India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கலையொட்டி காய்கறிகள் விலை அதிகரித்திருந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கிலோ ரூ.100 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம் விலை தற்போது கணிசமாக விலை குறைந்துள்ளது. ஈரோடு சந்தையில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.30ஆக சரிந்துள்ளது. இதேபோல், சென்னை கோயம்பேடு சந்தையிலும் 1 கிலோ சின்ன வெங்காயம் விலை ரூ.50ஆக குறைந்துள்ளது. உங்கள் ஊரில் சின்ன வெங்காயம் விலை என்ன? கீழே பதிவிடுங்கள்.
ஆட்சிக்கு வர வேண்டுமென தொடங்கப்பட்ட இயக்கமல்ல திமுக, மக்களுக்காக உழைக்க தொடங்கப்பட்டது என CM ஸ்டாலின் கூறியுள்ளார். கட்சி ஆரம்பித்த உடன் ஆட்சிக்கு வர வேண்டுமென சிலர் நினைப்பதாகவும், அநாதை நிலையில் சுற்றித் திரிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமென நினைப்பதாகவும் கடுமையாகவும் சாடியுள்ளார். நாட்டு மக்களுக்காக உழைப்பது போல் நாடகம் போடுபவர்கள் பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
‘தாதா’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னாள் கேப்டன் கங்குலியின் பயோபிக்கில் நாயகனாக ராஜ்குமார் ராவ் நடிப்பார் எனப்படுகிறது. இவர் அண்மையில் ஹிந்தியில் வெளியாகி பெரிய ஹிட்டடித்த ‘ஸ்த்ரீ 2’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த கிரிக்கெட் தருணம் படத்தின் இண்டர்வெல் சீனாக இருந்தால் சூப்பரா இருக்கும், நீங்க சொல்லுங்க.
தனக்கு ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்பதால், தன்னை நம்பி பணம் போட்டவர்களுக்காக 2 படங்களையும் முடிக்க வேண்டுமென அஜித் கூறியதாக இயக்குநர் மகிழ் திருமேனி பகிர்ந்துள்ளார். Raceக்கு செல்லும்போது தான் 100% ஆக்ஸிலேட்டரை அழுத்த வேண்டும் எனவும், தனக்கு கமிட்மெண்ட் இருக்கு என நினைத்து 90% மட்டும் அழுத்தினால், ரேஸிற்கு உண்மையாக இல்லை என்பதுபோல ஆகிவிடும் எனக் குறிப்பிட்டதாகவும் கூறி சிலிர்த்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் 3 ரன்னில் அவுட்டான ரோஹித் ஷர்மா, 2வது இன்னிங்சின் ஒரே ஓவரில் 6,4,4 என வரிசையாக அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக மும்பை அணிக்காக களமிறங்கி இருக்கும் அவர், தற்போது வரை 25 பந்தில் 3 சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் அடித்து 28 ரன்கள் விளாசி களத்தில் நிற்கிறார். ரசிகர்கள் Hitman is back என ட்ரெண்டாக்க தொடங்கிவிட்டார்கள்.
திமுக தலைவராக <<15242757>>கருணாநிதி <<>>இருந்தபோது தேமுதிக மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள் திமுகவில் கூட்டாக சேர்ந்தனர். மதிமுக முன்னணி தலைவர்கள், அதிமுக மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் திமுகவில் சேர்ந்த வரலாறு உண்டு. அதேபாணியில் ஸ்டாலின் முன்னிலையில் இன்று 3,000 பேர் திமுகவில் சேர்ந்துள்ளனர். இதை வைத்து, கருணாநிதி பாதைக்கு ஸ்டாலின் மாறிவிட்டாரா என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
<<15242183>>பாஜக<<>> மாநில தலைவரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக்காக ஜன. 31இல் அமித் ஷா சென்னை வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைவருக்கான பட்டியலில் அண்ணாமலை நீடித்தாலும், அதிமுகவுடனான மோதல் போக்கு காரணமாக அவர் மாற்றப்படலாம் என சொல்லப்படுகிறது. தமிழிசை, வானதி, நயினார் பெயர்களும் தலைவருக்கான பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலையில் நான் மாமிசம் சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என அண்ணாமலைக்கு, IUML MP நவாஸ் கனி சவால் விடுத்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் மாமிச உணவுக்கு போலீசார் விதித்த தடை சர்ச்சையான நிலையில், அங்கு ஆய்வு செய்த நவாஸ் கனியின் வீடியோவை பாஜகவினர் பகிர்ந்து வருகின்றனர். மத பிரச்னைகளை தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்பட்டதாக போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பு அளித்த இரவு பார்ட்டியில், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார் நீடா அம்பானி அந்த நிகழ்ச்சிக்கு அவர், நம் ஊர் பிரபலமான காஞ்சி பட்டு புடவையை அணிந்து சென்றுள்ளார். அதில் 2 தலைக்கழுகு, மயில், கோபுரங்கள் தங்க எம்பிராய்டரியில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த சேலையை உருவாக்குவதற்கு 1,900 மணிநேரங்கள் ஆனதாம். வெல்வெட் ஜாக்கெட் வைரத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தைச் சந்திப்பதால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால், இந்தாண்டின் இறுதியில் ஒரு கிராம் ₹10,000ஐ எட்டும், 1 சவரன் ரூ.80,000ஆக உயரும் என MJDTA பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியுள்ளார். 2025 ஜன.1ஆம் தேதி 57,200க்கு விற்பனையான நிலையில், 24 நாட்களில் சவரனுக்கு ரூ.3,240 <<15241985>>60,440<<>> உயர்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.