news

News January 23, 2025

ஒரு போன் எப்போது Expiry ஆகும் தெரியுமா?

image

செல்போனுக்கும் Expiry date இருக்கிறது. ஆனால் அதை நிறுவனங்கள் நேரடியாக சொல்வதில்லை. போனின் செக்யூரிட்டி அப்டேட் எப்போது நிற்கிறதோ அதுவே போனின் Expiry தேதியாகும். இவை phone boxல் இருக்கும். அல்லது settings, about, செக்யூரிட்டி அப்டேட் பார்த்து அறியலாம். இது போன் கம்பெனியை பொருத்து மாறும். சில கம்பெனிகள் ஓரிரு வருடங்களும், ஐபோன்கள் 7 வருடங்கள் வரையும் அளிக்கிறது. உங்க போனின் Expiry date பாருங்க!

News January 23, 2025

ஈரோடு தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

image

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 209 முதியோர் மற்றும் 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்தவுள்ளனர். ஜனவரி 27ஆம் தேதி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பிப்ரவரி 5ஆம் தேதி வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டு பிப்ரவரி 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

News January 23, 2025

ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் கவனத்திற்கு

image

தொழில்முனைவோருக்கான ChatGPT டிரைனிங் வரும் 25ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. TN அரசு நடத்தும் இந்த பயிற்சியில், சிறு, குறு வணிகர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ChatGPTயை பயன்படுத்தி தங்களது தொழிலை எப்படி வளர்ப்பது என்பது குறித்து விரிவான பயிற்சி வழங்கப்படவுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு <>www.editn.in<<>> (அ) 9080609808, 9841693060 எண்களை தொடர்பு கொள்ளுங்கள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க.

News January 23, 2025

‘ஜெயிலர் 2’ இசை உரிமமே ₹25 கோடிக்கு விற்பனையாம்!

image

நெல்சன் – ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் “ஜெயிலர் 2” திரைப்படத்தின் இசை உரிமம் ₹25 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டில் இசை உரிமம் இவ்வளவு தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல்முறை எனத் தெரிகிறது. இப்படத்திற்காக அனிருத்துக்கு சம்பளம் ₹18 கோடி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

News January 23, 2025

கஞ்சா விற்றவர்களை தட்டிக்கேட்டவர் கொலை

image

கஞ்சா விற்றவர்களை தட்டிக் கேட்ட பாமக தொண்டன் தமிழரசன் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியிருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூரில் இக்கொலை நடைபெற்றிருக்கிறது. முன்னதாக, புதுக்கோட்டையில் கனிம வள கொள்ளையை தடுக்க முயன்ற ஜகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்டதாக புகார் பதிவாகியிருக்கிறது.

News January 23, 2025

இந்த வார தியேட்டர் ரிலீஸ்

image

இந்த வாரம் திரையரங்குகளில் 6 தமிழ் படங்கள் வெளியாக உள்ளன. மணிகண்டன் நடிப்பில் ’குடும்பஸ்தன்’, குரு சோமசுந்தரம் நடிப்பில் ‘பாட்டல் ராதா’ படங்கள் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகின்றன. லாஸ்லியா, ஹரிபாஸ்கர் நடித்துள்ள ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’, செந்தில், யோகி பாபு நடித்துள்ள ‘குழந்தைகள் முன்னேற்ற கழகம்’, கதிர் நடித்துள்ள ‘பூர்வீகம்’, சுந்தர் C நடித்துள்ள ‘வல்லான்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன.

News January 23, 2025

பெண்களுக்கு எதிரான வழக்குகளில் கடும் தண்டனை

image

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த 10ஆம் தேதி பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்கள் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் பெண்களை பின் தொடர்ந்தால் 5 ஆண்டுகள் சிறை, வன்கொடுமை செய்தால் ஆயுள் முழுவதும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது.

News January 23, 2025

10 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சியில் ரோஹித்..

image

இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து இன்று அவர் விளையாடும் ரஞ்சி போட்டி தொடங்குகிறது. ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் ரோஹித் விளையாடுகிறார். இதே அணியில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரும் விளையாடுகிறார்கள். அதே போல, உத்தரகாண்ட் அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்கும் சவுராஷ்டிரா அணியில் ஜடேஜா விளையாடுகிறார்.

News January 23, 2025

விவாகரத்து அறிவித்த விஜய் பட நடிகை

image

விஜய்யின் ‘பைரவா’ மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை அபர்ணா வினோத், திருமணமான 2 ஆண்டுகளில் விவகாரத்து அறிவித்துள்ளார். தீவிர ஆலோசனைக்குப் பின்னர் ரனில் ராஜ் உடனான மண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 2023இல் காதல் திருமணம் செய்த அபர்ணா, ‘நடுவன்’ படம் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். திரைத்துறையில் பலரும் அடுத்தடுத்து டைவர்ஸ் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன?

News January 23, 2025

ராகுல் காந்தி உடல்நிலை பாதிப்பு

image

டெல்லி சர்தார் பஜார் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. அதற்கு பதிலாக அவர் அனுப்பிய செய்தி வாசிக்கப்பட்டது. அதில் ராகுல், கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் ராகுல் வரவில்லை என கூட்ட கடைசியில் தகவல் வெளியானது.

error: Content is protected !!