India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா பல்கலை., மாணவிகளின் பாதுகாப்புக்காக 16 பேராசிரியர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பல்கலை., வளாகத்தில் கடந்த வாரம் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. பல்கலை., வளாகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து புதிதாக 40 செக்யூரிட்டி, 30 CCTV கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தது. இதில் 41.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. கடந்த 1923 டிச. 3ஆம் தேதி அதிகபட்சமாக 24 மணி நேரத்தில் 75.7 மி.மீ. மழை பெய்தது. இதையடுத்து, 101 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அதிக மழை பெய்திருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல் 1997க்கு பிறகு தற்பாேதுதான், டிசம்பரில் அதிகமாக 71.8 மி.மீ. மழை பெய்துள்ளது.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா, தான் மதம் மாறியதற்கான காரணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். முஸ்லிம் அப்பாவுக்கும், கிறிஸ்டியன் அம்மாவுக்கும் பிறந்து, முதல் 6 ஆண்டுகள் வேறு பெயரில் முஸ்லிமாக வளர்ந்ததாகவும், பின்னர் டைவர்ஸ் ஆனதால், அம்மா தன்னை கிறிஸ்டியனாக வளர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதன் பிறகே, ஞானஸ்தானம் பெற்று ரெஜினாவாக மாறியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கம் வழங்க முன்னாள் CM ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் பல குளறுபடிகள் நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2023, 2024இல் ரொக்க பணம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், 2025க்கான பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் அனைவருக்கும் ரூ.2,000 ரொக்கம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்த விவகாரம் குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் கோபத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறிய சீமான், அண்ணா பல்கலை. விவகாரத்தில் தனக்கும் பெருங்கோபம் இருப்பதாக தெரிவித்தார். அதற்காக தன்னை தானே சாட்டையால் அடிக்கக் கூடாது என்றும், குற்றவாளியை தான் சாட்டையால் அடிக்க வேண்டும் எனவும் கூறினார்.
பாலிடெக்னிக் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க, ஓராண்டு கால தொழில்பயிற்சி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக், அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் என 450க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக்குகள் உள்ளன. இங்கு பயிலும் மாணவர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
கடந்த 2014ல் மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டில், ‘தோனி’ தலைமையிலான இந்திய அணி டிரா ஆனது. அதோடு டெஸ்ட்டில் இருந்து ‘ஓய்வு’ பெறுவதாக தோனி அறிவித்தார். அதேபோல், தற்போது நடந்து வரும் பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி தடுமாறி வருகிறது. கேப்டன் ‘ரோகித்’ இந்த தொடரில், சொற்ப ரன்களில் அவுட் ஆகி கடுமையாக சொதப்பி வருகிறார். எனவே, 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த அதே ‘சம்பவம்’ ரிப்பீட் ஆகுமா..?
அண்ணா பல்கலை. பாலியல் சம்பவம் குறித்து சீமான் ஆவேசமாக பேசினார். அவர் கூறுகையில், “பெரிய பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவியை ஒருவரால் மட்டும் பாலியல் வன்கொடுமை செய்திருக்க முடியுமா? குற்றவாளி ஃப்ளைட் மோடில் செல்போனை வைத்திருந்ததாக கூறுகிறார்கள். அவர் என்ன ஃப்ளைட்டில் போகவா வந்தார்? பலாத்காரம் செய்யத்தானே வந்தார்? குற்றவாளி எதை சொன்னாலும் போலீஸ் நம்பிவிடுமா?” என சீமான் கேள்வியெழுப்பினார்.
ஒரே படத்தில் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் அட்லீ, தயாரிப்பில் இறங்கி பேபி ஜான் படத்தை தயாரித்தார். ஆனால், படம் பெரிய ஏமாற்றத்தை கொடுத்து விட்டது. ₹160 கோடி பட்ஜெட்டில் உருவான படம் வெளியான 4 நாள்களில் ₹23.90 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். இதே நிலையில் சென்றால், படம் ₹50 – ₹60 கோடி மட்டுமே வசூலிக்கும் என சினிமா ட்ராக்கர்ஸ் கூறுகிறார்கள். அட்லீயின் முதல் தோல்வி படமாக இது மாறுமோ?
நேர்முகத்தேர்வு இல்லாத ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணித்தேர்வு முடிவுகள் 2025 பிப்ரவரியில் வெளியிடப்படும் என TNPSC அறிவித்துள்ளது. உதவி பொறியாளர், வேளாண் அதிகாரி உள்ளிட்ட 652 காலியிடங்களை நிரப்ப, கடந்த OCT-ல் தேர்வு நடத்தப்பட்டது. 1 லட்சத்திற்கும் குறைவானவர்களே எழுதியதால், விரைவில் முடிவுகள் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்த்த நிலையில், 4 மாதங்கள் கழித்து முடிவுகள் வெளியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.