India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வீட்டில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் பெண் குழந்தை இருந்தால், அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. 2008ஆம் ஆண்டு முதல் ஜன.24 அன்று ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 918 பெண்களே உள்ளனர் என்ற சரிவை அறிந்தபோது தான் மத்திய அரசுக்கே இந்த பொறி தட்டியது. அதன் பின்னரே பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களும், சட்டங்களும் இயற்றப்பட்டன.
இபிஎஸ் உடன் பேசினாலே கூட்டணி அமைந்துவிடும், IT ரெய்டுக்கும் கூட்டணிக்கும் தொடர்பில்லை என <<15232192>>நயினார் நாகேந்திரன்<<>> பேசியுள்ளது மிரட்டும் தொணியில் உள்ளதாக கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதோடு, நயினாரின் இந்த பேச்சு, கூட்டணி கதவை அடைத்துள்ள அதிமுகவுக்கு விடுக்கப்பட்ட மறைமுக வார்னிங் எனக் கூறும் அரசியல் விமர்சகர்கள், வரும் நாட்களில் பல வழிகளில் அவர்களுக்கு நெருக்கடி வரலாம் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
பிப்.1இல் தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட் குறித்து புதுத் தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை இருப்போருக்கு பட்ஜெட்டில் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.15 லட்சம் வருமானம் ஈட்டுவோருக்கு 30% வரி, ரூ.15 லட்சம்-ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 25% வரி விதிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
TNஇல் நாளை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ரேஷன் அட்டை தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில், ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு/மாற்றம் உள்ளிட்ட சேவைகளும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரச் சான்றும் வழங்கப்படவுள்ளது.
<<15240769>>பொங்கலை<<>> ஒட்டி 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு அரசு பரிசுத் தொகுப்பு அறிவித்தது. 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய இத்தொகுப்பு ஜன.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்பட்டன. இதனை, 1.87 கோடி பேர் வாங்கிய நிலையில், வாங்காதவர்கள் நாளை வரை வாங்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை வாங்காதவர்களை போனில் தொடர்பு கொண்டு வாங்கிச்செல்லுமாறு ரேஷன் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் நாளை இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் T20 போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள், மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எந்த மெட்ரோ ஸ்டேஷனில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ ஸ்டேஷனுக்கு சுற்றுப்பயணம் (2 Entry, 2 Exit) மேற்கொள்ளலாம். அதே போல, ரயில் சேவை நேரமும் இரவு 12:00 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மொபைல்போன் வகைகளுக்கு ஏற்ப கேப்களின் கட்டணங்கள் மாறுவதாக புகார் எழுந்துள்ளன. ola, Uberல் புக் செய்யும்போது, ஆண்ட்ராய்டில் ஒரு கட்டணமும், Iphoneல் அதிக கட்டணமும் வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து, மொபைல் போன்களுக்கு ஏற்ப கட்டணம் மாறுமா என்பது குறித்து விளக்கமளிக்க, இந்நிறுவனங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
பொங்கலையொட்டி ரேஷன் கடைகளில் 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, முழு கரும்பு, வேட்டி, சேலையை அரசு வழங்குகிறது. இதற்கான கால அவகாசம், பொங்கலுக்கு முன்பு முடிந்தது. எனினும், வாங்காதோருக்காக பொங்கலுக்கு பிறகும் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு 2ஆவது முறையாக 25ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்திருந்தார். அதன்படி, நாளையுடன் அவகாசம் நிறைவடைகிறது. உடனே செல்லுங்க.
அசைவம் சாப்பிடுவது பலருக்கும் பிடித்தமானது. ஆனால், சில Blood Group உடையவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். Blood Group A இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் சென்சிட்டிவாக இருக்குமாம். மேலும், இறைச்சி சாப்பிட்டால், செரிமானமாவது கடினமானதாக இருக்கும் என்கிறார்கள். அதனால் அவர்கள் காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுடன் 6 போலீசார் நெருங்கிய தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளது. விசாரணையின்போது வலிப்பு வந்தது போல் நாடகமாடிய ஞானசேகரனை ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்பிலிருந்த அடையாறு போலீசார் 6 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன.
Sorry, no posts matched your criteria.