news

News January 24, 2025

ரோஹித் விக்கெட் எடுத்துட்டு என்ன கொண்டாடவில்லை?

image

ரோஹித்தின் விக்கெட்டை எடுத்த ஜம்மு காஷ்மீர் வீரர் உமர் நசீர், தான் அவரின் பெரிய ரசிகர் என்பதால் எந்த ஒரு விதமாகவும் கொண்டாடவில்லை என்றார். மேலும், நிச்சயமாக என் வாழ்நாளில் நான் எடுத்தது பெரிய விக்கெட் ரோஹித் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா 19 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

News January 24, 2025

‘முதல்வர் மருந்தகம்’ ₹1.5 லட்சம் மானியம்

image

முதல்வர் மருந்தகம் நடத்த தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு மானியமாக தலா ₹1.5 லட்சம் விடுவித்துள்ளதாக கூட்டுறவு சங்கம் கூறியுள்ளது. மக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக், பிற வகை மருந்துகள் கிடைக்க இந்த மருந்தகங்கள் 1,000 இடங்களில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக 1,128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக அரசு மானியமாக ₹1.5 லட்சம் விடுவித்துள்ளது.

News January 24, 2025

₹1,80,000 சம்பளத்தில் ONGCஇல் வேலைவாய்ப்பு

image

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 108 உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் BE, B.Tech படித்த 26 வயதுக்குட்பட்டோர் <>www.ongcindia.com<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ₹60,000 – ₹1,80,000 என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 24, 2025

கூடுதல் மண்ணெண்ணெய் கேட்கும் தமிழகம்

image

TNல் கேஸ் சிலிண்டர் இணைப்பு இல்லாத, ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இதற்காக TNக்கு மாதம் ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவு படிப்படியாக குறைக்கப்படுவதால், கார்டுதாரர்களுக்கு 1L கூட வழங்க முடியாமல் முதலில் வருவோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனால், TNக்கு கூடுதல் மண்ணெண்ணெய் வழங்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு வலியுறுத்தியுள்ளது.

News January 24, 2025

மனைவியை பிரிந்தார் சேவாக்

image

இந்திய அணி முன்னாள் வீரர் சேவாக், அவரது மனைவி ஆர்த்தி ஆலவத்தை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2004இல் 2 பேரும் திருமணம் செய்த நிலையில், 20 ஆண்டாக சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில், 2 பேர் இடையே பல மாதங்களாக கருத்து மோதல் நிலவியதாகவும், இன்ஸ்டாகிராமில் 2 பேரும் பின்தொடர்வதை தவிர்த்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News January 24, 2025

ஏன் அங்கப்பிரதட்சணம் வலது புறமாக செய்ய வேண்டும்?

image

கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் போது, எப்போதும் ஏன் வலமிருந்து இடமாக சுற்றிவருகிறார்கள் தெரியுமா? ஏனெனில் கடவுள் சிலைகளில் நேர்மறை ஆற்றல் வடக்கிலிருந்து தான் தெற்கு நோக்கிப் பாய்கிறது என்பது நம்பிக்கை. அதனை வைத்தே, அங்கப்பிரதட்சணம் மட்டுமின்றி எந்த ஒரு பிரதட்சணம் என்றாலும், வலது பக்கமாக தொடங்க வேண்டும் என்பார்கள். இடது பக்கமாக சுற்றி வந்தால் அது அப்பிரதட்சணம் ஆகும். SHARE IT.

News January 24, 2025

ஐசிசி விருதுகள்: இன்று முதல் அறிவிப்பு

image

2024-ம் ஆண்டிற்கான சிறந்த ODI, T20 அணிகளை ஐசிசி இன்று அறிவிக்கிறது. சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, T20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. இன்று முதல் 28ஆம் தேதி வரை ஒவ்வொரு பிரிவின் கீழும் விருதுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்திய வீரர் பும்ரா, சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 24, 2025

திருமண வரம் அருளும் திரைலோக்கிய கவுரி விரதம்

image

திருமண வரம் அருளும் திரைலோக்கிய கவுரி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கவுரி தேவியை பெண்கள் வழிபட்டால் அளவற்ற பலன்களைப் பெற முடியும். பெண்கள் கேட்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். வீட்டில் கவுரி பூஜை செய்து முடிந்ததும், அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்கள் கொடுத்து ஆசி பெறலாம். இது வீட்டில் செல்வ கடாட்சம் ஏற்பட அருள்புரியும் என நம்பப்படுகிறது.

News January 24, 2025

தவெக மா.செ கூட்டத்தில் விஜய் பங்கேற்பு?

image

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜய் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் நியமனம், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நிர்வாகிகள் நியமனத்துக்கு பணம் வாங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

News January 24, 2025

மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000… இன்றே கடைசி

image

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8ஆவது பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழித் தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தாண்டு தேசிய வருவாய் வழித் தேர்வு பிப். 22இல் நடைபெறவுள்ளது. இதற்கு இன்றைக்குள் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!