India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி அளித்த பங்களிப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி அவர் பதிவிட்டுள்ளார். அதில், பராக்ரம தினமான இன்று நேதாஜிக்கு தனது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். அவரது தொலைநோக்கு பார்வை தங்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும், அவர் கண்ட இந்தியாவை உருவாக்க உழைத்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் செயல், சொல் கூட பாலியல் தொல்லைதான் என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. IT நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 3 பெண்கள், தனது மேல் அதிகாரிக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்த விசாகா கமிட்டி, அந்த நபருக்கு 2 ஆண்டுகள் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்தது. இதனை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கில் ஐகோர்ட் இந்த அதிரடி கருத்தை கூறியுள்ளது.
சயிஃப் பரிசுத் தொகையாக எவ்வளவு கொடுத்தார் என சொல்ல மாட்டேன் என அவரை உரிய நேரத்தில் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச்சென்ற ஆட்டோ டிரைவர் ராணா தெரிவித்துள்ளார். சமீபத்திய சந்திப்பின்போது சயிஃப் பணம் கொடுத்ததாகவும், ஆனால் தான் இதை வெளியில் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்து கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், எதையும் எதிர்பார்த்து இதை செய்யவில்லை என்றார்.
சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எழுதிய அரிய கடிதங்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. ‘நேதாஜியின் மையும் இந்தியாவிற்காக ரத்தம் சிந்தியது. இவை வெறும் கடிதங்கள் அல்ல, சுதந்திர இந்தியாவுக்கான அவரது கனவுகளின் தொலைநோக்கு சான்றுகள்’ என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது. இன்று சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளாகும்.
+2 மாணவர்களின் பெற்றோரை குறிவைத்து ஆன்லைனில் மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகக் கூறி, மாநிலம் முழுவதும் +2 மாணவர்களின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கிக்கணக்கு, OTP போன்றவற்றை கேட்டு பண மோசடி முயற்சிகள் நடக்கின்றன. எனவே, பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின் செல்போன் எண் மோசடியாளர்களுக்கு கிடைத்தது எப்படி?
காங்கிரஸை தொடர்ந்து, சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகிய கட்சிகளும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்தாண்டு கடைசி வரை மவுனம் காத்த DMK, இறுதியில் ஆளுநரின் கருத்தியல் சார்ந்த விஷயங்களில் கருத்துவேறுபாடு இருந்தாலும், அவரது பதவிக்கு மதிப்பளித்து விருந்தில் பங்கேற்பதாக கூறியது. இம்முறையும் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தாலும், DMK விருந்தில் பங்கேற்கும் என்றே கூறப்படுகிறது.
தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர்(ACP) தனது Apple airpod-ஐ திருடிவிட்டதாக பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனில் சவுக்கு சங்கர் புகார் கொடுத்துள்ளார். பெண் போலீஸ் குறித்த அவதூறு வழக்கில் கடந்த டிச.17இல் போலீசார் அவரை கைது செய்தபோது செல்போனில் இருந்து அனுமதியின்றி ஏராளமான தகவல்கள் திருடப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது போலீஸ் அதிகாரி மீது திருட்டு புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாதகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். நாதகவில் இருந்து வெளியேறிய 3,000 பேர் நாளை CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். சீமான் மீதான அதிருப்தியாலும், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததைக் கண்டித்தும் 38 மாவட்ட நிர்வாகிகள், 2021 சட்டமன்றத்தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட 3,000 பேர் திமுகவில் இணைகின்றனர்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சவுராஷ்டிரா ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, 5 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். 18 ஓவர்களை வீசி அவர், 66 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை எடுத்தார். டெல்லி அணி 188 ரன்களில் ஆல் அவுட்டானது. பல இந்திய நேஷனல் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ரஞ்சியில் சொதப்பி இருக்கும் நிலையில், ஜடேஜாவின் ஃபார்மை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
கட்டண விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க OLA, Uber நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறாரா என்பதை பொறுத்து, ஒரே சேவைக்கு 2 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை Uber மறுத்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.