஈகோவால் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமும் தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தயாரிப்பாளரும், இயக்குநருமான தம்மரெட்டி பரத்வாஜ் சாடியுள்ளார். இது குறித்து பேசிய அவர், சினிமா ஹீரோக்களை ரசிகர்கள் கடவுளாகக் கொண்டாடும் போக்கு அதிகரித்துள்ளதாகக் கூறினார். ஹீரோக்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.
‘ராமாயணம்’ படத்தில் நடிக்க யாஷ் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படத்தால் இந்திய அளவில் பிரபலமான யாஷ், ராக்கி பாய் கதாபாத்திரம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், ரன்வீர் கபூர் ராமராக நடிக்கும் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.