India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக மாநில புதிய தலைவர் வரும் 26ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலை பதவிக்காலம் நிறைவடைந்து விட்டதால், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த பதவிக்கு நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி இடையே போட்டி நிலவுவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், புதிய தலைவர் குறித்த அறிவிப்பை பாஜக மேலிடம் விரைவில் வெளியிடலாம் எனக் கூறப்படுகிறது.
துபாயிலிருந்து மங்களூரு வந்த 40 வயது நபருக்கு குரங்கம்மை(MPox) நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு காங்கோவில் பரவிய இந்த நோயால் சுமார் 500 பேர் உயிரிழந்தனர். பின்னர், மத்திய மற்றும் கிழக்கு ஆப்ரிக்கா நாடுகளுக்கும் வேகமாக பரவியது. கர்நாடகாவில் முதல் பாதிப்பு உறுதியான நிலையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சொறி, தொண்டை புண், உடலில் சிவப்பு புள்ளிகள் உள்ளிட்டவை MPox அறிகுறிகளாகும்.
இருக்கிற தொழிலை விட்டு அரசியலுக்கு வந்த நடிகர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளதாக அமைச்சர் பொன்முடி விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அப்போதெல்லாம் இருந்த நடிகர்கள் MGR போன்றவர்கள் எனவும், கொள்கை பிடிப்போடு கழகத்தில் இணைந்து செயலாற்றி வந்ததாகவும் கூறினார். அப்படி இல்லாதவர்கள் இன்றைக்கு திடீரென கட்சி தொடங்கி முதல்வராகிவிடலாம் என கனவு காண்பதாகவும், அவர்களின் கனவு தவிடு பொடியாகிவிடும் என்றும் சாடினார்.
எமிஸ் தளத்தில் தரவுகளை பதிவேற்றம் செய்ய செலவிடும் நேரத்தால் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தலில் கவனம் செலுத்த முடிவதில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களது சுமையை பள்ளிக்கல்வித் துறை குறைத்துள்ளது. பயிற்சி வருகை, கருத்து, விநாடி வினா தரவுகள், அடல் ஆய்வகம் தொகுதி நீக்கப்படுவதாகவும், 15 நாளுக்கு மேல் வராத மாணவர் தரவை மட்டும் பதிவேற்றினால் போதும் எனத் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் மனைவியை கொன்று உடல்பாகங்களை கணவர் வெட்டி குக்கரில் வேக வைத்த விவகாரத்தில் பல புதுத் தகவல் வெளியாகியுள்ளது. குருமூர்த்திக்கும், மனைவி மாதவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியின் தலையை சுவரில் மோதிய அவர், பிறகு பொறுமையாக காய்கறி வெட்டும் கத்திகளால் உடலை வெட்டி, குக்கரில் வேக வைத்துள்ளார். பிறகு எலும்புகளை மிக்சியில் அரைத்து ஏரியில் கரைத்ததாக போலீசில் ஒப்புக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அருண் பிரசாத்தும், சீசன் 7ல் வெற்றி பெற்ற அர்ச்சனா ரவிச்சந்திரனும் காதலித்து வருகிறார்கள். அண்மையில் அளித்த பேட்டியில் அருண், தங்கள் திருமணத்தை நடத்த வீட்டில் பேசி வருகிறார்கள் என்றும், இந்த வருடத்திற்குள் திருமணம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இருவரும் சின்னத்திரையில் முன்னணி நட்சத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7,525க்கும், 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 60,200க்கும் விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.30 உயர்ந்து ரூ.7,555ஆக விற்கப்படுகிறது. 1 சவரன் தங்கம் விலையும் ரூ.240 அதிகரித்து ரூ.60,440ஆக உச்சம் தாெட்டுள்ளது. 1 கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து, ரூ.105ஆகவும், 1 கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து, ரூ.1,05,000ஆகவும் விற்கப்படுகிறது.
பிறப்புரிமை குடியுரிமை தொடர்பான டிரம்பின் நிர்வாக ஆணையை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்காவின் சியாட்டில் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. வேலைக்காக அமெரிக்கா வந்தவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என கூறப்பட்டது. இதை எதிர்த்து 22 அமெரிக்கா மாகாணங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்நிலையில், இந்த உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது என நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
MBA, MCA படிப்புகளில் சேர்வதற்கான TANCET நுழைவுத் தேர்வுக்கு இன்று (ஜன.24) முதல் பிப்.21 வரை விண்ணப்பிக்கலாம். அத்துடன், முதுகலைப் பொறியியல் படிப்புகளான M.E., M.Tech., M.Arch படிப்புகளில் சேர்வதற்கான CEETA தேர்வுக்கும் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. கூறியுள்ளது. இத்தேர்வுகளுக்கு மாணவர்கள் <
நடிகை ஜான்வி கபூர் தான் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டிலாகி விட வேண்டும் என ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். தனக்கு 3 குழந்தைகள் வேண்டும் என்றும், அவர்களுடன் திருப்பதியில் நேரத்தை கழிக்க தான் விரும்புவதாக கூறினார். ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் ஜான்வி, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தனது காதலனுடன் திருப்பதிக்கு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.