India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போதும், கடைகள் மற்றும் பேருந்துகளில் சில்லரை வாங்கும்போதும் சில நேரம் நமக்கே தெரியாமல் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் வந்துவிடுவதுண்டு. அந்த நோட்டுக்களை என்ன செய்வது, எப்படி மாற்றுவது என தெரியாமல் பலர் இருப்பர். ஆனால் இந்த கவலை தேவையில்லை எனவும், இந்தியாவில் உள்ள எந்த வங்கி கிளையிலும் அதை கொடுத்து வேறு புதிய நோட்டை வாங்கி கொள்ளலாம் என்றும் RBI தெரிவித்துள்ளது.
டெலிவரி ஆட்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில் தமிழக DGP 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அளித்துள்ளது. டெலிவரி ஆட்கள் போல் நடித்து குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதன் விசாரணையில் DGP மற்றும் ஸ்விக்கி, சொமேட்டோ நிறுவனங்கள் பதிலளிக்க கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
TNஇல் 2 ஆண்டுகளாக TET தேர்வு நடத்தப்படாததால் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜூலையில் டெட் தேர்வு நடத்தப்படும் என TRB அறிவித்தது. ஆனால், தற்போது வரை எவ்வித அப்டேட்டும் இல்லை. இதுஒருபுறம் இருக்க 2013இல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலருக்கும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது கவனிக்கத்தக்கது.
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் த்ரிஷா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிக்கும் அவர், சினிமாவில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குகையில் விஜய்யும் இதே முடிவையே எடுத்தார். அதேபோல் த்ரிஷாவும், சினிமாவில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுவதால் அரசியலுக்கு அவர் வருகிறாரா என கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வரவில்லையேல், அதிக வரி விதிக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே USA அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோதுதான், சீனா, ரஷ்யா தயாரிப்புகளுக்கு அதிக வரி விதித்தார். அதற்கு பதிலடியாக அந்நாடுகளும் அதிக வரி விதித்தன. இந்நிலையில் டிரம்ப், அதே தொணியில் பேசியிருப்பது மீண்டும் வர்த்தகப் போரை உருவாக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் PM மன்மோகன் சிங், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயர்கள் பாரத ரத்னா விருதுப் பட்டியலில் முதன்மையாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை இதுவரை 53 பெற்றுள்ளனர். ரத்தன் டாடாவுக்கு விருது வழங்கக்கோரி மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மாத இறுதி (அ) பிப். முதல் வாரத்தில் விருது பெறுபவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிமுக தெரிவித்துள்ளது. இத்தகவலை அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் S.P.வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். வரும் 31ஆம் தேதி EPS சுற்றுப்பயணத்தை கோவையில் இருந்து தொடங்கவுள்ளார். அடுத்தாண்டு தேர்தலை கணக்கில் கொண்டு பணிகளை தொடங்கியிருக்கிறது அதிமுக.
இன்றைய ரஞ்சி தொடரின் போட்டிகளில் தேசிய அணியில் விளையாடும் இந்திய வீரர்கள் களமிறங்கி சொதப்பி இருக்கிறார்கள். ரோஹித் 3 ரன், ஜெய்ஸ்வால் 4 ரன், ஷ்ரேயஸ் ஐயர் 11 ரன், துபே 0, ரஹானே 12 ரன்கள் என அவுட்டாகினார்கள். அதே போல, ரிஷப் பண்ட் 1 ரன்னிலும், சுப்மன் கில் 4 ரன்னிலும் அவுட்டாகி இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் உள்ளூர் போட்டியிலேயே இப்படி சொதப்புகிறார்களே என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
“அண்டப்புளுகனோடு இனியும் இருக்கப்போவதில்லை.. மானங்கெட்ட உன்னோடு இனியும் இருக்கப்போவதில்லை” என தலைநகர் வாசிகளை மொட்ட போஸ்டர்கள் தலைச்சுற்ற வைத்துள்ளது. பெயரிடப்படாத போஸ்டர் என்பதால், பிரபாகரன் போட்டோ விவகாரத்தில் சீமானை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை விமர்சித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும் மாறி மாறி கருத்து பதிவிட்டு வருகின்றனர். யாருக்குப்பா இந்த போஸ்டர்?
<<15224383>>ஏர்டெல்லை <<>>தொடர்ந்து ஜியோவும் வாய்ஸ், எஸ்எம்எஸ் மட்டும் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்காக புது திட்டத்தை வெளியிட்டுள்ளது. ரூ.458க்கு ரீசார்ஜ் செய்தால் 84 வேலிடிட்டி கிடைக்கும். இதில் அன்லிமிடெட் அழைப்பு, 1,000 எஸ்எம்எஸ் அளிக்கிறது. ஏற்கெனவே ரூ.479க்கு 6ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பு, 1,000 எஸ்எம்எஸ் அளித்தது. அதில் டேட்டாவை நீக்கிவிட்டு ரூ.21 குறைவில் புது திட்டத்தை வெளியிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.