news

News December 31, 2024

பெண்கள் உள்ள வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தடை

image

ஆப்கானிஸ்தானில் பெண்கள் புழங்கும் வீடுகளில் ஜன்னல்கள் வைக்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர். பெண்கள் வீட்டின் சமையலறையில், முற்றத்தில் வேலை செய்வதை பார்ப்பது ஆபாசமான செயல்களுக்கு வழிவகுக்கும். அதனால், புதிதாக கட்டப்படும் வீடுகளின் முற்றம், சமையலறைகளில் ஜன்னல்கள் கட்டக்கூடாது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மேற்கூறிய இடங்களில் உள்ள ஜன்னல்களை சுவர் எழுப்பி மறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

News December 31, 2024

தினம் ஒரு பொன்மொழி!

image

▶இருளில் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாதவர்கள், ஒருபோதும் ஒளியைத் தேடிச்செல்ல மாட்டார்கள். ▶எளிமையே திறமைக்கான திறவுகோல். ▶தவறுகளை ஒப்புக்கொள்ளவும் அதனை திருத்திக்கொள்ளவும் நீங்கள் தயாராக இருந்தால் அவை எப்போதும் மன்னிக்கப்படக் கூடியவை தான். ▶தோல்விக்கு அஞ்சாதீர்கள்; தோல்வி என்பது குற்றமல்ல. ▶பெரும் இலக்கை நோக்கிய முயற்சிகள் தோல்வியுற்றாலும் கூட அவை போற்றத்தக்கவை.
– புரூஸ் லீ

News December 31, 2024

பூக்களின் விலை கடும் உயர்வு

image

கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை கோயம்பேட்டில் 1 கிலோ மல்லி ₹3,000, கனகாம்பரம் ₹800, ஜாதி மல்லி ₹750, ஐஸ் மல்லி ₹2,000, முல்லை ₹1,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மார்கழி மாதம் விசேஷ நாட்கள் என்பதாலும், புத்தாண்டு பிறப்பையொட்டியும் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

News December 31, 2024

பந்த் ஆட்டத்தை குறை சொல்ல முடியாது: ரோஹித்

image

மெல்போர்னில் தோல்வியடைந்தது குறித்து ரோஹித் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்தார். MCG மைதானத்தில் கடைசி இன்னிங்ஸை ஆடுவது எளிதல்ல எனவும், தோல்வி நிச்சயம் ஏமாற்றம்தான் என்றும் கூறினார். பந்த் அவுட் ஆனபோது தோல்வி தவிர்க்க முடியாதது என்பது தெரிந்ததாகவும், அவரது ஆட்டத்தில் தவறில்லை என்றும் கூறினார். இந்த தோல்வியை ஒதுக்கிவிட்டு சிட்னியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

News December 31, 2024

நாட்டிலேயே தமிழக பெண்களிடம் தான் அதிகம்!

image

TN பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாக உலக கோல்டு கவுன்சில் கூறியுள்ளது. இந்திய பெண்கள் 24,000 டன் தங்கம் வைத்துள்ளதாகவும், எந்த நாடும் வைத்திருக்கும் தங்கத்தை விட இது மிக அதிகமாகும் என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40% தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. குறிப்பாக TN பெண்களிடம் 6,720 டன் தங்கம் உள்ளதாகவும், இது இந்தியாவின் கையிருப்பில் 28% ஆகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

News December 31, 2024

எலான் மஸ்க் மீது ஜெர்மனி குற்றச்சாட்டு

image

ஜெர்மனியில் வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தனது அதிகாரத்தை காட்ட முயற்சி செய்வதாக ஜெர்மனி குற்றம் சாட்டியுள்ளது. தீவிர வலதுசாரிக் கட்சியான ஜெர்மனிக்கான மாற்றுக் கட்சியை அவர் வெளிப்படையாக ஆதரித்துள்ளதாகவும், இங்குள்ள அரசியலை எடைபோட்டு பார்ப்பதாகவும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. அங்கு ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு அண்மையில் கவிழ்ந்தது.

News December 31, 2024

அந்த சார் நாங்கள் அல்ல: அமைச்சர் ரகுபதி

image

யார் அந்த சார் என அதிமுக கேள்வி எழுப்பும் நிலையில், அந்த சார் நாங்கள் அல்ல என அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். யார் அந்த சார் என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும் என்றும், பத்திரிகை கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் நடத்துவதாகவும் சாடியுள்ளார். யார் அந்த சார்? என்ற போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ள அதிமுக, உண்மைக் குற்றவாளிகளை பிடிக்கும்வரை தொடர்ந்து போராட உள்ளதாகவும் கூறியுள்ளது.

News December 31, 2024

வருமான வரி கணக்குத் தாக்கல்: இன்றே கடைசி நாள்

image

2024-25 ஆண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு ₹1,000 முதல் ₹5,000 வரை அபராதத்துடன் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, அந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இன்றுக்குள் கணக்குத் தாக்கல் செய்யவில்லையெனில், 20% வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். SHARE IT.

News December 31, 2024

2024ல் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள்

image

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் எதிர்பார்த்த உச்ச நட்சத்திரங்களில் படங்கள் பின்னடைவை சந்தித்த நிலையில், சிறு பட்ஜெட் படங்கள் முத்திரை பதித்தன. கோட், அமரன், வேட்டையன், மகாராஜா, ராயன், இந்தியன் 2, கங்குவா, அரண்மனை 4, அயலான், கேப்டன் மில்லர், தங்கலான் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலை குவித்துள்ளன. இதில் இந்தியன் 2, கங்குவா படங்கள் நஷ்டத்தை தழுவிய போதிலும், பாக்ஸ் ஆஃபீஸ் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன.

News December 31, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: இல்லறவியல் ▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை ▶குறள் எண்: 134 ▶குறள்: மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். ▶பொருள்: கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

error: Content is protected !!