India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 <<15005578>>பொங்கல் <<>>பண்டிகையின்போது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கமாக ரூ.1,000 வழங்கப்பட்டது. அதேபோல், 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காகவும் ரூ.1,000 அளிக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் அரசு வெளியிட்ட அறிவிப்பில் ரூ.1,000 குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. இதனால் ரூ.1,000 ரொக்கத்தை எதிர்பார்த்திருந்த மக்கள் ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலும் உள்ளனர்.
மன்மோகன் சிங் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னாள் பிரதமர்களின் உடல்கள் அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் தகனம் செய்யப்படும் எனவும், ஆனால், மன்மோகன் சிங்கிற்கு அரசு அதை மறுத்துள்ளதாகவும் சாடியுள்ளார். ஆனால், ராகுல் கீழ்த்தரமான அரசியல் செய்வதாகவும், நினைவிடம் அமைக்கும் வரையில் தகனம் செய்யாமல் இருக்க முடியாது எனவும் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
நைஜீரியாவின் சிமிலி பகுதியில் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் வான் வழித்தாக்குதல் நடத்தி, சரமாரியாக குண்டுகளை அந்நாட்டு ராணுவம் வீசியது. ஆனால், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் கிளர்ச்சியாளர்கள் யாருமே இல்லை. ராணுவத்தின் இந்த தவறுதலான தாக்குதலில் அப்பாவி மக்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு பொங்கல் பரிசுத் தாெகுப்பாக அரசு அறிவித்துள்ளது. அனைத்து ரேசன் கடைகளிலும் இதனை பெறலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா ராணுவம் நேற்று ஒரே நாளில் 450 உக்ரைன் வீரர்களை கொன்றதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் படைகள் நடத்திய 12 தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாகவும், உக்ரைனுக்குச் சொந்தமான 2 பீரங்கிகள், 3 தரைப்படை தாக்குதல் வாகனங்களை அழித்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் போர், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
AUSக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டின் இன்றைய ஆட்டத்தில் 176 பந்துகளை எதிர்கொண்டு நிதிஷ்குமார் 105 ரன்களை எடுத்தார். அதேபோல், வாஷிங்டன் சுந்தர் 162 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்களை எடுத்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 147 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஜோடி இடம்பிடித்துள்ளது. அதாவது, 8 மற்றும் 9ஆவது Positionல் விளையாடும் பேட்ஸ்மேன்கள், தலா 150 பந்துகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
சவுக்கால் அண்ணாமலை தன்னைத் தானே அடித்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் அவரை விமர்சனம் செய்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். முன்னாள் பாஜக நிர்வாகியும், மூத்த நடிகருமான எஸ்.வி. சேகர், அரசியல் தெரியாத கோமாளி என்று அவரை விமர்சித்துள்ளார். மேலும், அண்ணாமலையை மாநில பாஜக தலைவராக தேர்வு செய்தோர் தங்களை தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார்.
சின்னத்திரை நடிகைகளும் வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெறலாம் என பலருக்கும் முன்னுதாரணமாக இருப்பவர். செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே ட்ரெண்டானவர், ரெக்கை இருந்தா தேவதை டா என வெள்ளித்திரையில் தோன்றி இளைஞர்களை கட்டிப்போட்டார். தமிழ் பேச தெரிந்த நடிகைகள் தமிழில் ஜொலிக்க மாட்டார்கள் என்பதை உடைத்தவர்களில் இவரும் ஒருவர். தெலுங்கிலும் கணிசமான வெற்றியை பெற்ற இவர் யார்?
BSNL நிறுவனம் தனது 18,000 முதல் 19,000 பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS) வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த VRS திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் அந்நிறுவனம் ₹1,500 கோடியை கோரியுள்ளது. தற்போது ஆண்டுக்கு ₹7,500 கோடியை (மொத்த வருவாயில் 38%) ஊழியர்களின் சம்பளத்திற்காக அந்நிறுவனம் செலவிட்டு வருகிறது. இதை ₹5,000 கோடியாகக் குறைக்க, VRS திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜூன், ஜூலையில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை ஏராளமான மாணவர்கள், தனித்தேர்வர்கள் எழுதியிருந்தனர். அவர்களுக்கு 30ஆம் தேதி முதல் மதிப்பெண், பட்டய சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஆதலால் பயிற்சி மாணவர்கள் தங்கள் பயின்ற நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி, பயிற்சி நிறுவனத்திலும் சான்றிதழ்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.